Browse audiobooks narrated by M Arunachalam, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"பிதா மகர் பீஷ்மரின் பார்வையில் கண்ணனின் வாழ்க்கை வரலாற்றை பஞ்ச பாண்டவர்களுக்கு எடுத்துரைப்பதாக அழகாக படைக்கப்பட்டது கண்ணன் வருவான். எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனின் சிறந்த படைப்பு. கேட்டு மகிழுங்கள் !"
Indra Soundarrajan (Author), M Arunachalam (Narrator)
Audiobook
[Tamil] - Pak Oru Puthirin Saridham
"பாகிஸ்தான் அரசியலைக் குறித்துப் பேசும் தமிழின் முதல் நூல் இதுதான் காஷ்மீரில் நடப்பது சுதந்தரப் போராட்டம் என்று திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்துச் சொல்லிக்கொண்டிருப்பதன் மூலம், இரு தேசங்களுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துக்கொண்டே போவதுதான் பாகிஸ்தானின் நிரந்தர அரசியல். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அது இந்தியாவின் பிற மாநிலங்களைப் போன்ற ஒரு பிராந்தியமாகிவிட்டாலுமே பாகிஸ்தான் தனது நிலைபாட்டை இதில் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. ஏனெனில் காஷ்மீரை விலக்கிவிட்டு பாகிஸ்தானில் அரசியல் செய்யவே முடியாது. முகம்மது அலி ஜின்னா தொடங்கி பேனசிர் புட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி பதவிக்கு வந்த காலம் வரையிலான (2008) பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் குறித்த துல்லியமான அறிமுகம் இதில் கிடைக்கிறது. பாகிஸ்தானில் நிலைகொண்டு, காஷ்மீரில் தீவிரவாதம் வளர்க்கும் அனைத்து இயக்கங்கள் குறித்தும் ஆதாரபூர்வமான தகவல்கள், புள்ளி விவரங்கள், காஷ்மீர் பிரச்னை பற்றிய ஆழமான அலசல் அடங்கிய நூல் இது. பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாத பாகிஸ்தானின் இந்த அரசியல் வரலாறு, குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்தது. டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம், மாயவலை போன்ற பா. ராகவனின் பிற்கால அரசியல் வரலாற்று நூல்கள் அனைத்துக்கும் தொடக்கம் இதுவே."
Pa Raghavan (Author), M Arunachalam (Narrator)
Audiobook
[Tamil] - Hitler- Sollappadatha Sarithiram
"இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?' என்று எப்போதும் அதிர்வுகளைக் கிளப்பும் ஆளுமை அடால்ஃப் ஹிட்லர் பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர்காலத் தலை முறையினரையும் நடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனைக் கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் பிரமிப்பை வளர்க்கும் பிறவி - ஹிட்லர் நாஜி ஜெர்மனிக்குள் இடது காலை எடுத்து வைக்கத் தயாராகுங்கள்."
Mugil (Author), M Arunachalam (Narrator)
Audiobook
[Tamil] - Nethaji Subash Chandra Bose
"தேசத்தந்தையாக விளங்கிய காந்தியின் அடியொற்றி சுதந்திர வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இரு இளைஞர்கள் - ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திர போஸும். இருவருக்குமே காந்தியிடம் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், மக்கள் செல்வாக்கு எனும் கனி காந்தியிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்த நேரு அஹிம்சையை, ஒத்துழையாமையை ஆதரித்தார், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகத் திகழ்ந்தார். புரட்சி வழியே சென்ற போஸ் பல சாகஸ பயணங்களைக் கடல் மார்க்கமாகவும் வான் மார்க்கமாகவும் மேற்கொண்டு படை திரட்டினார். ' நீ காண விரும்பும் மாற்றத்தை முதலில் உன்னிடமிருந்தே தொடங்கு' என்ற காந்தியின் அறிவுரையை அவர் வாழும் காலத்திலேயே பின்பற்றும்விதமாகவே ஒரு கட்டத்தில் காந்தியை விட்டு விலகி பிரிட்டிஷாருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் தன் கொள்கையின் மீதான பற்றுதலையும், தீவிரத்தையும் அதற்கிருக்கும் மக்கள் ஆதரவையும் நிரூபித்துக் காட்டினார் போஸ். ஆட்சியாளர்கள், அவர்கள் வகுத்த சட்டத்திற்கு உட்பட்ட தார்மீக உரிமைகளைக் கோரும் சமரசமே தன் அறப்போராட்டத்தின் உச்சபட்ச இலக்கு என்பது காந்தியின் நிலைப்பாடு. சுய ராஜ்ஜியம் என்பது எங்கள் உடைமை, அதைத் தட்டிப்பறித்தவனிடம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை என்பது போஸின் பிரகடனம். 'பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் என்று கிளம்பினால் உலகமே குருடாகிவிடும் ' என்று எச்சரித்தார் காந்தி. உலகப்போரில் பிரிட்டனின் பின்னடைவை சாதமாகப் பயன்படுத்திக்கொள்ள மறுத்தார். முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும். என் எதிரியின் எதிரி என் நண்பன் என்று சூளுரைத்த போஸ் ஆங்காங்கே உதிரிகளாக இருந்த புலம்பெயர்ந்த இந்தியர்களை ஒன்று திரட்டினார்."
Guhan (Author), M Arunachalam (Narrator)
Audiobook
"பழங்காலத்தில் ஏழீக்கரை கிராமத்தில் கொடிகட்டிப் பறந்திருந்த குடும்பம் பொன்னாட்டு மனை . மூத்த வாரிசுகளின் ஆடம்பர சுகபோகமான வாழ்க்கை முறைகளால் இன்று வறுமையில் தள்ளப்பட்டு அந்த குடும்பத்தில் மீதம் உள்ளவர்கள், பத்ரன நம்பூதிரியும் இருபத்தேழு வயதான வேலை இல்லா பட்டதாரி மகன் கிருஷ்ணன் உண்ணியும் தான். கிருஷ்ணன் உண்ணி வீட்டில் இருந்த பழைய ஓலைசுவடிகளை புரட்ட, முன்னோர்களின் நினைவு எழுந்து அவர்களை விட கெட்டிக்காரனாக வேண்டும் என்கிற ஆசை கொள்கிறான். இந்நிலையில் புகழ்பெற்ற நம்பூதிரி குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ஒருத்தியின் திருமணம் மூன்றாவது தடவையாக தடைப்பட , இந்த சம்பவங்களின் பின்னணியை தெரிந்து கொள்வதற்காக பெண் வீட்டார் பிரஸ்னம் பார்க்க முடிவுசெய்கிறார்கள். தந்தையின் தூண்டுதலால் அங்கு செல்லும் கிருஷ்ணன் உண்ணி நம்பூதிரியின் பெண் திருமணம் நடைபெற , தன் திறமையை செயல் படுத்தி என்ன செய்கிறான் என்பதை அறிய கேளுங்கள் 'மந்திர முழக்கம்'"
Kottayam Pushpanath (Author), M Arunachalam (Narrator)
Audiobook
"'கார்டியாலஜிஸ்ட் அனந்த கிருஷ்ணனும், ஹரேஷூம் ஃபைவ் ஸ்டார் அந்தஸ்தோடு கூடிய மிகப் பெரிய ஹாஸ்பிடலை நடத்தி நகரில் நல்ல பெயர் எடுத்து இருப்பதால் அவர்களுக்கு எதிரிகளும் உருவாகிறார்கள். அவர்கள் ஹாஸ்பிடலுக்கு கெட்டப் பெயரை உண்டாக்க வேண்டும் என்பதற்காக மறைமுக வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அனந்த கிருஷ்ணனை கொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றன. போலீஸ் விசாரணையில் இறங்கி டாக்டர்கள் அனந்த கிருஷ்ணனுக்கும், ஹரேஷூக்கும் எதிராகவும், மறைமுகமாகவும் செயல்படுபவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறது, அவர்களால் முடியாமல் போகவே க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர் விவேக் அதிரடியாய் விசாரணையில் இறங்கி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். விவேக்கின் புத்திசாலித்தனமான நுணுக்கமான புலனாய்வு நடவடிக்கைகள் மூலம் உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளி யார் என்பது தெரியும்போது அனைவர்க்கும் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது. 'அது எதுமாதிரியான அதிர்ச்சி என்று அறிய விருப்பமா ? 'க்ரைம் த்ரில்லரான ஊமத்தம்பூக்கள் நாவலை ஒலி வடிவில் கேளுங்கள்.'"
Rajeshkumar (Author), M Arunachalam (Narrator)
Audiobook
[Tamil] - Prathapa Mudaliar Charithram
"'பிரதாப முதலியார் சரித்திரம் 1857-இல் எழுதப்பட்டு 1879-இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது. அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் கொண்டிருந்த தமிழிற்கு உரைநடையிலிருந்த புனைகதை இலக்கிய வகை இந்நூலுடனேயே அறிமுகமானது. பிரதாப முதலியார் என்பவனைக் கதாநாயனாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது. அவன் ஞானாம்பாள் என்பவளை திருமணம் செய்வதும் பின்னர் அவர்கள் பிரிவதும் அதன் பின்னர் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதும் நாவலாக எழுதப்பட்டுள்ளது. மாயூரம் நகரசபையின் தலைவராக வேதநாயகம் பிள்ளை பணியாற்றிய காலத்தில் 1876 இல் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சத்தின் போது கஞ்சித்தொட்டி திறந்து பொதுமக்களுக்குச் சேவை செய்த அநுபவங்கள் போன்றவை இப்புதினத்தில் இடம்பெற்றுள்ளன. இப்புதின நூலில் ஆசிரியரின் முன்னுரை ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்நாவல் ஆங்கிலம் உட்பட பல மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அமர் சித்திரக் கதையாகவும் வெளிவந்துள்ளது. Prathapa Mudaliar Charithram written in 1857 and published in 1879, was the first novel in the Tamil language. Penned by Samuel Vedanayagam Pillai (1826-1889), it was a landmark in Tamil literature, which had hitherto seen writings only in poetry. The book gave birth to a new literary genre and Tamil prose began to be recognized as an increasingly important part of the language. Published more than 125 years ago, this book is an adventurous journey to the realm of folk tales and fables, mythology and morality. A colourful expedition from one story to another, it moves from humour to satire, from failure to success, from tears to laughter. The novel is narrated in first person. The story is a loose collection of events and narratives centered on a naive but good-natured hero and his life and adventures. It begins in a typical forward caste family setting, with the young Prathapa Mudhaliar, from Tuluva Vellala Mudaliar family of Arcot indulging in hunting and enjoying himself. The plot also introduces the heroine as a rather intelligent and morally upright girl who marries the hero through a myriad of events.'"
Maayuram Vedanayaakam Pillai (Author), M Arunachalam (Narrator)
Audiobook
"ஊரை மிரட்டி ரவுடித்தனம் செய்து 'உடையவர்களை' மிரட்டி பணம் சம்பாதிக்கும் கருப்பு, ஊர் வம்புக்காரி, வாயாடி, கருப்பின் மனைவி வள்ளியம்மை. சோமு என்கிற குழந்தை. சோமு தன் தந்தையின் போக்கால் அவனுக்கு ஏற்பட்ட கலங்கத்தை அவன் கனவுகளாலும்,செயல்களாலும் விலக்கி, சோமசுந்தர முதலியாராகி, ஊரில் முக்கியப் பிரமுகராகி, பின்னர் சோமுப்பண்டாரமாய் இறந்ததைப் பற்றி ஒரு நேர்த்தியான வரலாறு. மனிதனுக்கு கடவுள் என்பவன் ஒன்றள்ள, உலகம் தோன்றியதில் இருந்து இப்போது வரைக்கும், ஒவ்வொறு நொடிக்கும் ஒரு கடவுள் உண்டு. இனி வரும் ஒவ்வொரு நொடிகளும் இன்னும் புதுப்புதுப் கடவுள்கள் தோன்றுவார்கள் என்று தத்துவார்த்த மனநிலையை அடையும் சோமுப்பண்டாரம், தன் வாழ்நாளில் பணம், புகழ், கள்ள உறவுகள், துரோகம், நன்றி, துறவு என்று வாழ்வின் எல்லா நிலையையும் அடையும் எதார்த்த வாழ்வை காட்டும் நாவல்."
Ka Naa Subramaniam (Author), M Arunachalam (Narrator)
Audiobook
"This is a novel that goes back and forth between the past and the present. There is a treasure in a cemetery. The cemetery holds in it a lot of secrets. What are they? This story is sure to drag you into its thrilling world. Listen to Porkaasu Thottam. இது ஒரு வரலாறும் சமகாலமும் கலந்த புதினம். புதையல் தான் கதையின் மையம். குறிப்பாக மயானமும் மயானத்தில் இருக்கும் ரகசியங்களும் எவரும் அறியாதவை. கேட்பவர்களை தன் கதைக்களத்திற்குள் இழுத்துச்செல்லும் விறுவிறுப்பான நாவல்."
Indra Soundarrajan (Author), M Arunachalam (Narrator)
Audiobook
[Tamil] - Marmayogi Nostradamus
"சிந்திக்கத் தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர். புறத்தோற்றங்கள், குணாதிசயங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு மனிதன் சக மனிதனிடமிருந்து வேறுபடுகிறான். தன் சிந்தனையின் தீர்க்கம், தன் சந்ததியினரின் மேல் அவை ஏற்பபடுத்திய தாக்கம் போன்ற காரணிகளால் மனிதன் காலத்தை வென்ற ஞானியாக, கடவுளாக வாழ்கிறான். மனிதன் என்பது பொதுப்படையான பெயராக இருந்தாலும், நாஸ்ட்ராடாமஸ் அதிலிருந்து விலகி அசாதாரண மனிதனாக இருக்கிறார். நாஸ்டிரடாமசிற்கும் நமக்கும் ஒரு சிறிய வித்தியாசம்தான்.வருங்காலத்தில் சரித்திரம் நம்மைப் பற்றி எப்படி பேச வேண்டும் என்பதை பாவித்து கணக்குப் பார்த்து இன்றைய வேலைகளை செய்கிறோம். அனால் நாஸ்டிரடாமஸோ சரித்திரத்தின் வருங்காலத்தையே சதா சிந்தித்தார். முதலில் வந்தது முட்டையா? இல்லை கோழியா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் வைத்தால் இன்றைய தேதியில்கூட பரபரப்பாகஇருக்கும்.அப்படியிருக்க நாஸ்டிரடாமஸின் தீர்க்கதரிசனத்திற்கு என்ன காரணம் என்ற விவாதத்தில் ஆரம்பித்ததே இந்தப் புத்தகம்.இனி நீங்கள் அ, ஆ விலிருந்து தொடங்க வேண்டாம். நாங்கள் விட்ட இடத்திலிருந்து உங்கள் அறிவுத்தேடலைத் தொடர்ந்தாலே போதும். 'உலகமே ஒரு நாடக மேடை நாமெல்லாம் அதில் நடிகர்கள் ' என்ற ஷேக்ஸ்பியரின் கூற்று எவ்வளவு அடர்த்தியான கருத்தை உள்ளடக்கிய வாக்கியம் என்பதை நாஸ்டிரடாமசின் பார்வையில் இப்புத்தகத்தின் மூலம் உணர்வீர்கள். ஒரு மனிதனின் ஆயுட்காலத்தின் கற்பனை என்பது ஒப்பனை அளவில் மட்டுமே. அடுத்து அரங்கேறுவது என்னவோ அதே நாடகம்தான்."
Karthik Sreenivas (Author), M Arunachalam (Narrator)
Audiobook
[Tamil] - Marmayogi Nostradamus
"சிந்திக்கத் தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர். புறத்தோற்றங்கள், குணாதிசயங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு மனிதன் சக மனிதனிடமிருந்து வேறுபடுகிறான். தன் சிந்தனையின் தீர்க்கம், தன் சந்ததியினரின் மேல் அவை ஏற்பபடுத்திய தாக்கம் போன்ற காரணிகளால் மனிதன் காலத்தை வென்ற ஞானியாக, கடவுளாக வாழ்கிறான். மனிதன் என்பது பொதுப்படையான பெயராக இருந்தாலும், நாஸ்ட்ராடாமஸ் அதிலிருந்து விலகி அசாதாரண மனிதனாக இருக்கிறார். நாஸ்டிரடாமசிற்கும் நமக்கும் ஒரு சிறிய வித்தியாசம்தான்.வருங்காலத்தில் சரித்திரம் நம்மைப் பற்றி எப்படி பேச வேண்டும் என்பதை பாவித்து கணக்குப் பார்த்து இன்றைய வேலைகளை செய்கிறோம். அனால் நாஸ்டிரடாமஸோ சரித்திரத்தின் வருங்காலத்தையே சதா சிந்தித்தார். முதலில் வந்தது முட்டையா? இல்லை கோழியா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் வைத்தால் இன்றைய தேதியில்கூட பரபரப்பாகஇருக்கும்.அப்படியிருக்க நாஸ்டிரடாமஸின் தீர்க்கதரிசனத்திற்கு என்ன காரணம் என்ற விவாதத்தில் ஆரம்பித்ததே இந்தப் புத்தகம்.இனி நீங்கள் அ, ஆ விலிருந்து தொடங்க வேண்டாம். நாங்கள் விட்ட இடத்திலிருந்து உங்கள் அறிவுத்தேடலைத் தொடர்ந்தாலே போதும். 'உலகமே ஒரு நாடக மேடை நாமெல்லாம் அதில் நடிகர்கள் ' என்ற ஷேக்ஸ்பியரின் கூற்று எவ்வளவு அடர்த்தியான கருத்தை உள்ளடக்கிய வாக்கியம் என்பதை நாஸ்டிரடாமசின் பார்வையில் இப்புத்தகத்தின் மூலம் உணர்வீர்கள். ஒரு மனிதனின் ஆயுட்காலத்தின் கற்பனை என்பது ஒப்பனை அளவில் மட்டுமே. அடுத்து அரங்கேறுவது என்னவோ அதே நாடகம்தான்."
Karthik Sreenivas (Author), M Arunachalam (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer