Browse audiobooks by Karthik Sreenivas, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"பசித்த மானுடத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் 'மாற்றம்' என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்கிவிடலாம். அப்படி பெரும்பான்மை போக்கை நிர்ணயித்த மாற்றத்தின் முகவர்கள் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் என்று பல்வேறு அடையாளங்களைத் தாங்கி நிற்கின்றனர். அவர்களை தனி ஒருவனின் 'ஆசை'யைத் தூண்டி ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியவர்கள், சமூகத்தின் சமநிலை கருதி ஆசையை கட்டுக்குள் வைக்கக் கற்றுக்கொடுத்தவர்கள் என்று இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்திவிடலாம். அப்படி முதல் தரப்பினரில் ஒருவர் 'உலகமயம்' என்னும் மந்திரக்கோலை நீட்டி ஒவ்வொருமுறை 'வளர்ச்சி' என்ற சொல்லை வெவ்வேறு காலகட்டங்களில் உச்சரித்தபோதும் புதிய வஸ்துகள் தோன்றின. ஆனால் இரண்டாம் தரப்பினர்கள் கணித்ததைப்போல் அவற்றின் மறுசுழற்சிக்கு வடிகால் இல்லாததால் இதுவரை அழிவிற்குப் பயன்படாத அறிவியல் கண்டுபிடிப்பு என்று எதுவுமே மிஞ்சவில்லை என்பதுதான் சாபக்கேடு. 'ஆசைகளையும் துறக்காமல், அழிவையும் விதைக்காமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல விளைவுகளை மட்டுமே தரக்கூடிய மாற்றங்கள் சாத்தியமா?' என்று தேடத்துவங்கியவர் ஜிப்2, பே-பால், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பணி, ஹைப்பர்லூப், ஓப்பன் ஏஐ, சோலார் சிட்டி, கிகா ஃபேக்டரி ஆகிய நிறுவனங்களை வளர்த்தெடுத்தார். அவர் பெயர்தான் எலான் மஸ்க்! எலான் மஸ்க்கின் வாழ்வின் வழியாக, அவரது சாதனைகள் ஊடாக, அவரது இலக்குகளை எட்டும் பயணத்தின் பலனாக நாம் என்ன பெறப்போகிறோம் என்றால் அவரது முயற்சிகள் எல்லாம் வெற்றிபெற்று ஒன்றோடொன்று தொடர்புகளை ஏற்படுத்தி இணையும் புள்ளியில் உலகமே 'எலான்மயம்' ஆகியிருக்கும்."
Karthik Sreenivas (Author), Sengamalanathan (Narrator)
Audiobook
[Tamil] - Marmayogi Nostradamus
"சிந்திக்கத் தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர். புறத்தோற்றங்கள், குணாதிசயங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு மனிதன் சக மனிதனிடமிருந்து வேறுபடுகிறான். தன் சிந்தனையின் தீர்க்கம், தன் சந்ததியினரின் மேல் அவை ஏற்பபடுத்திய தாக்கம் போன்ற காரணிகளால் மனிதன் காலத்தை வென்ற ஞானியாக, கடவுளாக வாழ்கிறான். மனிதன் என்பது பொதுப்படையான பெயராக இருந்தாலும், நாஸ்ட்ராடாமஸ் அதிலிருந்து விலகி அசாதாரண மனிதனாக இருக்கிறார். நாஸ்டிரடாமசிற்கும் நமக்கும் ஒரு சிறிய வித்தியாசம்தான்.வருங்காலத்தில் சரித்திரம் நம்மைப் பற்றி எப்படி பேச வேண்டும் என்பதை பாவித்து கணக்குப் பார்த்து இன்றைய வேலைகளை செய்கிறோம். அனால் நாஸ்டிரடாமஸோ சரித்திரத்தின் வருங்காலத்தையே சதா சிந்தித்தார். முதலில் வந்தது முட்டையா? இல்லை கோழியா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் வைத்தால் இன்றைய தேதியில்கூட பரபரப்பாகஇருக்கும்.அப்படியிருக்க நாஸ்டிரடாமஸின் தீர்க்கதரிசனத்திற்கு என்ன காரணம் என்ற விவாதத்தில் ஆரம்பித்ததே இந்தப் புத்தகம்.இனி நீங்கள் அ, ஆ விலிருந்து தொடங்க வேண்டாம். நாங்கள் விட்ட இடத்திலிருந்து உங்கள் அறிவுத்தேடலைத் தொடர்ந்தாலே போதும். 'உலகமே ஒரு நாடக மேடை நாமெல்லாம் அதில் நடிகர்கள் ' என்ற ஷேக்ஸ்பியரின் கூற்று எவ்வளவு அடர்த்தியான கருத்தை உள்ளடக்கிய வாக்கியம் என்பதை நாஸ்டிரடாமசின் பார்வையில் இப்புத்தகத்தின் மூலம் உணர்வீர்கள். ஒரு மனிதனின் ஆயுட்காலத்தின் கற்பனை என்பது ஒப்பனை அளவில் மட்டுமே. அடுத்து அரங்கேறுவது என்னவோ அதே நாடகம்தான்."
Karthik Sreenivas (Author), M Arunachalam (Narrator)

"நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும் உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகு சிலர். காய்களை நகர்த்துபவர்கள் வேறு சிலர். அவர்களால் நகர்த்தப்படும் அல்லது வெட்டி வீசப்படும் காய்கள் மட்டும்தான் நாம். அதிர்ச்சியைக் குறைத்து அடுத்த பத்தியையும் வாசியுங்கள். நாம் உடுத்தும் உடை தொடங்கி நாம் பயன்படுத்தும் ஆடம்பர வசதிகள் வரை அனைத்தையும் தீர்மானிப்பது நாம்தான் என்று நமக்குள்ளே மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை முற்றிலும் வேறானது. ஒரு குறிப்பிட்ட குழுவினர்தான் நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நம்முடைய ஒவ்வொரு நகர்வையும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் , வங்கிகள் என்று இந்த உலக நகர்வுக்கு ஒத்தாசையாக இருக்கும் ஒவ்வொன்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன.திடீரென ஒரு நாடு திவால் அடையலாம். இன்னொரு நாடு திடீர் வளர்ச்சி பெறலாம். ஏதோவொரு தேசம் பெரும் யுத்தத்துக்குப் பலியாகலாம். ஒரு நாட்டில் அரசியல் புரட்சி ஏற்படலாம். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் தீவிரவாதம் பெருக்கெடுத்து ஓடலாம். இப்படி உலக வரலாறு நெடுக நிகழ்ந்த பெரும்பாலான ஆக்க/அழிவுப் பூர்வ நிகழ்வுகளின் பின்னணியில் இவர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? பீடிகை போதும். பெயரைச் சொல்லிவிடலாம். இவர்களுக்கு இல்லுமினாட்டிகள் என்று பெயர்."
Karthik Sreenivas (Author), Manimaran (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer