Buy from our bookstore and 25% of the cover price will be given to a school of your choice to buy more books. *15% of eBooks.
Audiobooks Narrated by S Amirthavalli
Browse audiobooks narrated by S Amirthavalli, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"ஒருவர் தொடங்கும் துரோகம் அடுத்தடுத்தவர்களையும் பற்றிக் கொண்டு தொடர்ச்சியாக முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும்.
கடத்தல் தொழிலில் ஈடுபடும் வாசுதேவனைக் காட்டி கொடுக்க அவனிடம் வேலை செய்யும் லாரன்ஸ் போலீஸ் அதிகாரியை தொடர்பு கொள்ள அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கிறது. போலீஸ் அதிகாரி குபேர் வாசுதேவனின் நண்பன் என்று லாரன்ஸ்க்குத் தெரியாமல் போனது அவனின் உயிரையே எடுத்துவிடுகிறது.
லாரன்ஸ் தந்தை ஹார்ட் அட்டாக்கில் இறந்து போக அந்த அதிர்ச்சியே அவனின் தாயையும் காவு வாங்கிவிடுகிறது.
லாரன்ஸின் மனைவியைக் கடத்தி வந்த வாசுதேவன் நண்பன் வீட்டில் அவளை வைத்திருக்க, அவளும் கொல்லப்படுகிறார் அந்த உண்மை வாசுதேவனுக்குத் தெரியாமல் அவனின் நண்பன் மறைத்துவிடுகிறான்.
திடீரென குபேர் கொலை செய்யப்படுகிறார். அடுத்து வாசுதேவனும் கொல்லப்படுகிறான்.
வாசுதேவனின் தொழில் நண்பர்களான நால்வர் தான் குபேரனையும் வாசுதேவனையும் கொன்று லாரன்ஸ் மனைவி தான் பழிவாங்கி இருப்பாள் என்ற பிம்பத்தை அவரின் மகனிடம் உண்டாக்கிவிடுகின்றனர்."
"பணத்திற்காக நன்றாக இருந்தவனைக் கொன்று அவன் உடல் உறுப்பைத் தேவைப்படும் ஆட்களுக்குப் பொருத்திய டாக்டர் அமரதீபனை பழிவாங்க புறப்படும் இயக்கம் அவரால் பயனடைந்த இருவரை கொன்று விட்டு டாக்டரை நெருங்கும் போது போலீஸால் தடுக்கப்படுவதைச் சொல்வது தான் 'பொறுத்தது போதும் விவேக்"
"ஒரு கோடிஸ்வரரால் கைவிடப்பட்டவளின் மகள் தான் யாழினி. ஒரு முதியோர் இல்லத்தில் வளர்ந்து வருபவள் அந்த கோடீஸ்வரர் மரணிக்கும் தருவாயில் தன் துரோகத்துக்கு பரிகாரமாக, தன்சொத்து தன்னால் கைவிடப்பட்ட யாழினிக்கு என்று எழுதிவைத்துவிட, யாழினியை தேடும்படலம் தொடங்குகிறது. சொத்துக்கு ஆசைபடுபவர்கள் தங்கள் வாரிசை யாழினி என்று பொய் சொல்லி சொத்தை அபகரிக்க பார்க்கின்றனர். யாழினிக்கோ முதியோர் இல்லத்தை பிரிந்து கோடிஸ்வரியாக ஆகா விரும்பமில்லை - அவள் என்ன செய்தாள்? பரபரப்பான நவீனம்!"
"ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய
இரகசியத்தைத் திரை விலக்கும் ஓர் அருமையான நூல்!
எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது, அதாவது, தினமும் காலையில் படுக்கையைவிட்டு உற்சாகமாகத் துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது, என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.
உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் திகழ்கின்ற இந்நூல், உங்களுடைய தனிப்பட்ட இக்கிகய்யைத் திரை விலக்குவதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்கும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்தவை அவை. அவசரப் போக்கைக் கைவிட்டுவிட்டு, உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து, உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக் காட்டும்.
இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் கொண்டு வாருங்கள்."