Browse audiobooks narrated by Sengamalanathan, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"சிப்பாய் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம். இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலகட்டத்தின் பச்சை ரத்த படுகொலைகளும் ,குரூரங்களும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து உயிர்த்தெழுகின்றன . தனிமனித விருப்பு வெறுப்புகளும் இலட்சிய வாதமும் ஒன்றிணையும் புள்ளியின் உணர்ச்சி பெருக்கையும் துயரங்களையும் பிரம்மாண்டமாக சித்தரிக்கும் சுஜாதா சரித்திர புனைக்கதை வடிவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறார் ."
Sujatha (Author), M S Poonguzhali, Sengamalanathan (Narrator)
Audiobook
"கதைகள் பொழுதுபோக்காகவும் கல்வியாகவும் இருக்கலாம். அவை நுண்ணறிவு மற்றும் வெளிச்சம் தரக்கூடியவை, குறிப்பாக தலைமுறை தலைமுறையாக, பல நூற்றாண்டுகளாகப் பயணிக்கும் போது, ஒவ்வொரு மறுபரிசீலனையிலும் புதிய அர்த்தங்களை எடுத்துக்கொண்டு, நீக்கிவிடுகின்றன. இந்த வகையை வளைக்கும் புத்தகத்தில், ஒரு தொடரின் முதல், அமிஷ் மற்றும் பாவ்னா பண்டைய இந்திய இதிகாசங்களின் விலைமதிப்பற்ற பொக்கிஷத்திலும், அமிஷின் மெலுஹாவின் பரந்த மற்றும் சிக்கலான பிரபஞ்சத்திலும் (அவரது ஷிவா ட்ரைலோஜி மற்றும் ராம் சந்திரா தொடர்கள் மூலம்), இந்திய தத்துவத்தின் சில முக்கிய கருத்துகளை ஆராய. சிந்தனைக்கும் செயலுக்கும், எடுத்துக்கொள்வதற்கும் கொடுப்பதற்கும், சுய-அன்புக்கும் தியாகத்துக்கும் இடையிலான சிறந்த தொடர்பு என்ன? சரி எது தவறு என்று எப்படி சொல்ல முடியும்? அகங்காரம் மற்றும் பொருள் தேவைகளால் தூண்டப்படாமல், நம்மில் உள்ள சிறந்ததை வெளிக்கொணரவும், நோக்கமும் அர்த்தமும் கொண்ட வாழ்க்கையை வாழவும் நாம் என்ன செய்ய முடியும்? உங்களுக்குப் பிடித்தமான கற்பனைக் கதாபாத்திரங்களின் அன்பான நடிகர்களால் எங்களுக்குப் பிடித்த கதைகளுக்கு இந்த எளிய மற்றும் புத்திசாலித்தனமான விளக்கங்களில் பதில்கள் உள்ளன."
Amish Tripathi (Author), Sengamalanathan (Narrator)
Audiobook
"'தீவிரவாதம், நவீன யுகத்தின் புற்றுநோய். எப்படி இது தீவிரமடைகிறது? ஏன் தடுக்கவோ ஒழிக்கவோ முடிவதில்லை? அல் காயிதா முதல் ஐ.எஸ். வரை ஏராளமான இயக்கங்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் செல்வாக்குப் பெற்றது எப்படி? இவர்களுக்கு ஆள்களும் பணமும் கிடைக்கும் வழியென்ன? தீவிரவாத இயக்கங்களின் நெட் ஒர்க் எவ்வாறு செயல்படுகிறது? ஏன் எந்த அரசினாலும் இவர்களைத் தடுக்க முடிவதில்லை? பேரழிவுச் சம்பவங்களை எப்படித் திட்டமிடுகிறார்கள்? எப்படி அவற்றுக்காக உழைக்கிறார்கள்? தீவிரவாதச் செயல்களுக்கு மதம் எப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது? ஆறு ஆண்டுக்கால ஆராய்ச்சி. ஆதாரபூர்வமான தகவல்கள். உலகை அச்சுறுத்தும் அனைத்துத் தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் மிக விரிவான அறிமுகத்தைத் தருகிறது மாயவலை.'"
Pa Raghavan (Author), Sengamalanathan (Narrator)
Audiobook
"கதையோ, சம்பவங்களோ, ஜோசியமோ முக்கியமல்ல. ஆனால் குணசித்திரங்கள், மனப்போராட்டம், உலகமே ஒரு குடும்பம் என்கிற சித்தாந்தம் இவற்றில் நம்பிக்கை வைத்து நான் 1938இல் சேலத்தில் உட்கார்ந்து எழுதிய நாவல் சர்மாவின் உயில். எனக்குத் திருப்தி தந்த முதல் நாவல் இது."
Ka Naa Subramaniam (Author), Sengamalanathan (Narrator)
Audiobook
"ஒரு மறக்கப்பட்ட ஹீரோ. ஒரு மறக்க முடியாத போர். இந்தியா, 1025 கி.பி. முஹமது கஜினி மற்றும் அவரது காட்டுமிராண்டித்தனமான துருக்கியப் படைகளின் தொடர்ச்சியான தாக்குதல்கள் இந்தியாவின் வடக்குப் பகுதிகளை பலவீனப்படுத்தியுள்ளன. ஆக்கிரமிப்பாளர்கள் துணைக் கண்டத்தின் பரந்த பகுதிகளுக்கு - கொள்ளையடித்தல், கொலை செய்தல், கற்பழித்தல், போன்றவற்றால் வீணடித்தனர். பழைய இந்திய ராஜ்ஜியங்கள் பல, சோர்வடைந்து பிளவுபட்டு அவர்களிடம் விழுகின்றன. சண்டையிடுபவர்கள், பழைய போர்க் குறியீடுகளுடன் போரிட்டு, வெற்றி பெறுவதற்காக எல்லா விதிகளையும் மீண்டும் மீண்டும் மீறும் காட்டுமிராண்டித்தனமான துருக்கிய இராணுவத்தை நிறுத்த முடியவில்லை. பின்னர் துருக்கியர்கள் தேசத்தில் உள்ள புனிதமான கோவில்களில் ஒன்றான சோம்நாத்தில் உள்ள அற்புதமான சிவன் கோவிலை தாக்கி அழித்தார்கள். மிகவும் அவநம்பிக்கையான இந்த நேரத்தில், ஒரு போர்வீரன் நாட்டைக் காக்க எழுகிறான். மன்னர் சுஹேல்தேவ். ஒரு சிறிய ராஜ்யத்தின் ஆட்சியாளர், அவர் தனது தாய்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கிறார், அதற்காக தனது அனைத்தையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார். ஒரு கடுமையான கிளர்ச்சியாளர். ஒரு கவர்ச்சியான தலைவர். அனைவரையும் உள்ளடக்கிய தேசபக்தர். தைரியம் மற்றும் வீரத்தின் இந்த பிளாக்பஸ்டர் காவிய சாகசத்தைப் படியுங்கள், இது உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனைக் கதை, இது அந்த சிங்க இதயம் கொண்ட போர்வீரனின் கதையையும் அற்புதமான பஹ்ரைச் போரையும் விவரிக்கிறது."
Amish Tripathi (Author), Sengamalanathan (Narrator)
Audiobook
"இது ஒரு மனிதனின் கதை. காலம், தெய்வமாய் மாற்றிய ஒரு மனிதனின் கதை. கி மு 1900. இன்றைய இந்தியர்கள், சிந்து சமவெளி நாகரீகம் என்று தவறாகக் குறிப்பிடும் பகுதி. அன்று வாழ்ந்தவர்களோ, அந்த நிலப்பரப்பை மெலூஹா என்றழைத்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன், உலகின் மிகச் சிறந்த அரசர்களுள் ஒருவரான இராமபிரான் உருவாக்கிய ஏறக்குறைய அற்புதமான சாம்ராஜ்யம். ஒரு காலத்தில் புகழும் பெருமையுமாய் சிறந்து விளங்கிய இதன் ஆட்சியாளர்களான சூர்யவம்சிகள், பல ஆபத்துக்களைச் சந்திக்கின்றனர். அவர்களது ஜீவநதி சரஸ்வதி, வற்ற ஆரம்பித்து, முற்றுமாய் அழியத் துவங்கிவிட்டது. கிழக்கே வாழும் சந்திரவம்சிகளிடமிருந்து, பயங்கர தீவிரவாதித் தாக்குதல்களையும் சந்திக்கின்றனர். நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் விதமாய், சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு, விகாரமடைந்த முகமும் உடலுமாய், பல அற்புத சக்திகள் படைத்த நாகர்கள் என்னும் குலத்தாருடன் சந்திரவம்சிகள் கைகோர்த்துக் கொண்டது போலவும் தெரிகிறது. இப்போது சூர்யவம்சிகளின் ஒரே நம்பிக்கை, என்றோ அவர்களிடையே பரவி, வேரூன்றிவிட்ட ஒரு ஆருடம்: 'தீமை தலை விரித்தாடும் போது; அதன் கொடூரம் எல்லை மீறி, எதிரிகள் முழுமையாய் வென்றுவிட்டார்கள்; இனி, போக்கிடம் இல்லையென்ற நிலையேற்படும்போது - ஒரு வீரன் வருவான்.' சிவா முத்தொகுதியில் இதுவே முதல் புத்தகம். சாதாரண மனிதன் ஒருவனின் பிறவிப்பயன், அவனை நம் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாய், மகாதேவராய் மாற்றிய கதை."
Amish Tripathi (Author), Sengamalanathan (Narrator)
Audiobook
"ஜீவ பூமி ஒளரங்கசீப் காலத்தில் நடந்ததாக புனையப்பட்ட சரித்திர நாவல். கற்பனைக்கதை என்றாலும் கதை நடந்த காலத்தில் ராஜபுத்திரர்களுக்கும் முகலாயர்களுக்கும் இருந்த பகை மற்றும் நட்பு என்ற முரண்பாடுகள் கதையின் ஊடே கதாசிரியர் சாண்டில்யன் அவர்களால் அழகாக விருவிருப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது. சித்தோர்கார் மந்திரியும் சேனாபதியுமான தயால்சாவின் மருமகள் அகிலாவை ரதன் சந்தாவத் ஸலூம்ப்ரா அடைந்தானா இல்லையா என்றறிய கேளுங்கள் ஜீவ பூமி ."
Sandilyan (Author), M S Poonguzhali, Sengamalanathan (Narrator)
Audiobook
"கௌதம புத்தரின் நேரடிச் சீடர்கள் பட்டியலில் போதி தர்மரின் பெயர் இல்லை. புத்தர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவரும் அல்ல. காரணம், இருவருக்கும் இடையேயான கால இடைவெளி சுமார் ஆயிரம் ஆண்டுகள். என்றாலும், போதி தர்மரை இரண்டாவது புத்தர் என்று கொண்டாடுகிறார்கள்; ஆராதிக்கிறார்கள்; பின்பற்றுகிறார்கள். எனில், யார் இந்த போதி தர்மர்? போதி தர்மரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகின்ற அத்தனைபேரும் எழுப்பும் முதல் மற்றும் முக்கியமான கேள்வி இதுதான். கூடவே, அவருடைய பூர்வ வாழ்க்கை குறித்த பல சர்ச்சைகளும் எழுப்பப்படுகின்றன. போர்க்கலை உள்ளிட்ட அவருடைய பங்களிப்புகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அத்தகைய சர்ச்சைகளுக்கும் கேள்விகளுக்கும் உரிய பதில்களை நோக்கிய தேடல் முயற்சியே இந்தப் புத்தகம். அந்தத் தேடலைத் தொடங்கியபோது மூன்று உண்மைகளை உணரமுடிந்தது. · புத்தரைப் புரிந்துகொள்ளாமல் பௌத்தத்தைப் புரிந்துகொள்ளமுடியாது. · பௌத்தத்தைப் புரிந்துகொள்ளாமல் போதி தர்மரைப் புரிந்துகொள்ள முடியாது. · போதி தர்மரைப் புரிந்துகொள்ளாமல் ஜென் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாது. புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். மேலே இருக்கும் மூன்று உண்மைகளையும் உணர்வீர்கள். கூடவே, புத்தர், போதி தர்மர் இருவரும் சொன்ன செய்திகளையும்!"
Azhagar Nambi (Author), Sengamalanathan (Narrator)
Audiobook
[Tamil] - Vennilave... Vennilave
"செம்பகசேரி தரவாட்டின் வாரிசாகிய கேசவன் குட்டியை மணக்கிறாள் ரோகிணி என்னும் அதிர்ஷ்ட பெண். அவர்களுக்கு மகளாய் பிறக்கும் தேவி பிறப்பு முதலே விசித்திரங்களையும் மாயாஜாலங்களையும் கொண்டவளாக இருக்கிறாள். அதிர்ஷ்ட தேவதையாக இருக்கும் அவளை அழிக்க நினைக்கும் அந்த ஊரை சேர்ந்த ராகவன் பிள்ளையும், மாதவன் நாயரும், அவர்கள் துணையாய் கொண்ட ஜோசியர்களுக்கும் நம்பூதிரிகளுக்கும் நேரும் கதியை சுவாரஸ்யமாக எடுத்துரைப்பதோடு மாந்திரீகம், ஜோசியம், கந்தர்வர்கள், மோகினிகள் போன்ற அமானுஷ்ய விஷயங்களை விறுவிறுப்புடனும் சொல்லும் கதைதான் வெண்ணிலவே வெண்ணிலவே!"
Kottayam Pushpanath (Author), Sengamalanathan (Narrator)
Audiobook
"The village of Vettaikara Mangalam has a strange rule. Only if the village deity Karuppusamy approves, will the villagers do anything. A doctor falls in love with Ratna, a young girl from the village. When he proposes, she asks him to seek the approval of Karuppusamy. Who is this Karuppusamy? Doctor Neena comes in search of the answer. What does she find out? Listen to Vittu Vidu Karuppa. வேட்டைக்காரன் மங்கலம் கருப்புசாமி துடியான சாமி. இந்த சாமி உத்தரவு தந்தால் தான் யாரும் எதையும் செய்யலாம். இந்த ஊரை சேர்ந்த ரத்னாவை டாக்டர் ஒருவர் காதலிக்க ரத்னா கருப்பு உத்தரவு தராது என்னை காதலிக்காதே என்கிறாள். கருப்பு யார் காதலிக்க அனுமதி தர? டாக்டர் நீனா என்பவள் உண்மையை கண்டறிய வருகிறாள். கண்டுபிடித்தாளா? ஒரு கிராமத்து மர்மம் தான் விட்டு விடு கருப்பா!"
Indra Soundarrajan (Author), Sengamalanathan (Narrator)
Audiobook
"பசித்த மானுடத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் 'மாற்றம்' என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்கிவிடலாம். அப்படி பெரும்பான்மை போக்கை நிர்ணயித்த மாற்றத்தின் முகவர்கள் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் என்று பல்வேறு அடையாளங்களைத் தாங்கி நிற்கின்றனர். அவர்களை தனி ஒருவனின் 'ஆசை'யைத் தூண்டி ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியவர்கள், சமூகத்தின் சமநிலை கருதி ஆசையை கட்டுக்குள் வைக்கக் கற்றுக்கொடுத்தவர்கள் என்று இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்திவிடலாம். அப்படி முதல் தரப்பினரில் ஒருவர் 'உலகமயம்' என்னும் மந்திரக்கோலை நீட்டி ஒவ்வொருமுறை 'வளர்ச்சி' என்ற சொல்லை வெவ்வேறு காலகட்டங்களில் உச்சரித்தபோதும் புதிய வஸ்துகள் தோன்றின. ஆனால் இரண்டாம் தரப்பினர்கள் கணித்ததைப்போல் அவற்றின் மறுசுழற்சிக்கு வடிகால் இல்லாததால் இதுவரை அழிவிற்குப் பயன்படாத அறிவியல் கண்டுபிடிப்பு என்று எதுவுமே மிஞ்சவில்லை என்பதுதான் சாபக்கேடு. 'ஆசைகளையும் துறக்காமல், அழிவையும் விதைக்காமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல விளைவுகளை மட்டுமே தரக்கூடிய மாற்றங்கள் சாத்தியமா?' என்று தேடத்துவங்கியவர் ஜிப்2, பே-பால், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பணி, ஹைப்பர்லூப், ஓப்பன் ஏஐ, சோலார் சிட்டி, கிகா ஃபேக்டரி ஆகிய நிறுவனங்களை வளர்த்தெடுத்தார். அவர் பெயர்தான் எலான் மஸ்க்! எலான் மஸ்க்கின் வாழ்வின் வழியாக, அவரது சாதனைகள் ஊடாக, அவரது இலக்குகளை எட்டும் பயணத்தின் பலனாக நாம் என்ன பெறப்போகிறோம் என்றால் அவரது முயற்சிகள் எல்லாம் வெற்றிபெற்று ஒன்றோடொன்று தொடர்புகளை ஏற்படுத்தி இணையும் புள்ளியில் உலகமே 'எலான்மயம்' ஆகியிருக்கும்."
Karthik Sreenivas (Author), Sengamalanathan (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer
Join our community for the latest bookish news, reading recommendations, exclusive opening extracts, author events and competitions. It\'s all free. And enter a monthly draw to win a £50 Gift Card. See past winners here
Join Our Community