Browse audiobooks by Indra Soundarrajan, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
[Tamil] - Mahabharatham Part 2
"நமது சான்றோர் மஹாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்கின்றனர். இதை ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறப்பாக உள்வாங்கி அக்கால நிலைகளுக்கும் , நடப்புகளுக்கும் ஏற்ப பதிவு செய்துவிட்டு சென்றிருக்கின்றனர் நமது சான்றோர்கள். அவர்தம் வழியில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் படைப்பான மஹாபாரதத்தை கேட்டு மகிழுங்கள்."
Indra Soundarrajan (Author), Krishnakumar V (Narrator)
Audiobook
"பிதா மகர் பீஷ்மரின் பார்வையில் கண்ணனின் வாழ்க்கை வரலாற்றை பஞ்ச பாண்டவர்களுக்கு எடுத்துரைப்பதாக அழகாக படைக்கப்பட்டது கண்ணன் வருவான். எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனின் சிறந்த படைப்பு. கேட்டு மகிழுங்கள் !"
Indra Soundarrajan (Author), M Arunachalam (Narrator)
Audiobook
[Tamil] - Sakthi Leelai Part 2
"நம் உறவுகளிலேயே தாயின் உறவும் அவளது பாசமும் மிக உயர்வானது என்பதை நன்கு அறிந்தவன் நான். என்னைப் பெற்ற தாயின் பாசமே எனக்குப் பெரிதாகத் தோன்றும் போது, இந்த புவனங்களுக் கெல்லாம் தாயானவளுக்கு எவ்வளவு பாசமும் கருணையும் இருக்குமென்பதை என்னால் கற்பனையே செய்து பார்க்க இயலவில்லை. அந்த தாயின் கருணை சக்தி லீலையின் இரண்டாம் பாகத்தின் மூலம் நாமும் பெறலாமா..."
Indra Soundarrajan (Author), Deepika Arun (Narrator)
Audiobook
[Tamil] - Sakthi Leelai Part 1
"இந்திரா சௌந்தரராஜன், (பிறப்பு 13 நவம்பர் 1958) சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைக்கதைகள் ஆகியவற்றில் நன்கு அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர் ஆவார். பி சௌந்தரராஜன் என்பது புனைப்பெயர். இவர்கள் மதுரையில் வசிக்கின்றனர். தென்னிந்திய இந்து மரபுகள் மற்றும் புராணங்களில் நிபுணத்துவம் பெற்றவர். அவரது கதைகள் பொதுவாக இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், தெய்வீக தலையீடு, மறுபிறவி மற்றும் பேய்கள் ஆகியவற்றைக் கையாளுகின்றன, மேலும் அவை பெரும்பாலும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து சொல்லப்படும் உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்லது ஈர்க்கப்பட்டவை. ."
Indra Soundarrajan (Author), Deepika Arun (Narrator)
Audiobook
"இது ஒரு மெகா நாவல்! நகரத்தில் மெக்கானிக்காக பணியாற்றும் பாலு என்பவனின் அப்பா ஒரு முன்னாள் வனஇலாக்கா அதிகாரி. பணியில் இருக்கும்போதே அவர் இறந்துவிடுகிறார். அவர் மரணம் மர்மமாக இருந்திட, அவரது டயரியை படிக்கும் பாலு அப்பாவின் மரண மர்மத்தை கண்டறிய சிவன்மலை காட்டிற்கு செல்கிறான். இந்த காட்டில் உலவும் சித்தர்கள், நாகமாணிக்கம் கக்கும் முதிர்ந்த நாகம், தெய்வ பெண்ணான பொன்னி , ரசவாதம் தெரிந்த சொர்ண சித்தர் என்று ஒரு புதிய உலகுக்கே அழைத்துச் செல்லும் இதன் கதைப்போக்கு புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்க விடாத ஒன்று. T V தொடராகவும் வந்து பெரு வெற்றி பெற்ற ஒரு தொடரே இந்த சிவமயம்."
Indra Soundarrajan (Author), E M S Murali (Narrator)
Audiobook
"இது ஒரு மெகா நாவல்! நகரத்தில் மெக்கானிக்காக பணியாற்றும் பாலு என்பவனின் அப்பா ஒரு முன்னாள் வனஇலாக்கா அதிகாரி. பணியில் இருக்கும்போதே அவர் இறந்துவிடுகிறார். அவர் மரணம் மர்மமாக இருந்திட, அவரது டயரியை படிக்கும் பாலு அப்பாவின் மரண மர்மத்தை கண்டறிய சிவன்மலை காட்டிற்கு செல்கிறான். இந்த காட்டில் உலவும் சித்தர்கள், நாகமாணிக்கம் கக்கும் முதிர்ந்த நாகம், தெய்வ பெண்ணான பொன்னி , ரசவாதம் தெரிந்த சொர்ண சித்தர் என்று ஒரு புதிய உலகுக்கே அழைத்துச் செல்லும் இதன் கதைப்போக்கு புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்க விடாத ஒன்று. T V தொடராகவும் வந்து பெரு வெற்றி பெற்ற ஒரு தொடரே இந்த சிவமயம்."
Indra Soundarrajan (Author), E M S Murali (Narrator)
Audiobook
"தாசி குலத்தில் பிறந்துவிட்ட கிருஷ்ணவேணி அதிலிருந்து மீண்டு சுயமரியாதையோட வாழவிரும்புகிறாள். அவளை மணக்க யாரும்தயாராயில்லை. ஒருவன் கூட மணக்க முன்வரவில்லை. ஒருவன் மட்டும் ஒரு வாரிசை தரமுன் வருகிறான், அவளும் கருவுறுகிறாள். இவ்வேளை பிரபல உபன்யாசகர் ஒருவர்- தீட்சிதர் அவர். இவருக்கு 8 பெண்பிள்ளைகள். ஆண்வாரிசுக்காக தவமிருப்பவர், இதனால் தீட்சிதர் மனைவியும் கருவுருகிறாள். இருவரும் ஒன்றாய் பிள்ளை பெறுகின்றனர். தாசிக்கு ஆண்பிறக்கிறது, தீட்சிதற்கு பெண்! தந்திரமாய் குழந்தைகள் இடம்மாறுகின்றன. அதன் பின்….? பரபரப்பான புதினம் இது!"
Indra Soundarrajan (Author), Nithyaa Ravindhar (Narrator)
Audiobook
[Tamil] - Yaazhini Endroru Thennaruvi
"ஒரு கோடிஸ்வரரால் கைவிடப்பட்டவளின் மகள் தான் யாழினி. ஒரு முதியோர் இல்லத்தில் வளர்ந்து வருபவள் அந்த கோடீஸ்வரர் மரணிக்கும் தருவாயில் தன் துரோகத்துக்கு பரிகாரமாக, தன்சொத்து தன்னால் கைவிடப்பட்ட யாழினிக்கு என்று எழுதிவைத்துவிட, யாழினியை தேடும்படலம் தொடங்குகிறது. சொத்துக்கு ஆசைபடுபவர்கள் தங்கள் வாரிசை யாழினி என்று பொய் சொல்லி சொத்தை அபகரிக்க பார்க்கின்றனர். யாழினிக்கோ முதியோர் இல்லத்தை பிரிந்து கோடிஸ்வரியாக ஆகா விரும்பமில்லை - அவள் என்ன செய்தாள்? பரபரப்பான நவீனம்!"
Indra Soundarrajan (Author), S Amirthavalli (Narrator)
Audiobook
[Tamil] - Chidambara Ragasiyam
"இது ஒரு அமானுஷ்ய தொடர்! சென்னையில் மனைவி மகளுடன் வசித்துவரும் ஒரு டாக்டர், தன் சொந்த ஊரான மகேந்திர மங்கலத்துக்கு வந்த இடத்தில் தன் பூர்வீக வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் சித்தர்களின் ஏடுகள் உள்ளன. அந்த சுவடிகளில் உள்ளவற்றை கேட்டு வரப்போகும் நிகழ்வுகளும், அவர்களுக்கு நடுவில் அதை அபகரிக்க விழையும் ஒரு கூட்டம்! இடையில் காவேரியில் நடைபெறும் 144 வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்ந்திடும் புஷ்கரம் இக்கதையில் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. இன்றைய விஞ்ஞான வாழ்வுக்கு நடுவில் மெய்ஞான நிகழ்வுகளும் நம்மை மீறி நடப்பதை சுவைபட சொல்லும் ஒரு புதிரான நாவல்."
Indra Soundarrajan (Author), Kannan Ruthrapathy (Narrator)
Audiobook
"இது ஒரு கிராமத்து காதல் கதை! ஒரு கள்ளனுக்கும், ஊரின் பெரும் புள்ளியின் மகளான ரோஜா என்பவளுக்கும் இடையில் உருவாகும் காதலே இதில் பிரதானம். இந்த கள்ளன் எதையும் திருட முடிந்தவன். உன்னால் என் இதயத்தை மட்டும் திருடவே முடியாது என்கிறாள் ரோஜா. கள்ளனோ திருடிக்காட்டுகிறான். காதல் மட்டுமல்ல, நினைத்து பார்க்கமுடியாத திடுக்கிடும் சம்பவங்களும் மிகுந்த ஒரு பரபரப்பு புதினம் ' தேவர் கோவில் ரோஜா'."
Indra Soundarrajan (Author), V Balasubramanian (Narrator)
Audiobook
"பெரும் தொழிலதிபரின் மகள் தான் கதாநாயகி. வலிப்பு நோய் காரணமாக அவளை நல்ல விதமாக மணம்முடிக்க வழி இல்லை. இதை அறிந்து நல்லவன் போல் நடித்து ஒருவன் அவளை மணக்க முனைகிறான். அவன் ஒரு சதிகாரன் என்பதை நிரூபிக்க ஹீரோ படும் பாடும், கதாநாயகியை காப்பாற்றி உண்மையை நிரூபிக்கும் விதங்களுமே இந்த ஆடு புலி ஆட்டம். நாவலின் இறுதிவரை பதைக்கவைக்கும் ஒரு படைப்பு."
Indra Soundarrajan (Author), Saki (Narrator)
Audiobook
[Tamil] - Yaadhumaagi Nindraal
"ஒரு பெண்ணின் போராட்டமே இந்த நாவல். பெண்களின் தியாகத்தால் மட்டுமே ஒரு குடும்பம் செழிப்படைய முடியும் என்பதை சொல்லும் நாவல். இதன் நாயகி தியாகி மட்டுமல்ல, பெரும் புத்திசாலியும் கூட.. பேராசை மிகுந்த ஒரு தங்கை, பேதையான ஒரு தங்கை, பென்ஷன் வாங்கும் தமிழாசிரியரான அப்பா, வாயில்லா அம்மா - இது போக ஓடிப்போய்விட்ட மனைவியால் தனித்து விடப்பட்ட ஒரு பெரியப்பா என்கிற கூட்டு குடும்பத்துக்குள் கதாநாயகி படும்பாடுகளே ' யாதுமாகி நின்றாள்!'."
Indra Soundarrajan (Author), Bavya Keerthivasan (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer