Browse audiobooks narrated by Pushpalatha Parthiban, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
[Tamil] - Adhyathma Ramayanam: அத்யாத்ம ராமாயணம்
"Adhyathma Ramayanam an aurality tamil audio book production - ராமாயணம் ஒரே வடிவம் உடைய கதை அல்ல. உலகில் எத்தனையோ ராமாயணங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி சீனா, மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளிலும் ராமாயண வடிவங்கள் உள்ளன. செவ்வியல் மரபில் மட்டுமின்றி நாட்டார் மரபிலும் ராமாயணங்கள் உள்ளன. இத்தகைய பலவிதமான ராமாயணங்களில் ஒன்றுதான் அத்யாத்ம ராமாயணம். ராமனின் கதையைப் பரமசிவன் பார்வதிக்குக் கூறும் வடிவில் அமைந்ததே அத்யாத்ம ராமாயணம். இது வைணவ சம்பிரதாயத்தின் அடிப்படையில் அமைந்தது. இந்த ராமாயணத்தில் ராமன் மனிதப் பிறவி எடுத்தாலும் அவன் தெய்வப் பிறவி என்பதை அவனைச் சுற்றிலும் உள்ளவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அத்யாத்ம ராமாயணத்தின் சுருக்கமான உரைநடை வடிவம்தான் இந்த நூல். நாட்டார் வழக்காற்றியல், பண்டைய இலக்கியங்கள் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தகுந்த ஆய்வாளரான அ.கா. பெருமாள் இந்தநூலை எழுதியுள்ளார். ராமாயணத்தை மிகச் சுருக்கமாக இன்றைய தலைமுறையினருக்கு வழங்கும் இந்த நூல் ராமாயணத்தில் பொதுவாக அறியப்படாத பல கூறுகளையும் உள்ளடக்கியுள்ளது. A. K. Perumal (Author) எழுதி , சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம். Also available on google play and iphone app store and other places"
A. K. Perumal (Author), Pushpalatha Parthiban (Narrator)
Audiobook
[Tamil] - Murpiravi Unmaiyaa Kattukkathaiyaa: முற்பிறவி மறுபிறவி உண்மையா கட்டுக்கதையா
"முற்பிறவி-மறுபிறவி உண்மையா? - an aurality audio book production o இதுகுறித்து சாஸ்திரங்களும் பண்டைய இலக்கியங்களும் விஞ்ஞானமும் என்ன சொல்கின்றன? o முற்பிறவி-மறுபிறவி அனுபவம் கொண்டவர்கள் கூறும் சம்பவங்கள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை? o முற்பிறவி-மறுபிறவி சம்பந்தமாக இதுவரை உலக அளவிலும் இந்தியாவிலும் நடந்த ஆய்வுகள் யாவை? அவற்றின் முடிவுகள் என்ன? இதுபோன்ற பல சந்தேகங்களுக்கு, முற்பிறவி-மறுபிறவி அனுபவம் பெற்றவர்களின் பதிவுகளையும், அவற்றுக்கான ஆதாரங்களையும், அதுகுறித்த ஆய்வாளர்களின் முடிவுகளையும் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். மிகவும் சுவாரசியமாகவும், தெளிவான விளக்கங்களுடனும் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், இதுவரை வெளிவந்த முற்பிறவி-மறுபிறவி பதிவுகளிலிருந்து பெரிதும் மாறுபட்டது என உறுதியாகக் கூறலாம். Aravind Swaminathan (Author) எழுதி , சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம். Also available on google play and iphone app store and other places"
Aravind Swaminathan (Author), Push, Pushpalatha Parthiban (Narrator)
Audiobook
[Tamil] - Kadavulai Kondravan: கடவுளைக் கொன்றவன் - Short Story Collection
" Kadavulai Kondravan - an aurality audio book production - சித்ரூபனின் கதைகளில் கதைக் களன் அழுத்தமாக நிரக்க இருக்கும். வங்கியில் நடக்கும் கதை என்றால் ஒரு வங்கிக் கிளையின் காட்சியாக உங்கள் முன் விரியும். ஒரு குறும்படம் பார்ப்பதைப் போல. இவரது சொற்சித்திரத்தில் ஒலிகளையும் கேட்க முடியும். எனக்குக் கேட்டது. ஆனால் அதைக் கேட்க உங்கள் காதுகள் கூர்மையாக இருக்க வேண்டும். சித்ரூபனின் கதை மாந்தர்கள் எளிய மனிதர்கள். அவர்களில் அதிகாரம் வாய்க்கப் பெற்றவர்கள் வன்மம் கொண்டவர்களாகத் திரிந்து போகிறார்கள். அவர்கள் அப்படித் திரிந்து போனதற்கான காரணங்களைச் சித்ரூபன் ஆராய்வதில்லை. அது அவர் நோக்கமும் இல்லை. அவர்கள் கையில் அதிகாரமற்ற எளியவர்கள் எதிர்கொள்ளும் துயரங்களைச் சொல்லவே - அதாவது படம் பிடிக்கவே - அவர் முனைகிறார், அதில் பெருமளவு வெற்றியும் பெறுகிறார். சித்ரூபனின் கதைகள் நல்ல வாசிப்பனுபவம் தருபவை. ஆனால் அதையும் தாண்டி அவை வேறு பலவற்றையும் உணர்த்துகின்றன. அதனால் இன்றையக் கதைவெளியில் அவை அவசியமானவையாகின்றன. - மாலன் 'சித்ரூபன்' என்ற புனைபெயரில் எழுதி வரும் ராமன் சென்னையில் 1962ல் பிறந்தவர். சிண்டிகேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தமிழின் பிரபலமான வார, மாத இதழ்களில் இவருடைய படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. Chithroopan சித்ரூபன் (Author) எழுதி , சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம். Also available on google play and iphone app store and other places "
Chithroopan (Author), Pushpalatha Parthiban (Narrator)
Audiobook
[Tamil] - Aazhi Peridhu: ஆழி பெரிது: வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல்
"அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான மர்மமான ஆனால் மிக முக்கியமான தருணத்தை விளக்குகிறது. * வேதங்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே! * சோம பானம் என்பது சாராயம்! * திராவிடர்களை ஆரியர்கள் வெற்றிகொண்டார்கள்! * சூத்திரர்களும் தலித்துகளும் அடிமைப்படுத்தப்பட்ட பூர்விகக் குடிகள்! * வேதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையானது! இவை போன்ற போலிக் கட்டுமானங்களை உடைப்பதுடன் இந்த நூல், * வேத காலம் எப்படி இருந்தது? * வேத கால முனிவர்களது சிந்தனையின் வீச்சும் ஆழமும் என்ன? * வேதங்கள் பெண்ணடிமை முறையைப் பேசுகின்றனவா? * வேதப் பண்பாட்டுக்கு இன்று என்ன இடம்? இவை போன்ற கேள்விகளுக்கான விடைகளையும் அளிக்கிறது. ஆனால் வேத ரிஷிகளுக்கு க்வாண்டம் பிசிக்ஸ் தெரிந்திருந்தது, வேத காலத்தில் ஆகாய விமானம் இருந்தது என்பன போன்ற அபத்த அசட்டுத்தனங்களுக்கு இந்த நூலில் இடமில்லை. அரவிந்தன் நீலகண்டன் எழுதி , சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம்"
Aravindan Neelakandan (Author), Pushpalatha Parthiban (Narrator)
Audiobook
[Tamil] - Thirumana Sandangugal: தென்னிந்தியத் திருமணச் சடங்குகள்
"Thirumana Sandangugal Edgar Thurston Produced by : Aurality மற்றும் சுவாசம் பதிப்பகம் Narrated by: புஷ்பலதா பார்த்திபன் தென்னிந்திய திருமணச் சடங்குகள்' என்ற இந்தப் புத்தகம், 1903ல் எழுதப்பட்டு விட்டது. தனிப் புத்தகமாகவும், அவரது சகுனங்கள், மூட நம்பிக்கைகள் பற்றிய புத்தகத்தில் ஒரு பகுதியாகவும் இந்தப் புத்தகம் இருக்கிறது. தென்னிந்தியாவின் பல்வேறு சாதிகளில் நிலவும் திருமணச் சடங்குகளை மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். புத்தகத்தைச் சாதிய ரீதியாக இல்லாமல், சடங்குகளின் வழியே புத்தகத்தை எடுத்து செல்கிறார். பல்வேறு பழக்கவழக்கங்களையும், அவை சாதிகளின் இடையே எப்படி வேறுபடுகிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறார். வரலாறு என்பது பெரும்பாலும் வென்றவர்கள் பார்வையிலும், அதிகாரத்தில் இருப்பவர்களின் நோக்கிலும் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. எனவேதான் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் புத்தகங்கள் வரலாற்றின் இன்னொரு முக்கியமான பக்கத்தைக் காட்டுகின்றது. எழுத்தாளர் Edgar Thurston (Author) எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம்"
Edgar Thurston (Author), Pushpalatha Parthiban (Narrator)
Audiobook
[Tamil] - Asvagosharin Buddha Saritham: அஸ்வகோஷரின் புத்த சரிதம்
"Asvagosharin Buddha Saritham | அஸ்வகோஷரின் புத்த சரிதம் - A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. அஸ்வகோஷர் இயற்றிய புத்த சரித்திரம், சம்ஸ்கிருத மொழியில் மகா காவியமாகப் புகழ்பெற்றது. அஸ்வகோஷர் சம்ஸ்கிருத அறிஞர். மகாகவி. இவர் சம்ஸ்கிருத இலக்கியத்தின் முதல் நாடக ஆசிரியராக அறியப்படுகிறார். அஸ்வகோஷர் அந்தணரானாலும் பிராமண வர்ணாசிரமத்தைத் துறந்து பௌத்தராக மாறி புத்தரின் போதனைகளைத் தன் இலக்கியப் பங்களிப்பின் மூலம் விரிவாகப் பிரசாரம் செய்தார். புத்தரின் வாழ்க்கை வரலாற்றை இருபத்தெட்டு அத்தியாயங்களில் முழுமையாக விவரிக்கிறது இந்த நூல். இந்தக் காவியத்தின் முதல் பகுதியில், புத்தரின் வீடு துறத்தல், தவம், காமதேவனின் தூண்டல்கள், மன்மதனை வென்றது போன்ற சம்பவங்கள் உணர்ச்சிபூர்வமாக அழகான காவிய நடையில் விளக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் புத்தரின் காசி வருகை, சீடர்களுக்குப் போதனை. பெரிய சீடர்களுக்குத் தீட்சை, தந்தையும் மகனும் சந்திப்பு, 'ஜேத்' வளத்தை ஏற்பது. ஆம்ரபாலியின் தோட்டத்தில் ஆயுள் நிர்ணயம், லிச்சவிகள் மீது கருணை, நிர்வாண மார்க்கம், மகா பரிநிர்வாணம், நிர்வாணத்தைப் போற்றும் துதிகள் புத்தரின் உடல் எச்சங்களைப் பகிர்தல் ஆகியவை உள்ளன. இதில், புத்தரின் கொள்கை பற்றிய கூடுதல் விவரம் காணப்படுகிறது. தமிழில் முதன்முறையாக அஸ்வகோஷரின் புத்த சரிதத்தை முழுமையாக விரிவாக எழுதி இருக்கிறார் ராஜி ரகுநாதன். எழுத்தாளர் ராஜி ரகுநாதன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Audiobook by Aurality. Download FREE Aurality app now on play store and or iphone ios store"
Raji Ragunathan (Author), Pushpalatha Parthiban (Narrator)
Audiobook
[Tamil] - Thennindiya Eema Sadangugal: தென்னிந்திய ஈமச் சடங்குகள்
"Thennindiya Eema Sadangugal தென்னிந்திய ஈமச் சடங்குகள் by Edgar Thurston - Translator Vanathi | வானதி Produced by : Aurality மற்றும் சுவாசம் பதிப்பகம் Narrated by: புஷ்பலதா பார்த்திபன் தென்னிந்திய இனவரைவியல் குறிப்புகள்' (Ethnographic Notes In Southern India) எனும் பெரும் திரட்டு 1904ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இன்றைய தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா போன்ற பகுதிகளில் வாழ்ந்த பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களிடம் நிலவிய பலவிதமான சடங்குகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், அடிமை முறைகள் போன்றவற்றை ஆராய்ந்து இதில் எழுதியுள்ளார் எட்கர் தர்ஸ்டன். அந்தத் திரட்டிலிருந்து 'தென்னிந்திய ஈமச் சடங்குகள்' என்னும் இந்தப் பகுதியை மொழிபெயர்த்திருக்கிறார் வானதி. பழங்குடியினர் முதல் பிராமணர்கள் வரை தென்னிந்தியாவின் பல்வேறு இனப் பிரிவு மக்களின் ஈமச்சடங்குகள் விளக்கமாக இதில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு மனிதனின் இறப்புக்குப் பிறகு அவருடைய ஆன்மா மேன்மை அடையும் பொருட்டுச் செய்யப்படும் ஈமச் சடங்குகளில் இருக்கும் நுணுக்கங்களும் அவற்றின் அர்த்தங்களும் வியப்பூட்டுவதாக இருக்கின்றன. நம் பாரம்பரியத்தின் வேர்கள் எவ்வளவு ஆழமானவை என்று புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் நமக்கு உதவுகிறது. எழுத்தாளர் Edgar Thurston (Author) Translator Vanathi | வானதி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம்"
Edgar Thurston (Author), Pushpalatha Parthiban (Narrator)
Audiobook
[Tamil] - Patthumalai Bandham: பத்துமலை பந்தம்
"Pathumalai Bandham by Kalachakkaram Narasimma வழங்குபவர்கள்: Aurality மற்றும் சுவாசம் பதிப்பகம் வாசிப்பவர்: புஷ்பலதா பார்த்திபன் காலச்சக்கரம் நரசிம்மாவின் நாவல்கள் அமானுஷ்யம், ஆச்சரியம், வரலாற்றுத் தகவல்கள் கொண்ட சுவாரசியமான நடையுடன் வாசகர்களை ஒருதனி உலகத்துக்குள் அழைத்துச் செல்பவை. புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்கவிடாமல் தொடர்ந்து படிக்கத் தூண்டும் எழுத்து நடையை கொண்டவை. பத்து மலை பந்தம் என்ற இந்த நாவலும் இதற்கு விதிவிலக்கல்ல.நவ பாசாண முருகன் சிலை மற்றும் அதை சுற்றி நடக்கும் அதிசய சம்பவங்கள் என இந்த நாவல் தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவிற்கு பாய்ந்து செல்லும் விமானத்தை போல பறந்து செல்கிறது. சித்தர்களின் வாழ்க்கை, அவர்களது அரிய செயல்கள், தவறாக நடப்பவர்களுக்கு அவர்கள் அளிக்கும் தண்டனை, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என இந்த நாவல் சொல்லும் விவரங்கள் ஏராளம். சுவாரசியமான ஒரு ஆச்சரிய ஆன்மீக பயணத்தை இந்த நாவல் வாசகர்களுக்கு அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை எழுத்தாளர் Kalachakkaram Narasimma (Author) எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம்"
Kalachakkaram Narasimma (Author), Pushpalatha Parthiban (Narrator)
Audiobook
[Tamil] - Thozhar - Sundaramurthy Nayanaarin Saritham: Novel Vadivil Naalvar Saritham
"Thozhar - Sundaramurthy Nayanaarin Saritham - A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store *சுந்தரமூர்த்தி நாயனார் போகம், யோகம் என்ற இரு நிலைகளிலும் வாழ்க்கையை நடத்தியவர். *இறைவனால் 'தம்பிரான் தோழர்' என்று அழைக்கப்பட்டவர். *இறைவனின் கட்டளைக்கு ஏற்பத் திருமணக் கோலத்துடன் எப்போதும் காட்சி அளிப்பவர். *அந்தணர் குலத்தில் பிறந்து திருமுனைப்பாடி மன்னவன் நரசிங்க முனையரையரால் அரசிளங் குமரனாக வளர்க்கப்பட்டவர். *தன்னலமற்ற சிவத் தொண்டின் மூலம் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர். சுந்தரரின் ஒப்பில்லா இத்தகைய வாழ்க்கையைப் பக்தி மணமும் தமிழ்ச் சுவையும் சொட்ட சொட்ட விரிவாகப் படம்பிடிக்கும் புத்தகம் இது. எழுத்தாளர் சத்தியப்பிரியன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Audiobook by Aurality."
Sathiyapriyan (Author), Pushpalatha Parthiban (Narrator)
Audiobook
[Tamil] - Srimad Bhagavata Puraanam: ஸ்ரீமத் பாகவத புராணம்
"Srimad Bhagavata Puraanam: - ஸ்ரீமத் பாகவத புராணம் - A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store படித்தாலும் கேட்டாலும் புண்ணியம் அளிக்கும் காவியங்களில் ஒன்று ஸ்ரீமத் பாகவத புராணம். மஹாவிஷ்ணுவின் அவதார நோக்கங்களையும், லீலா வினோதங்களையும், தம் பக்தர்களைக் காப்பதற்காகப் பகவான் செய்த அற்புதங்களையும் விவரிப்பதே ஸ்ரீமத் பாகவதம். மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் பத்து. ஆனால் பாகவதத்தில் இருபத்திரண்டு அவதாரங்கள் பற்றிக் கூறப்படுகிறது. இது போன்ற நுணுக்கமான விவரங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீமத் பாகவதத்தின் சம்ஸ்கிருத மூலத்திலிருந்து நேரடியாகத் தமிழில் எழுதப்பட்டிருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு. கஜேந்திர மோட்சம், ப்ரஹ்லாத சரித்திரம், குசேலரின் கதை எனப் பகவானின் பக்தர்களின் கதையையும் இதில் நாம் அறியலாம். பகவானைப் பற்றிய ஞானமே பாகவதம். பகவானோடு நமக்கு இணைபிரியாத இணைப்பை ஏற்படுத்தி மோட்சத்திற்கான பாதையைக் காட்டுகிறது ஸ்ரீமத் பாகவதம். தெளிந்த மனதுடன் ஸ்ரீமத் பாகவதத்தைப் படிப்பதன் மூலம் தீராத நோய்கள் தீரும். நம் பாவங்கள் விலகும். நாம் நினைத்த காரியம் கைகூடும். வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரும் படிக்கும் வகையில், வசீகரிக்கும் மொழியில், எளிமையான நடையில் ராஜி ரகுநாதன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். எழுத்தாளர் ராஜி ரகுநாதன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம்"
Raji Raghunathan (Author), Pushpalatha Parthiban (Narrator)
Audiobook
[Tamil] - Pratap Nama: பிரதாப் நாமா
"Pratap Nama - பிரதாப் நாமா - A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store முகலாய சாம்ராஜ்யத்தை இந்திய மண்ணில் ஏற்படுத்திய பாபர் தொடங்கி ஔரங்கசீப் வரை பலரைப் பற்றியும் நாம் நமது பள்ளிக் காலத்திலேயே அறிந்து கொள்கிறோம். முகலாயர்களை பற்றித் அறிந்துகொண்ட அளவிற்கு, அவர்களை எதிர்த்துத் தீரத்துடன் போர்புரிந்த மண்ணின் மைந்தர்களான ராஜபுத்திரர்களைப் பற்றி அறிந்துகொண்டிருக்கிறோமா என்றால், இல்லை. இக்குறையைப் போக்கும் வகையில் ராணா பிரதாப் குறித்த இந்த நூல் வெளியாகியுள்ளது. போராட்டத்தையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்தவர் பிரதாப். இளமைக் காலம் தொடங்கி மேவாரின் ராணாவாகப் பட்டமேற்றது வரையிலான இவரது வாழ்வு மிகச் சிறப்பாக இப்புத்தகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அக்காலத்திய ராஜபுத்திரர்கள் அனைவரும் அக்பரிடம் பணிந்தபோதிலும் பிரதாப் மட்டும் பணியாமல் அவருடன் சமரசமற்ற போரில் ஈடுபட்டது, போதிய உணவின்றித் தனது மனைவி குழந்தைகளுடன் காடு மேடுகளில் சுற்றித் திரிந்தது, இழந்த பகுதிகளை மீட்டது என்று புத்தகமெங்கும் அரிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. பிறந்த மண்ணையும் பின்பற்றிய சமயத்தையும் தனது இரண்டு கண்களாகக் கருதிய ராணா பிரதாப்பின் வாழ்வு ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய பாடம். உணர்ச்சிப் பெருக்குடன் உயிரோட்டமான நடையில் சக்திவேல் ராஜகுமார் இந்த நூலை எழுதி இருக்கிறார். எழுத்தாளர் சக்திவேல் ராஜகுமார் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் ( Audio book by Aurality) கேட்போம்."
Sakthivel Rajakumar (Author), Pushpalatha Parthiban (Narrator)
Audiobook
[Tamil] - Andhamaan Siraiyil Pannirendu Aandugal: அந்தமான் சிறையில் பன்னிரண்டு ஆண்டுகள்
"Andhamaan Siraiyil Pannirendu Aandugal - A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான வீரர்கள், நாடுகடத்தப்பட்டு அந்தமான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள். அங்குக் கடும் தண்டனைகளுக்கு உள்ளாகிப் பல கொடுமைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளானார்கள். வெகு சிலரின் பதிவுகள் மூலமே அந்தக் கொடுமைகள் வெளி உலகுக்குத் தெரியவந்தன. அந்தப் பதிவுகளில் முக்கியமானது உல்லாஸ்கர் தத்தாவின் பதிவு. அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் பரிந்திர குமார் கோஷுடன் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட உல்லாஸ்கர் தத்தா, சிறையில் கடும் பணிச் சுமையாலும் தண்டனைகளாலும் தீவிர மனச் சிதைவுக்கு உள்ளானார். சிகிச்சை என்ற பெயரில் அவர் மின்சாரத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார். அந்தமான் சிறையிலும், பின்னர் மதராஸ் மனநலக் காப்பகத்திலும் தண்டனைக் காலத்தைக் கழித்த அவரது மனம், கற்பனைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையே ஊசலாடியது. தன் வாழ்க்கையின் இறுதிவரை அவர் இதே மனநிலையுடன்தான் இருந்தார். எழுத்தாளர் Ullaskar Dutta உல்லாஸ்கர் தத்தா (Author), Priya Ramkumar ப்ரியா ராம்குமார் (Translator) எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம்"
Priya Ramkumar (Author), Pushpalatha Parthiban (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer
Join our community for the latest bookish news, reading recommendations, exclusive opening extracts, author events and competitions. It\'s all free. And enter a monthly draw to win a £50 Gift Card. See past winners here
Join Our Community