Browse audiobooks by Rajam Krishnan, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"காலங்கள்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றின் மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள், அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் சமகாலப் பெண்கள் பிரச்சினைகளிலிருந்து அணுகும் ஒரு சமூக ஆய்வு நூல். இது வேதங்கள், திருமணச் சடங்குகள், மந்திரங்கள், மத குருமார்கள் எப்படிப் பெண்ணை அடிமைத்தனம் எனும் 'பாசிக்குட்டையில்' பிணித்துவைத்திருக்கின்றனர் என்பதை ஆதாரங்களுடனும் அறச்சீற்றத்துடனும் முன்வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. கற்பு, குடும்பம், பதிதன்மை என அமைக்கப்பட்ட மரபுகளைக் கட்டுடைக்கும் பெண்ணிய ஆராய்ச்சி ஆயுதம்."
Rajam Krishnan (Author), Bavya Keerthivasan (Narrator)
Audiobook
[Tamil] - Suzhalil Midhakkum Deepangal
"தமிழகத்தில் படித்த பெண்கள் படும் அவலத்தை இந்நாவலில் சித்தரித்துள்ளார் திருமதி ராஜம் கிருஷ்ணன். நம் நாட்டு பண்பாட்டை கைவிட இயலாமலும், மேலை நாட்டு நாகரிகத்தையும் முழுமையாகப் பின்பற்ற இயலாமலும் குழம்பித் தவிக்கும் பெண்களின் நிலையை விளக்குகிறது. இந்த சூழலில் சிக்கித் தவிக்கும் பெண்கள் செல்ல வேண்டிய பாதையையும் தெளிவாக்குகிறது இந்நாவல்."
Rajam Krishnan (Author), Srinithya Sundar (Narrator)
Audiobook
"ஒரு நாட்டின் முதுகெலும்பே அந்நாட்டின் விவசாயம் தான் கடவுள் என்ற முதலாளியின் ஒரே தொழிலாளி விவசாயி. சங்க இலக்கியங்களில் 'வரப்புயர நீருயர, நீருயர நெல்லுயர, நெல்லுயரக் குடியுயர ,என்று உழவின் மேன்மையைப் பற்றி ஒளவைப்பிராட்டியும் 'சுழன்று மேர்ப்பின்ன துலகம்' என்றும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்றும் வள்ளுவர் இத்தொழிலின் புகழை இசைக்கிறார்கள். அப்படிப்பட்ட உழவுத்தொழில் புரியும் நம் விவசாயிகளின் நிலை தற்ப்போது என்ன? இப்புதினத்தில் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் வாழ்க்கையும் அவர்கள் சந்திக்கும் பிரட்சனைகளையும், அவர்களின் உழைப்பை சுரண்டும் நிலச்சுவன்தார்களையும் அந்த ஆண்டைகள் தங்கள் பாதுகாப்பிற்க்காக எற்ப்படுத்தி வைத்திருக்கும் மதம், சாதி என்ற சாக்கடைகளையும் அழகாக பிம்பப்படுத்தியிருக்கிறார்."
Rajam Krishnan (Author), Veera (Narrator)
Audiobook
[Tamil] - கோடுகளும் கோலங்களும் - Kodugalum Kolangalum: Womens Empowerment - சமூக நாவல்
"இந்த நாவல் ‘கோடுகளும் கோலங்களும்’, பயிர்த் தொழிலையும் அதில் ஈடுபடும் பெண்களின் வாழ்வையும் மையமாக்கி எழுதப்பட்டதுதான். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் பார்வையைச் செலுத்தி எழுதப்பட்டது. எப்போதுமே, முரணான உண்மைகள் சிந்தையை நெருடும் போது அந்த நெருடலே அதை ஆராய வேண்டும் என்ற உந்துதலைத் தோற்றுவிக்கும். அதுவே படைப்புக்கும் ஆதாரமாகும். காலம் காலமாகக் குருட்டுத் தடங்களில் ஒடுக்கப்பட்டு வந்த இந்திய விவசாயக் குடும்பப் பெண், விழிப்புணர்வு பெற்றிருக்கிறாள். சிந்திக்கும் திறன் இவளுக்கு வந்திருக்கிறது. இவர்களுடைய தன்னம்பிக்கையும் சுயச்சார்பும், உழைப்பின் பயனாகப் பெற்றவை என்றாலும், சிந்திக்கும் சக்தியே அவற்றைச் சாத்தியமாக்கி இருக்கிறது. பயிர்த் தொழிலின் முன் நிற்கும் பிரச்னைகளை, சமூக நோக்கில் எதிர்நோக்குமளவுக்கு, ஒன்றுமே தெரியாமல் உழைத்து உழைத்துத் தேய்ந்திருந்த இந்தப் பெண்கள் விழிப்புணர்வு பெற்றிருக்கின்றன. காலந்தோறும் பெண் என்ற கணிப்பு, பெண்களின் பின்னடைவுகளையே துல்லியமாகக் காட்டுவதான சோர்வையே தந்திருந்தது. பெண்கள், பொதுத்துறைகளிலும், அரசுத் துறைகளிலும் முக்கிய இடங்களில் பொறுப்பேற்றிருப்பதும், அமைப்பு ரீதியிலான பெண்கள் இயக்கங்களின் இடைவிடாத செயல்பாடு சார்ந்த அனைத்து முடிவெடுக்கும் நிறுவனங்களுக்கும் பெண்களைக் குறிப்பாக்கியே வலியுறுத்தி இருக்கின்றன என்றால் மிகையில்லை. இந்தத் திட்டத்தினால் பயனடைந்து, புதிய சாதனை படைக்க ஊக்கம் பெற்று வரும் பல பெண்களைச் சந்திக்க, எனக்கு ஊக்கமும் உறுதுணையுமாக இருந்தவர், டேனிடா திட்டத்தின் ஆலோசகர் திருமதி மங்களம் பாலசுப்ரமணியன் ஆவார். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கற்பட"
Rajam Krishnan (Author), Pushpalatha Parthiban (Narrator)
Audiobook
[Tamil] - குறிஞ்சித் தேன் - Kurinji Then
"குறிஞ்சித் தேன் வாசக நெஞ்சத்தில் மறக்கமுடியாத இடத்தைப் பிடித்தவர் பாரு. நீலகிரி வாழ் மக்களின் (படகர் வாழ்க்கையை) வாழ்வை முறையாகக் கண்டு ஆராய்ந்த பின்னரே எழுதினேன் என்று கூறியுள்ளார் ஆசிரியர் ராஜம் கிருஷ்ணன். மலை மக்கள் வாழ்வை நுணுக்கமாகச் சிந்தனை செய்து கருத்துக்களைப் புலப்படுத்தினேன். 'நான் இந்நவீனத்தை எழுதத் துணிந்த நாட்களில் மனித வாழ்வின் நிலையாய ஈரங்களினின்று அகன்று செல்ல வழிவகுக்கும் வாழ்வின் வேறுபாட்டைக் குறியாகத்தான் புலப்படுத்த எண்ணினேன். இன்று அந்தக் கருத்து வருந்தத்தக்க வகையில் அச்சமூட்டும் உண்மையாகப் பரவியிருக்கிறது. எனினும் மனித மனத்தின் இயல்பான ஊற்றுக் கண்கள் அன்பின் அடிநிலையைக் கொண்டதென்று நம்பிக்கை கொள்வோம். நல்ல நல்ல செயல்கள் பயனளிக்க ஒரு தலைமுறைக் காலம் பொறுத்திருக்கலாம் என்பது ஆன்றோர் வாக்கு.' என்றும் கூறியுள்ளார் ."
Rajam Krishnan (Author), Pushpalatha Parthiban (Narrator)
Audiobook
"பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி பூக்கும் மலைகளில் வண்டுகள் அந்தப் பருவத்தில் பாறை இடுக்குகளிலும் மரக் கொம்புகளிலும் அடையடையாகத் தேன் வைக்குமாம். இந்நாட்களில் குறிஞ்சி பூக்கும் பருவமே தெரியவில்லை. இயற்கை வாழ்வு குலைந்து செயற்கை வாழ்வின் அடித்தள முயற்சி போல் பணத்தைக் குறியாகக் கொண்ட வாழ்வுக்குத் தேவையான தேயிலை - காபியே மலைகளில் நீள நெடுக கண்ணுக்கு எட்டிய வரையில் இடம் கொண்டன. பச்சைத் தேயிலை மணத்தை நுகர்ந்து கொண்டு அந்தக் குறிஞ்சித் தேனின் இனிமையைக் கற்பனையால் கண்டு ஒரு வாழ்வில் நிகழும் மாற்றங்களையும் போராட்டங்களையும் சித்தரிக்கப் பட்டிருக்கும் நாவல் - குறிஞ்சித் தேன் ."
Rajam Krishnan (Author), Dharanya Srinivasan (Narrator)
Audiobook
"காந்தியக் கோட்பாடுகளை உயிராய் மதிக்கும் யமுனா. அவள் உள்ளம் கொள்ளை கொண்ட காதலனாலேயே அக்கோட்பாடுகள் எதிர்க்கவும் பரிகசிக்கவும் படுகின்றன. அவள் தன் பாதையைத் தீர்மானிக்கிறாள். ஆனால் சென்னையிலும் கல்கத்தாவிலும் பாட்னாவிலும் அவள் சந்திக்கும் வெளி உலக நிதர்சனங்களும் திருமண பந்தத்தில் அவளது போராட்டமும் அவளை மாற்றுகின்றனவா? அவள் முடிவென்ன? கொள்கைப்பிடியில் உறுதியாகிறாளா இல்லை நழுவவிடுகிறாளா? இயற்கையழகின் வருணனைகள், பல்வித பாத்திரப்படைப்புகள், உணர்ச்சி பூர்வமான வசனங்கள், விறுவிறுப்பான கதையோட்டம். வாருங்கள், யமுனாவோடு பயணிக்கலாம்! This is the story of Yamuna, who is a strong believer and follower of Gandhiji's principles. To her shock, she realizes that her own lover is against her principles. All her efforts to bring him into her path goes in vain. She decides to stick to her principles.. However her real life experiences in Chennai, Kolkata and Patna and the struggles in her married life make her realize life is not going to be easy. What would Yamuna do? Would she still stick on to her principles? Or move on to live an easy life? Come and travel with Yamuna! Listen to Verukku Neer."
Rajam Krishnan (Author), Jeyalakshmi Narayanan (Narrator)
Audiobook
[Tamil] - Vanadeviyin Maindhargal
"After Lord Rama's coronation, because of some gossip by some random man in his kingdom, he sends pregnant Sita to the forest. Is this fair? Listen to Vanadeviyin Maindhargal and understand Rajam Krishnan's take on this sensitive topic. ஊர் திரும்பி, முடிசூட்டிக் கொண்டபின், தன்னால் கருவுற்ற நாயகியின் மீது எங்கோ ஒலித்த தீச்சொல்லின் கருநிழல் விழுந்ததென்று கானகத்துக்கு விரட்டினான். இது வெறும் நாடு கடத்தலா? எரிபுகுந்து புடம் போட்ட சொக்கத்தங்கமாக வெளியே வந்த நாயகியை - கருவுற்ற செல்வியை, மீண்டும் உயிருடன் கொளுத்தும் துரோகச் செயல் அல்லவோ? இந்தச் செயலின் பின்னே கற்பிக்கப்படும் 'தொத்தல்' நியாயத்தை யாரால் ஏற்க முடியும்? இப்படி ஒரு நிகழ்வு, ஆதிகவியின் இதிகாசத்தில் இடம் பெற வேண்டுமா? ஆதிகவியின் நோக்கம் யாதாக இருக்க முடியும்? கேளுங்கள் சீதையின் கதையை வந்தேவியின் மைந்தர்கள் ஊடே!"
Rajam Krishnan (Author), Kirtana Ragade (Narrator)
Audiobook
[Tamil] - வேருக்கு நீர் - Verukku Neer
"வேருக்கு நீர் ராஜம் கிருஷ்ணன் சாஹித்திய அகாடமி பரிசு பெற்ற நாவல் இந்த நவீனத்துக்கு அந்நாள் (1973) மத்திய சாகித்ய அகாதமி நிறுவனப் பரிசு பெறும் சிறப்பும் கிடைத்தது. பீகார் மாநிலத்தில் அன்று நான் கண்ட அரசியல் கோளாறுகளும், மக்களின் பிரச்னைகளும், முறுக்கேறி நாட்டின் ஆட்சியை மாற்றும் அளவுக்கு நிகழ்ச்சிகள் தொடர்ந்திருக்கின்றன. கங்கை தன் வண்மைக்கரம் கொண்டு தழுவும் இந்த மண்ணில், இந்நாவலில் குறிப்பிட்ட, பிரச்னைகளும், நெருக்கடிகளும் புதிய வலிமைகள் பெற்றிருக்கின்றன. 'நீங்கள் காந்தீயக் கொள்கைகளை ஆதரிக்கவில்லையா அம்மா?' என்று என்னைப் பலர் இந்த நூலைப் படித்துக் கேட்டிருக்கின்றனர். பலதரப்பட்ட மக்கள் கொண்ட மிகப் பெரிய பாரத சமுதாயம் இது. இலக்கிய ஆசிரியர்கள், சிந்தனையாளர், ஒதுங்கியிராமல், தத்தம் வழியிலே நாம் கொண்டிருக்கும் நடைமுறையில், கொள்கைகளில் வெற்றி பெற்ற அம்சம் எது, மறுபரிசோதனைக்குரிய அம்சம் எது என்று சிந்தனை செய்வது அவசியமாகிறது; அதை மக்களிடம் கொண்டு செல்வதும் கடமையாகும் என்று கருதுகிறேன். இந்நூலுக்குச் சிறப்பளித்தவர்களுக்கும், வெளியீட்டாளருக்கும் இதனைப் படித்துக் கருத்துரை கூறியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாசக பெருமக்கள் மக்களாட்சி நிலவும் இந்நாட்டில் ஆற்றல் மிகுந்தவர்கள். அவர்களைச் சிந்திக்கச் செய்ய வேண்டும் என்பதே என் அவா. அன்புடன் ராஜம் கிருஷணன்"
Rajam Krishnan (Author), Shaliny Lingeswaran (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer