Browse audiobooks by Pa Raghavan, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"1989ம் ஆண்டின் உலகின் ஏழாவது பெரிய பணக்காரர் என்று ஃபோர்ப்ஸ் சுட்டிக்காட்டிய பெயர் பாப்லோ எஸ்கோபர். போதைத் தொழிலை ஒரு கார்ப்பரேட் ஆக்கமுடியும் என்று செய்து காண்பித்து, கொலம்பியா மட்டுமில்லாமல் உலகில் இயங்கும் பல்வேறு தீவிரவாதக் குழுக்களுக்கும் போதை மூலம் வருமானம் என்னும் ஆதிபாடத்தை போதித்தவன். பல போராளி இயக்கங்களுக்கு அவன் காட்ஃபாதராக இருந்திருக்கிறான். புரட்சிகளுக்குக் காசுதான் முக்கியம். குறையாத காசு. அது போதையில் கிடைக்கும் என்று முதல் முதலில் சுட்டிக்காட்டியவன் எஸ்கோபர். கொலம்பிய சரித்திரத்தில், அதன் ஆட்சியாளர்களைக் காட்டிலும் அங்கு நடந்த மாபெரும் உள்நாட்டு யுத்தத்தைக் காட்டிலும் அதிக பக்கங்களை ஆக்கிரமிக்கக்கூடியவன் எஸ்கோபர். செய்த காரியம் மட்டுமல்ல காரணம். வாழ்ந்த வாழ்க்கையும் கூட. எஸ்கோபரின் வாழ்வின் ஊடாக கொலம்பிய போதை மாஃபியா விஸ்வரூபமெடுத்த வரலாறு இது."
Pa Raghavan (Author), Deepika Arun (Narrator)
Audiobook
[Tamil] - Sadham Hussain Vazhvum Iraqin Maranamum
"'இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் இந்த வாழ்க்கை வரலாறு, ஒரு வகையில் நவீன இராக்கின் அரசியல் வரலாறும் ஆகும். 24 ஆண்டுகள் அந்தத் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானித்தவர் அவர். சதாம் என்கிற ஆளுமையின் முழுப் பரிமாணத்தையும் அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல். சதாமுக்குப் பிந்தைய இராக்கின் தொடரும் அவலங்களையும் அதற்கான காரணங்களையும்கூட.'"
Pa Raghavan (Author), Baskar S Ayer (Narrator)
Audiobook
[Tamil] - Aadhiyile Nagaramum Naanum Irundhom
"'சென்னை நகரத்தைக் குறித்து இதுவரை எழுதப்பட்ட அனைத்துப் புத்தகங்களிலிருந்தும் இந்நூல் முற்றிலும் வேறுபடுகிறது. ஏனெனில் இது அந்நகரத்தின் வரலாறு அல்ல. அந்நகரத்திலேயே பிறந்து வளர்ந்த ஒருவனின் கதையுமல்ல. ஊர் ஊராக, பேட்டை பேட்டையாக, தெருத்தெருவாக சுற்றிக் காண்பிக்கும் சுற்றுலாக் கையேடும் அல்ல. இது ஒரு தனி மனிதனின் ஆன்மா, ஒரு பெரு நகரத்தின் ஆன்மாவுடன் இரண்டறக் கலக்கும் பரவசக் கணத்தைப் படம்பிடிக்கிறது. 'சென்னையைத் தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்துகிறது' என்று பா. ராகவன் சொல்வதைச் சிறிது நுணுக்கமாகக் கவனித்தால் பிரமிப்புகளையும் வியப்புகளையும் தாண்டி, இந்நகரவாசம் ஒவ்வொரு தனி மனிதனையும் எவ்வாறு வடிவமைக்கிறது என்பதைக் காணலாம்.'"
Pa Raghavan (Author), Bavya Keerthivasan (Narrator)
Audiobook
"மூன்றாம் உலக யுத்தம் என்று ஒன்று வருமானால் நிச்சயம் அதற்குக் காரணம் பெட்ரோலாகத்தான் இருக்கும்! ஏன் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது பெட்ரோல்? யார் ஏற்றுகிறார்கள்? நாளுக்கு நாள் ஏறிக்குதிக்கும் விலை, ஊருக்கு ஒரு விலையாக இருப்பது ஏன்? பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் தேசங்களின் கூட்டமைப்பு என்ன செய்கிறது? எங்கு வருகிறார்கள் இடைத்தரகர்கள்? எப்படி இந்தத் துறையை ஆட்டிப்படைக்கிறார்கள்? பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் தேசங்களின்மீது அமெரிக்கா குறிவைப்பதன் அரசியல் பொருளாதாரப் பின்னணிகள் என்னென்ன? மத்தியக் கிழக்கு தேசங்கள் அனைத்தும் அமெரிக்காவின் காலனிகளாகிவிடுமா? மாற்று எரிபொருள் சாத்தியங்கள் என்னென்ன? பெட்ரோலை இன்னும் எத்தனை காலத்துக்கு நம்ப முடியும்? எண்ணெய்க்காக உலகம் அடித்துக்கொண்டு சாகும்போது நாம் தப்பிப் பிழைக்க என்ன வழி? குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்து பரபரப்பான வெற்றி கண்டது. நமக்கு மிக நெருக்கமாக நின்று அச்சுறுத்தும் ஒரு சர்வதேசப் பிரச்னையின் அனைத்துப் பரிமாணங்களையும் எளிதாகப் புரிந்துகொள்ளுங்கள்!"
Pa Raghavan (Author), V Vivekanand (Narrator)
Audiobook
"இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்திக்க நேர்ந்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல்-பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை. இன்றுவரை இது தீர்க்கப்பட முடியாமல் இழுத்துச் செல்வதன் காரணம் என்ன? பாலஸ்தீன் சுதந்தரத்துக்கான போராட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். வீடிழந்து, சொத்திழந்து, சொந்தங்களை இழந்து பல்லாண்டுகளாக அகதிகளாக இன்னமும் அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள், பாலஸ்தீன் அரேபியர்கள். வளமையும் செழுமையும் மிக்க மத்தியக்கிழக்கு தேசங்கள் எது ஒன்றுமே ஏன் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை? ஒதுங்க ஓர் இடம் இல்லாமல் உலகெங்கும் உயிருக்கு அஞ்சி ஓடியவர்கள் யூதர்கள். அப்படிப்பட்டவர்கள், தமக்கு வாழ இடமளித்த பாலஸ்தீன் அரேபியர்களை வஞ்சிக்க நினைத்தது எதனால்? ஐ.நா.வின் தீர்மானங்களெல்லாம் பாலஸ்தீன் விஷயத்தில் மட்டும் அற்பாயுளில் இறந்துவிடுவதன் காரணம் என்ன? இஸ்ரேல் யூதர்களுக்கும் பாலஸ்தீன் அரேபியர்களுக்கும் அப்படி என்னதான் பிரச்னை? 1948-ம் ஆண்டு இஸ்ரேல் என்கிற தேசம் வலுக்கட்டாயமாகப் பாலஸ்தீன் மண்ணில் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்துதான் இந்தப் பிரச்னை தீவிரமடையத் தொடங்கியது என்றாலும், பாலஸ்தீன் பிரச்னை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்துவரும் ஒன்று."
Pa Raghavan (Author), Balaji V (Narrator)
Audiobook
[Tamil] - Pak Oru Puthirin Saridham
"பாகிஸ்தான் அரசியலைக் குறித்துப் பேசும் தமிழின் முதல் நூல் இதுதான் காஷ்மீரில் நடப்பது சுதந்தரப் போராட்டம் என்று திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்துச் சொல்லிக்கொண்டிருப்பதன் மூலம், இரு தேசங்களுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துக்கொண்டே போவதுதான் பாகிஸ்தானின் நிரந்தர அரசியல். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அது இந்தியாவின் பிற மாநிலங்களைப் போன்ற ஒரு பிராந்தியமாகிவிட்டாலுமே பாகிஸ்தான் தனது நிலைபாட்டை இதில் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. ஏனெனில் காஷ்மீரை விலக்கிவிட்டு பாகிஸ்தானில் அரசியல் செய்யவே முடியாது. முகம்மது அலி ஜின்னா தொடங்கி பேனசிர் புட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி பதவிக்கு வந்த காலம் வரையிலான (2008) பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் குறித்த துல்லியமான அறிமுகம் இதில் கிடைக்கிறது. பாகிஸ்தானில் நிலைகொண்டு, காஷ்மீரில் தீவிரவாதம் வளர்க்கும் அனைத்து இயக்கங்கள் குறித்தும் ஆதாரபூர்வமான தகவல்கள், புள்ளி விவரங்கள், காஷ்மீர் பிரச்னை பற்றிய ஆழமான அலசல் அடங்கிய நூல் இது. பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாத பாகிஸ்தானின் இந்த அரசியல் வரலாறு, குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்தது. டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம், மாயவலை போன்ற பா. ராகவனின் பிற்கால அரசியல் வரலாற்று நூல்கள் அனைத்துக்கும் தொடக்கம் இதுவே."
Pa Raghavan (Author), M Arunachalam (Narrator)
Audiobook
[Tamil] - Prabhakaran Vaazhvum Maranamum
"'விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்து மூன்றாண்டுக் கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் இப்போது இல்லை. ஆயிரக் கணக்கான, முகமறியாத போராளிகளின் மரணத்தை 'மாவீரர் மரணம்' என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அநாதையாக சிங்கள ராணுவத்தால் எரித்துக் கடலில் கரைக்கப்பட்டுவிட்டாரே என்று தமிழ் உலகமே கண்ணீர் சிந்தியது. அவரது இறப்பு புலிகள் தரப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் அவர் இறக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கச் சிலர் இருந்தார்கள்; இன்னும் இருக்கிறார்கள். எப்படி இந்த மனிதர் இத்தனைக் கோடிப் பேரை பாதித்தார்? பிரபாகரன் என்னும் ஆளுமையை, அது உருவான விதத்தை, அதன் தாக்கத்தை, விளைவுகளைச் சற்றும் நடுநிலை பிசகாமல் அலசி ஆராய்கிறது இந்நூல். ஈழப் போராட்டத்தின் இறுதித் தோல்விகளுக்கான காரணங்களை, பிரபாகரன் என்னும் தனி மனிதரின் ஆளுமையை முன்வைத்துக் கண்டறியும் முயற்சி இது.'"
Pa Raghavan (Author), V Balasubramanian (Narrator)
Audiobook
"குமுதம் ரிப்போர்டரில் வெளியான அமெரிக்காவின் அரசியல் வரலாறு. யுத்தங்களை வருமானத்துக்குரியதொரு உபாயமாக நீண்டகாலமாக அமைத்துக்கொண்டு செயல்படும் தேசம் அமெரிக்கா. அதன் பளபளப்புக்குப் பின்னால் இருக்கும் குப்பைகளும் ஜனநாயகத்துக்குப் பின்னாலுள்ள சர்வாதிகாரமும் செழுமைக்குப் பின்னாலுள்ள கடன்சுமைகளும் மிக முக்கியமான விஷயங்கள். இந்நூல், அமெரிக்காவின் முழுமையான அரசியல் வரலாற்றை விவரிப்பதினூடாக அத்தேசத்தின் நிஜமுகத்தைக் காட்சிப்படுத்துகிறது."
Pa Raghavan (Author), JK (Narrator)
Audiobook
[Tamil] - Maoist Abaayangalum Pinnanigalum
"'நக்ஸல்பாரியில் தொடங்கிய ஒரு சிறு தீப்பொறி, தேசம் முழுவதும் பரவிப் படர்ந்த வரலாறை இந்நூல் கண்முன் நிறுத்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் என்று மாவோயிஸ்டுகளைத்தான் அரசு கருதுகிறது. அவர்களோ தேசத்தின் முதல் விரோதி அரசாங்கமே என்கிறார்கள். நமக்கு மிக அருகே உள்ள ஓர் அபாயத்தைப் பற்றி முழுதாக அறிந்துகொள்ளுங்கள்.'"
Pa Raghavan (Author), Sudharsan Lingam (Narrator)
Audiobook
"'இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை. நாம் சொற்களில் வாழ்கிறோம். இந்நாவலின் நாயகன் இசையில் வாழ்கிறான். நாம் சமூக விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குகிறோம். அவன் வாழ்க்கை பிரபஞ்ச விதி எதற்குள்ளும் பொருந்தாமல் புடைத்து நிற்கிறது. அதனாலேயே அது வண்ணங்களோ வாசனையோ இல்லாத ஒன்றாகிறது. காலத்தை வெல்வதற்கு அவனுக்குள்ள வேட்கையும் அவனைத் தோற்கடிக்க விதி மேற்கொள்ளும் வேட்டையும் முட்டி மோதும் கணங்களில் புவி நின்று சுழல்கிறது. அவன் நம்பும் கலையும் அவன் வாழும் உலகும் தயங்காமல் அவனைக் கைவிடும் போதும், அவன் தான் வாழும் உலகுக்குத் தன் இசையையும், தான் நம்பும் இசைக்குத் தன்னையும் ஆகுதியாக்கி அர்ப்பணிக்கிறான். ஒரு மகா கலைஞனின் வாழ்க்கை இவ்வாறாக அல்லாமல் வேறு எந்த விதமாகவும் உருக்கொள்ள முடியாது. பா. ராகவனின் 'இறவான்', மிக நுணுக்கமான, கூரான மொழியில் எழுதப்பட்டிருக்கும் தனித்துவமான நாவல். ஒரு கலைஞனின் ஆழ்மனக் கொந்தளிப்புகளை, அவனது புற உலகச் செயல்பாடுகளினூடாக, அது நிகழும் கணத்திலேயே காட்சிப்படுத்த இதில் கையாளப்பட்டிருக்கும் எழுத்து முறை தமிழுக்குப் புதிது.'"
Pa Raghavan (Author), Deepika Arun, Veera (Narrator)
Audiobook
"'தீவிரவாதம், நவீன யுகத்தின் புற்றுநோய். எப்படி இது தீவிரமடைகிறது? ஏன் தடுக்கவோ ஒழிக்கவோ முடிவதில்லை? அல் காயிதா முதல் ஐ.எஸ். வரை ஏராளமான இயக்கங்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் செல்வாக்குப் பெற்றது எப்படி? இவர்களுக்கு ஆள்களும் பணமும் கிடைக்கும் வழியென்ன? தீவிரவாத இயக்கங்களின் நெட் ஒர்க் எவ்வாறு செயல்படுகிறது? ஏன் எந்த அரசினாலும் இவர்களைத் தடுக்க முடிவதில்லை? பேரழிவுச் சம்பவங்களை எப்படித் திட்டமிடுகிறார்கள்? எப்படி அவற்றுக்காக உழைக்கிறார்கள்? தீவிரவாதச் செயல்களுக்கு மதம் எப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது? ஆறு ஆண்டுக்கால ஆராய்ச்சி. ஆதாரபூர்வமான தகவல்கள். உலகை அச்சுறுத்தும் அனைத்துத் தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் மிக விரிவான அறிமுகத்தைத் தருகிறது மாயவலை.'"
Pa Raghavan (Author), Sengamalanathan (Narrator)
Audiobook
[Tamil] - RSS -Varalaarum Arasiyalum
"'தேசமெங்கும் எத்தனையோ பல மதக்கலவரங்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வந்திருக்கிறது. அப்பழுக்கற்ற தேசியவாத இயக்கம் என்று அதன் ஆதரவாளர்களும், சந்தேகமில்லாமல் மதவாத இயக்கம் என்று எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார்கள். எது உண்மை? சுதந்தர இந்தியாவின் மிகப்பெரிய கலவர காண்டத்தை பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின் மூலம் தொடங்கிவைத்தது ஆர்.எஸ்.எஸ். மும்பை தொடங்கி கோத்ரா வரை நீண்ட அவலங்களின் சரித்திரம் அழியக்கூடியதல்ல. இயற்கைப் பேரழிவுச் சம்பவங்களானாலும் சரி. பங்களாதேஷ் யுத்தம், கார்கில் யுத்தம் போன்ற தருணங்களானாலும் சரி. நிவாரணப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்தாம் முதலில் களத்தில் நின்றிருக்கிறார்கள். எனில், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இரண்டு முகமா? இல்லை. இருபது முகங்கள் என்று எடுத்துக்காட்டுகிறது இந்நூல். வெளியான காலம் முதல் இன்றுவரை இந்துத்துவ ஆதரவாளர்கள் - எதிர்ப்பாளர்கள் என இரு தரப்பினராலும் கடுமையாக விமரிசிக்கப்பட்டு, தூற்றப்பட்டு வரும் ஒரே தமிழ்ப் பிரதி இதுதான். இதுவே இந்நூலின் நடுநிலைமைக்குச் சான்று.'"
Pa Raghavan (Author), Kalyanaraman G (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer
Join our community for the latest bookish news, reading recommendations, exclusive opening extracts, author events and competitions. It\'s all free. And enter a monthly draw to win a £50 Gift Card. See past winners here
Join Our Community