Browse audiobooks narrated by Kalyanaraman G, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
[Tamil] - RSS -Varalaarum Arasiyalum
"'தேசமெங்கும் எத்தனையோ பல மதக்கலவரங்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வந்திருக்கிறது. அப்பழுக்கற்ற தேசியவாத இயக்கம் என்று அதன் ஆதரவாளர்களும், சந்தேகமில்லாமல் மதவாத இயக்கம் என்று எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார்கள். எது உண்மை? சுதந்தர இந்தியாவின் மிகப்பெரிய கலவர காண்டத்தை பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின் மூலம் தொடங்கிவைத்தது ஆர்.எஸ்.எஸ். மும்பை தொடங்கி கோத்ரா வரை நீண்ட அவலங்களின் சரித்திரம் அழியக்கூடியதல்ல. இயற்கைப் பேரழிவுச் சம்பவங்களானாலும் சரி. பங்களாதேஷ் யுத்தம், கார்கில் யுத்தம் போன்ற தருணங்களானாலும் சரி. நிவாரணப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்தாம் முதலில் களத்தில் நின்றிருக்கிறார்கள். எனில், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இரண்டு முகமா? இல்லை. இருபது முகங்கள் என்று எடுத்துக்காட்டுகிறது இந்நூல். வெளியான காலம் முதல் இன்றுவரை இந்துத்துவ ஆதரவாளர்கள் - எதிர்ப்பாளர்கள் என இரு தரப்பினராலும் கடுமையாக விமரிசிக்கப்பட்டு, தூற்றப்பட்டு வரும் ஒரே தமிழ்ப் பிரதி இதுதான். இதுவே இந்நூலின் நடுநிலைமைக்குச் சான்று.'"
Pa Raghavan (Author), Kalyanaraman G (Narrator)
Audiobook
"''Maranam Pathiyirikkunna Thazhvara' is one of the most famous detective novels written by Kottayam Pushpanath. It belongs to the Pushparaj series of Kottayam Pushpanath. Detective Pushparaj, he is a private detective working in India. The Criminal Department seeks his help in cracking down on many cases of trauma and confusion. In this novel, 'Maranam Pathiyirikkunna Thazhvara' Detective Pushparaj unravels a mysterious bungalow and some of the events surrounding it. The novel tells the story of a valley where death hides, just like the title of the novel. கோட்டயம் புஷ்பநாத் எழுதிய மிகவும் பிரபலமான துப்பறியும் நாவல்களில் ஒன்று 'மரணத்தாழ்வரா'. இது கோட்டயம் புஷ்பநாத்தின் புஷ்பராஜ் தொடருக்கு சொந்தமானது. துப்பறியும் புஷ்பராஜ், இந்தியாவில் பணிபுரியும் ஒரு தனியார் துப்பறியும் நபர். அதிர்ச்சி மற்றும் குழப்பம் தொடர்பான பல வழக்குகளைத் தீர்ப்பதற்கு குற்றவியல் துறை அவரது உதவியை நாடுகிறது. இந்த நாவலில் துப்பறியும் புஷ்பராஜ் ஒரு மர்மமான பங்களாவையும் அதைச் சுற்றியுள்ள சில நிகழ்வுகளையும் அவிழ்த்து விடுகிறார். நாவலின் தலைப்பைப் போலவே மரணம் மறைந்திருக்கும் ஒரு பள்ளத்தாக்கின் கதையையும் இந்த நாவல் சொல்கிறது."
Kottayam Pushpanath (Author), Kalyanaraman G (Narrator)
Audiobook
"'காவல்துறை ஐபிஎஸ் அதிகாரியான பிரம்மாவுக்கு ஒரு விபத்தில் பழைய நினைவுகள் அனைத்தும் முழுதாக மறந்து போக, அதை தன் புத்தி சாதுர்யத்தால் அவன் அணுகும் விதம். தன்னைப்பற்றிய உண்மை நிலையை, தனக்கு நெருக்கமானவர்களிடம் கூட மறைக்கும் அவனது புத்திசாலித்தனம். பிரம்மாவைப் பார்க்கும், படிக்கும் எவராலும் நிச்சயம் பிரமிக்காமல் இருக்கவே முடியாது. இவனைக் கொலை செய்ய முயலும் நாயகி. தன்னைக் கொல்லவரும் காயத்ரியை அவன் கண்டுகொண்டானா? காயத்ரியின் எண்ணம் ஈடேறியதா? அவனது நினைவுகள் திரும்பியதா? அவனது பழைய நினைவுகள் போயிருக்கையில், வேலையில் சேர்ந்தவன் அதை மற்றவருக்குத் தெரியாமல் எப்படி மறைத்தான்? அவனிடம் கொடுக்கப்பட்ட கேஸ் களை எவ்வாறு முடித்து வைத்தான்? அவனது நினைவு திரும்பிய பிறகு, தன்னைக் கொல்ல வந்தவளே தன் மனைவியாகி இருப்பதைப் பார்த்து என்ன முடிவெடுப்பான்? அவனது பழைய நினைவுகள் இல்லாத பொழுது அவனைத் திருமணம் செய்து கொண்ட காயத்ரியின் நிலை என்னவானது? அவள் அவனைக் கொல்ல முயன்றதன் காரணம் என்ன? அனைத்தையும் அறிய, கதைக்குள் வாருங்கள்.'"
Infaa Alocious (Author), Kalyanaraman G (Narrator)
Audiobook
[Tamil] - Unnai Vittal Yarumillai
"'அக்கிரமங்கள் நிறைந்த இன்றைய அரசியல் களம் ஒரு சூதாட்டங்கள் நிறைந்த கொலைக்களம். அதில் ஒரு சிறிய தீப்பொறியை அணைக்க முற்பட்டு, அதன் தொடர்ச்சியாக நடப்பதெல்லாம் அதை காட்டுத்தீயாக மாற்றுகிறது. விறுவிறுவென நடக்கும் கண்ணுக்கு தெரியாத யுத்தத்தில் யாரெல்லாம் பகடைக்காய்களாக மாறுகிறார்கள் யாரெல்லாம் உயிரை இழக்கிறார்கள் என்பதை அறிய அறிய இதயம் பதைபதைப்புக்கு உள்ளாகும். திசைமாறிப் போகும் ஒரு சாதாரண கொலை வழக்கை மிகச்சரியான பாதைக்குக் கொண்டு வர போராடுகிறான் நம் ஹீரோ க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர் விவேக். இது போன்ற சிக்கலான வழக்குகளை சரிவர கையாளவிவேக்கை விட்டால் காவல்துறையில் யாரும் இல்லை என்கிற எண்ணம்தான் கேட்கும் உங்களுக்கு கண்டிப்பாக வரும் .பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு பொலிடிக்கல் க்ரைம் த்ரில்லர்.'"
Rajeshkumar (Author), Kalyanaraman G (Narrator)
Audiobook
[Tamil] - Yaarendru Mattum Sollathe
"இது காதல் கலந்த அமானுஷ்ய மர்ம நாவல்! ஒரு நாகமணிக்கல் தான் இந்த நாவலின் மையம்.. ஒரு பணக்கார பெண்மணியும், ஜமீன்தார் ஒருவரும் இந்த கல்லுக்காக போட்டி போடுகிறார்கள். இதனுடே சித்தர்களும் வந்து போகிறார்கள். ஒரு காதல் கதைக்குள் எப்படி இதெல்லாம் என்கிற கேள்விக்கு 24 அத்தியாயங்களில் யாரும் எதிர்பாத்திராத ஒரு பதிலை தருகிறது இந்த நாவல். கேளுங்கள் -- ஒரு புதிய உலகுக்குள் நுழைந்தது போல் இருக்கும்."
Indra Soundarrajan (Author), Kalyanaraman G (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer