Browse audiobooks narrated by Bavya Keerthivasan, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"காலங்கள்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றின் மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள், அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் சமகாலப் பெண்கள் பிரச்சினைகளிலிருந்து அணுகும் ஒரு சமூக ஆய்வு நூல். இது வேதங்கள், திருமணச் சடங்குகள், மந்திரங்கள், மத குருமார்கள் எப்படிப் பெண்ணை அடிமைத்தனம் எனும் 'பாசிக்குட்டையில்' பிணித்துவைத்திருக்கின்றனர் என்பதை ஆதாரங்களுடனும் அறச்சீற்றத்துடனும் முன்வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. கற்பு, குடும்பம், பதிதன்மை என அமைக்கப்பட்ட மரபுகளைக் கட்டுடைக்கும் பெண்ணிய ஆராய்ச்சி ஆயுதம்."
Rajam Krishnan (Author), Bavya Keerthivasan (Narrator)
Audiobook
[Tamil] - Aadhiyile Nagaramum Naanum Irundhom
"'சென்னை நகரத்தைக் குறித்து இதுவரை எழுதப்பட்ட அனைத்துப் புத்தகங்களிலிருந்தும் இந்நூல் முற்றிலும் வேறுபடுகிறது. ஏனெனில் இது அந்நகரத்தின் வரலாறு அல்ல. அந்நகரத்திலேயே பிறந்து வளர்ந்த ஒருவனின் கதையுமல்ல. ஊர் ஊராக, பேட்டை பேட்டையாக, தெருத்தெருவாக சுற்றிக் காண்பிக்கும் சுற்றுலாக் கையேடும் அல்ல. இது ஒரு தனி மனிதனின் ஆன்மா, ஒரு பெரு நகரத்தின் ஆன்மாவுடன் இரண்டறக் கலக்கும் பரவசக் கணத்தைப் படம்பிடிக்கிறது. 'சென்னையைத் தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்துகிறது' என்று பா. ராகவன் சொல்வதைச் சிறிது நுணுக்கமாகக் கவனித்தால் பிரமிப்புகளையும் வியப்புகளையும் தாண்டி, இந்நகரவாசம் ஒவ்வொரு தனி மனிதனையும் எவ்வாறு வடிவமைக்கிறது என்பதைக் காணலாம்.'"
Pa Raghavan (Author), Bavya Keerthivasan (Narrator)
Audiobook
"கடன் நட்பை முறிக்குமா? கிராமத்துப் பள்ளிக் கூட ஆசிரியருக்கும், சாஸ்திரிகளுக்கும் 50 வருட நட்பு. ஆனால் ஆசிரியர், சாஸ்திரியின் பெண் கல்யாண சமயத்தில் கொடுத்து உதவிய கடன் திரும்பவில்லை. கொடுத்த கடனைத் தனக்கு அவசியப் பணத்தேவை வருகையில் கேட்டு நட்புக்குப் பங்கம் விளைவிக்கலாமா, கூடாதா? குழம்பிய ஆசிரியருக்கு தீர்வுதான் என்ன? கதையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். Does a loan from a friend damage friendship? The friendship between this village school teacher and a local priest was 50 years old. The money given as loan to the priest by the school teacher at the crucial time of the marriage of the priest's daughter was still not repaid. Should he ask his friend to pay up when he has dire need of money? Will it leave a bitter taste in friendship? What is the solution? Find out from the story."
Sandeepika (Author), Bavya Keerthivasan (Narrator)
Audiobook
"'கல்யாணமாகி வெளி நாட்டில் வாழ்ந்து பின் கணவன், குழந்தையுடன் நாட்டுக்குத் திரும்பி வந்து விடுகிறாள் பேரழகியான கதாநாயகி. அவளுக்கு ஏனோ தான் முன்பு கண்டு மயங்கிய ஒரு உறவுக்காரனை மீண்டும் காணவேண்டும் என்ற ஒரு குறுகுப்பு. தன் அழகில் சற்றும் மயங்காமல் தன்னை ஒதுக்கி, வேறு பெண்ணைக் கட்டிய அவன் இன்று எப்படியிருக்கிறான் என அறியும் ஆவல். அவள் சந்தித்தாளா? என்ன நிகழ்ந்தது? This rich and very beautiful girl returns to her native Chennai from Singapore, after a couple of years of married life,. There is a dearth of romance in her married life. She gets curious to meet the young man on whom she had a crush earlier. He too is already married. It was he who had rejected the proposal to marry her earlier. What is her reaction when she meets her ex crush?'"
Sandeepika (Author), Bavya Keerthivasan (Narrator)
Audiobook
"Netra Raghunathan is a front office worker at a 5 star hotel in Mumbai. One day she checks in a long stay guest from an equipment company in Boston - it's a really good looking, young, tall, grey eyed American named Mark Donovan. The entire female staff of the hotel goes googly-eyed in front of him, but he seems to have taken a shine to Netra. Sparks fly between Netra and Mark, but Netra is extremely conflicted - after all, what future does this have? This story uncovers the sweet ordeal of an American living with a middle-class tam-bhram family - the cultural shock, stereotypes, hilarious situations and a surprising turn of events confirming that when it's right, love does conquer all."
Rachna Mahadevan (Author), Bavya Keerthivasan, Deepika Arun, Saki, Santosh Nair (Narrator)
Audiobook
"மூங்கில் கோட்டை' என்ற இந்த நாவல், இளவயதில் அரியணை ஏறிய பாண்டியன் நெடுஞ் செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இளவயதுள்ள நெடுஞ்செழியன், சோழர், சேரர் முதலிய எழுவர் படைகளைத் தலையாலங் கானத்தில் முறியடித்து சேரமானான யானைக் கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும் சிறைப்பிடித்தான். சிறைப்பிடித்ததன்றி, சிறை வைத்த இடத்தைச் சுற்றிலும் அகழிகளை வெட்டி அவற்றின் மேல் மூங்கில்களைப் பரப்பி மறைத்து வைத்ததால், சேரனை விடுவிக்க வந்த யானைப் படைகள் அந்த அகழிகளில் வீழ்ந்து அழிந்து போனதாக வரலாறு கூறுகிறது. இத்தகைய கொடுஞ் சிறையினின்று யானைக்கண் சேய் தந்திரத்தால் தப்பியதாகவும் குறிப்புகள் காணப் படுகின்றன."
Sandilyan (Author), Bavya Keerthivasan, Veera (Narrator)
Audiobook
[Tamil] - Vaazhkaikku Oru Veera Vanakkam
"சுதா மூர்த்தியின் நூல்களில் அதிகமான பாராட்டுக்களைப் பெற்றுள்ள நூல் இது. சுதா மூர்த்தியின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைத் தொகுப்பில், மனித இயல்பின் பல்வேறு பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. எடுத்துக்காட்டாக - பெறுவதிலும் பணிவு இருக்கிறது என்பதை இந்நூலாசிரியருக்குக் கற்றுக் கொடுக்கும் படிப்பறிவில்லாத ஒரு பழங்குடியினத் தலைவர். மரணப்படுக்கையில் இருக்கும்போதுகூட தனக்கு உதவியளித்தவருக்கு நன்றி சொல்ல மறக்காத ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி. பெற்றத் தந்தையையே நாதியற்றவர் என்று கூறி அவரை ஓர் அனாதை இல்லத்தில் சேர்த்துவிடும் ஓர் அற்ப மனிதர். இது போன்ற பலவிதமான மனிதர்களை சுதா மூர்த்தி இதில் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அவருடைய எளிய நடையும் நேரடியாக விஷயத்திற்கு வரும் பாங்கும் வாசகர்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை."
Sudha Murthy (Author), Bavya Keerthivasan (Narrator)
Audiobook
"'கன்னடத்துப் பைங்கிளி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை. பரதக்கலை, வாய்ப்பாட்டு, மேடை நாடகம் என்பன போன்ற கூடுதல் முகவரிகள் ஏதுமில்லை. நடிப்பில் வழி காட்டுவதற்கு போதிய பின்புலமும் இல்லை.ஆனாலும், தென்னகத் திரையுலகின் உச்சாணிக் கொம்பைத் தொட்டவர் சரோஜாதேவி. அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள். கலையின் மீதான பக்தியும் சலியாத உழைப்பும். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என்ற தமிழ் சினிமாவின் மூவேந்தர்களும் கொண்டாடி மகிழ்ந்த ஒரே அபூர்வத்தாரகையாக மின்னினார் சரோஜாதேவி. போர்காலத் தமிழ் சினிமாவின் மகாத்மியமும் அவரே! மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். படச் சுவரொட்டிகளில் சரோஜாதேவியின் ஸ்டில் இல்லாவிட்டால் விநியோகஸ்தர்கள் படப்பெட்டியை தூக்க மறுத்து பின் வாங்கினார்கள் என்பது சரோஜாதேவியின் முக்கியத்துவத்துக்கான அளவுகோல். திரையுலகில் என்னுடைய துரித வளர்ச்சிக்குக் காரணம் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரம் என்று சரோஜாதேவியும் பதிவு செய்திருக்கிறார். சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து பா.தீனதயாளனின் எழுத்தில் உருவாகியிருக்கும் மற்றொரு முக்கியப் பதிவு இது.'"
Dheenadayalan (Author), Bavya Keerthivasan, Jeyalakshmi Narayanan (Narrator)
Audiobook
"'பெரும்பாலும் ஆண்களே கோலோச்சுகின்ற தமிழ்த் திரையுலகில் உருவான முன்மாதிரி இல்லாத துருவ நட்சத்திரம் சாவித்திரி. நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையான இன்னொரு நடிகரைச் சொல்வதற்கு இன்னமும்கூட தயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் சிவாஜி சிம்மாசனத்தில் இருந்த காலகட்டத்திலேயே நடிகையர் திலகம் என்ற புகழ்மொழி சாவித்ரிக்கு மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. இதுதான் சாவித்ரியின் அற்புதமான நடிப்புத்திறனுக்கான ஆகச் சிறந்த கல்வெட்டு. கலையின் மீதான ஆர்வமும், அதை உயரிய வகையில் வெளிபடுத்த வேண்டும் என்கிற முனைப்பும், அளவிடமுடியாத ஆற்றலும், தீராத உழைப்பும் சாவித்ரியின் வெற்றிக்கான விதைகள்.வெற்றிகளை திகட்ட திகட்ட சுவைத்த சாவித்ரியின் இறுதி வாழ்க்கை சோகத்தால் மட்டுமே நிரம்பியிருந்தது என்பது பெரும் முரண். நூலாசிரியர் பா.தீனதயாளனின் எழுத்தில் உருவாகியிருக்கும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தமிழ் சினிமா வரலாற்றின் தவிர்க்க முடியாத அத்தியாயம்.'"
Dheenadayalan (Author), Bavya Keerthivasan (Narrator)
Audiobook
[Tamil] - Ullangaiyil Udal Nalam
"`புகை, மது உடல் நலத்திற்குக் கேடு என்ற வாசகத்தை திரைப்படங்களிலும், அட்டைகளிலுமச்சிடும் எந்த அரசும் உற்பத்தியை நிறுத்தி அதன் பொருட்டு வரும் வருமானத்தை இழக்கத் தயாராக இல்லை. ' `ஜாகிங் போன்றவை நான்கு கால் பிராணிகளுக்கானது. உண்மையில் ஜாகிங் தரும் எல்லா பயன்களையும் நடைப்பயிற்சியே தருகிறது. உடற்பயிற்சி உபகரணங்கள் விற்கும் நிறுவனங்கள் விளம்பரத்திற்காக சொன்ன பொய்யை நம்பி இன்று ஊரே ஓடிக்கொண்டிருக்கிறது.' `சரியாகத் தூங்காதவர்கள் மனநோயாளியாகி விடுவார்கள் என்கிற கூற்றில் உண்மை இல்லை. மனநோய் உள்ளவர்கள் பொதுவாகக் குறைவாகத் தூங்குபவர்கள். தூக்க மாத்திரை தயாரிக்கும் நிறுவனங்கள் ஆராய்ச்சி என்ற போர்வையில் திட்டமிட்டு பரப்பிவிட்ட கட்டுக்கதைகள் இது.' `கொழுப்புச் சத்து உயிரின் சாரம். ஒருவர் ஒட்டுமொத்தமாகக் கொழுப்புச் சத்தைத் தவிர்த்து வந்தால், மிக விரைவில் முதுமை அடைந்துவிடுவார். ஏனென்றால் உயிரணு (செல்) புதுப்பிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. நம் கொழுப்புச் சத்து அளவைக் குறைப்பதற்கான ஒரே வழி நம் பெற்றோர்களை மாற்றிக்கொள்வதுதான்!' `நீரிழிவு நோயாளிகளுக்கு கோதுமையைவிட அரிசியே நமது சீதோஷ நிலையில் சிறந்த உணவு.' இவற்றையெல்லாம் சொல்லியவர் வெறும் யூட்யூப் பிரபலம் அல்ல. நீண்ட நெடிய மருத்துவ அனுபவம் கொண்ட கார்டியாலஜிஸ்ட். மருத்துவ மற்றும் சமூக பங்களிப்பிற்கான நாட்டின் உயரிய அங்கீகாரமான பி.சி.ராய் விருது பெற்றவர்- பத்ம பூஷன் டாக்டர்.பி.எம்.ஹெக்டே. நவீன மருத்துவத்தின் அபத்தங்களையும், அபாயங்களையும் பற்றி டாக்டர். ஹெக்டே தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்."
B. M. Hegde (Author), Bavya Keerthivasan (Narrator)
Audiobook
[Tamil] - Moovaayiram Thaiyalgal
"இந்நூலில் இடம்பெற்றுள்ளன, மனித இயல்பின் அழகையும் அவலத்தையும் திரை விலக்கிக் காட்டுகின்ற ஒவ்வொரு கதையும் சிறப்பாகும வாழப்பட்ட ஒரு வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. பல சமயங்களில், துணிச்சலாக மேற்கொள்ளப்படுகின்ற சாதாரண நடவடிக்கைகள்தான் மற்றவர்களுடைய வாழ்வின்மீது அளப்பரிய தாக்கம் ஏற்படுத்துகின்றன. இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் பணிகள் வாயிலாகவும், தன்னுடைய சொந்த இளமைப்பருவம், குடும்ப வாழ்க்கை மற்றும் பயணங்கள் வாயிலாகவும், சுதா மூர்த்தி, இத்தகைய பல கதைகளைத் தன் வாழ்வில் எதிர்கொண்டுள்ளார். அவர் அக்கதைகளைத் தெளிவாகவும் நம் இதயங்களைத் தொடும் விதத்திலும் விவரித்துள்ளார். தன்னுடைய பணிகள் எப்படி தேவதாசி சமூகத்தின்மீது தாக்கம் ஏற்படுத்தியது என்பதையும், ஒரு பொறியியல் கல்லூரியில் தனியொரு மாணவியாகத் தான் எதிர்கொண்ட சவால்களையும், தன்னுடைய தந்தையின் அன்பால் விளைந்த உத்வேகமூட்டும் பின்விளைவுகளையும் பற்றி அவர் இந்நூலில் பேசுகிறார். உலக அளவில் இந்தியத் திரைப்படத்தின் வீச்சைக் கண்டுகொண்டதிலிருந்து கிடைத்த மகிழ்ச்சி, இந்தியக் காய்கறிகளின் மூலாதாரங்கள் ஆகியவற்றில் தொடங்கி, தோற்றத்தைக் கொண்டு மற்றவர்களை எடைபோடும் மேலோட்டமான பார்வைவரை, இக்கதைகள் அன்றாடப் போராட்டங்களையும் வெற்றிகளையும் வெளிப்படுத்துகின்றன."
Sudha Murthy (Author), Bavya Keerthivasan (Narrator)
Audiobook
[Tamil] - Moovaayiram Thaiyalgal
"இந்நூலில் இடம்பெற்றுள்ளன, மனித இயல்பின் அழகையும் அவலத்தையும் திரை விலக்கிக் காட்டுகின்ற ஒவ்வொரு கதையும் சிறப்பாகும வாழப்பட்ட ஒரு வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. பல சமயங்களில், துணிச்சலாக மேற்கொள்ளப்படுகின்ற சாதாரண நடவடிக்கைகள்தான் மற்றவர்களுடைய வாழ்வின்மீது அளப்பரிய தாக்கம் ஏற்படுத்துகின்றன. இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் பணிகள் வாயிலாகவும், தன்னுடைய சொந்த இளமைப்பருவம், குடும்ப வாழ்க்கை மற்றும் பயணங்கள் வாயிலாகவும், சுதா மூர்த்தி, இத்தகைய பல கதைகளைத் தன் வாழ்வில் எதிர்கொண்டுள்ளார். அவர் அக்கதைகளைத் தெளிவாகவும் நம் இதயங்களைத் தொடும் விதத்திலும் விவரித்துள்ளார். தன்னுடைய பணிகள் எப்படி தேவதாசி சமூகத்தின்மீது தாக்கம் ஏற்படுத்தியது என்பதையும், ஒரு பொறியியல் கல்லூரியில் தனியொரு மாணவியாகத் தான் எதிர்கொண்ட சவால்களையும், தன்னுடைய தந்தையின் அன்பால் விளைந்த உத்வேகமூட்டும் பின்விளைவுகளையும் பற்றி அவர் இந்நூலில் பேசுகிறார். உலக அளவில் இந்தியத் திரைப்படத்தின் வீச்சைக் கண்டுகொண்டதிலிருந்து கிடைத்த மகிழ்ச்சி, இந்தியக் காய்கறிகளின் மூலாதாரங்கள் ஆகியவற்றில் தொடங்கி, தோற்றத்தைக் கொண்டு மற்றவர்களை எடைபோடும் மேலோட்டமான பார்வைவரை, இக்கதைகள் அன்றாடப் போராட்டங்களையும் வெற்றிகளையும் வெளிப்படுத்துகின்றன."
Sudha Murthy (Author), Bavya Keerthivasan (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer