Browse audiobooks narrated by Srinithya Sundar, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
[Tamil] - Neeyum Bommai Naanum Bommai
"ராஜலிங்கம் என்னும் மிக பெரிய செல்வந்தர் தன் மகளின் சிகிச்சைக்காக உச்சிமலை சித்தரிடம் செல்கிறார்.ஒரு தீவிரவாத கூட்டம் ராஜலிங்கத்தின் சொத்தினை கைப்பற்றுவதற்காக திட்டம் தீட்டுகிறார்கள். சித்தருக்கும் தீவிரவாத கூட்டத்திற்கும் என்ன சம்மந்தம், ராஜலிங்கத்தின் மகள் உயிர் பிழைத்தாளா? தீவிரவாதிகளின் திட்டம் நிறைவேறியதா? மிக விறு விறுப்பாகவும், ஸ்வாரஸ்யமாகவும் கதை நகர்கிறது."
Rajesh Kumar (Author), Srinithya Sundar (Narrator)
Audiobook
[Tamil] - Kanavan amaivathellaam
"'கல்யாண தினத்திலிருந்து தொடங்கியே, அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் கணவனால் ஒரு சுகமும் இல்லை. சாமியார்களின் பின்னால் பைத்தியமாய் அலையும் ஒரு குணம் அவனுக்கு. குழந்தைக்கு நோய் படுத்துகையில், அவனைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டுவருமாறு அவன் அலுவலகலத்திருந்து இவள் மேல் அழுத்தம் கொடுக்கிறார்கள். ஊரில் வந்து தங்கியிருக்கும் பெரிய மடாதிபதியான துறவியை போய் நேரில் எதிர்கொள்கிறாள் இவள். தீர்வு ஏதேனும் கிடைத்ததா? Right from the day of marriage, nothing went right for this woman. Her husband was obsessed with running behind holy men and sannyasins. With her child lying in fever, she was getting pressure from her husband's office to locate him and bring him back. She decides to meet the Sannyasin and the head of a famous Mutt who was presently camping in her city. Did she get any solution to her woes?'"
Sandeepika (Author), Srinithya Sundar (Narrator)
Audiobook
[Tamil] - Suzhalil Midhakkum Deepangal
"தமிழகத்தில் படித்த பெண்கள் படும் அவலத்தை இந்நாவலில் சித்தரித்துள்ளார் திருமதி ராஜம் கிருஷ்ணன். நம் நாட்டு பண்பாட்டை கைவிட இயலாமலும், மேலை நாட்டு நாகரிகத்தையும் முழுமையாகப் பின்பற்ற இயலாமலும் குழம்பித் தவிக்கும் பெண்களின் நிலையை விளக்குகிறது. இந்த சூழலில் சிக்கித் தவிக்கும் பெண்கள் செல்ல வேண்டிய பாதையையும் தெளிவாக்குகிறது இந்நாவல்."
Rajam Krishnan (Author), Srinithya Sundar (Narrator)
Audiobook
"'கரணம் தப்பினால் மரணம் ! புகழ்பெற்ற பழமொழி. ஆனால் இது குட்டி கரணம் பற்றிய பழமொழி என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் கரணம் என்றால் மூலிகை ரகசியம் என்று பொருள். ஒரு குறிப்பிட்ட மூலிகை ரகசியம் உள்ளது. அதன் பெயர் பஞ்ச கரணம். அது ரகசியமாக உள்ளவரை கவலையில்லை. ஆனால அந்த கரண ரகசியம் வெளியே தெரிந்தால், மனித குலம் நாசமடையும். அதனால்தான் கரணம் தப்பினால் மரணம் என்றார், அகத்தியர் . தமிழ் மண் வெறும் மூலிகை காடாக இருந்த காலம். தெற்கே வரும் அகத்தியர் பொதிகை மலைச்சாரலில் தவம் செய்து, தென் பகுதியில் இருக்கும் மூலிகை மர்மங்களை ஆய்வு செய்து உரைக்க, அவருடைய சீடர் புலத்தியர் அதனை சுவடிகளை நூலாக எழுதுகிறார். அந்த நூலின் பெயர் அகத்தியர் 12,000. குறிப்புகளை கூறிக்கொண்டே வரும் அகத்தியர், திடீரென்று புலத்தியரிடம், ''நான் இப்போது உனக்கு பஞ்ச கரணி' என்கிற மூலிகை ரகசியத்தை பற்றி கூறப்போகிறேன். இதனை நூலில் குறிப்பு எடுக்காதே. காரணம் இது ரகசியமாக இருக்க வேண்டும். இதனை காதுகள் வழியாக கேட்டு, மனதில் பதிய வைத்து, யாரையாவது சீடனுக்கு உபதேசிக்க வேண்டும். அவனும் அதனை ரகசியமாக வைத்து அதனை தனது வாரிசுக்கு சொல்ல வேண்டும். இப்படியே அந்த பஞ்ச கரணி ரகசியம் வழிவழியாக செல்ல வேண்டும். அதனை ரகசியமாகவே வைத்திருக்க வேண்டும். காரணம் அதனை வெளியிட்டால், மனிதர்கள் அதனை கொண்டு ஒருவரையொருவர் அழித்து கொண்டு விடுவார்கள். அவ்வளவு ஆபத்தானது பஞ்ச கரணி என்கிறார். காற்று, நீர்,மண் என்று சுரண்டி பணம் பண்ணிய மனிதர்கள், மூலிகை மர்மங்களையும் விற்று காசு பார்த்துவிடுவார்கள் என்று பயந்து எல்லாம் ரகசியமாகவே வைக்கப்படுகிறது. அகத்தியர் புலத்தியருக்கு அந்த ரகசியத்தை கூறுகிறார்."
Kalachakram Narasimha (Author), Srinithya Sundar (Narrator)
Audiobook
"இதன் கதாநாயகி ரங்க நாயகி. ஏழைக்குடும்பத்து பெண்மணி. ஏழை புரோகிதர் கைலாசத்துக்கு வாழ்க்கை படுகிறாள். கணவனுக்கு ஒரு தாயும், இரண்டு தம்பிகளும், மூன்று தங்கைகளும். அவர்களை வாழ வைக்க ரங்கநாயகி குழந்தை பெறவில்லை. இவர்களை தன் குழந்தைகளாக பாவித்து வளர்கிறாள். ஒரு கட்டத்தில் கணவன் மரிக்க, இவர்களை ஆளாக்க வக்கீலாகி, பெரிய கம்பெனியில் லீகல் அட்வைசராகி, பல எதிர்ப்புகளை தாண்டி அவர்களை ஆளாக்கி, இறுதியில் மனநிலை பாதித்து கணவனிடம் போய் சேருகிறாள். உருக்கமான குடும்ப கதை."
Devibala (Author), Srinithya Sundar (Narrator)
Audiobook
"பற்பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த யூதா என்ற அதிபயங்கர பெண்பித்துபிடித்த மந்திரவாதியின் பிடியில் சிக்கும் சோபியாவின் குடும்பம், பலவித துர்சம்பவங்களை எதிர்கொள்கிறது. சோபியாவின் வீட்டில் வேலைசெய்யும் கிளாராவும் , கோவிலகத்தை சேர்ந்த உதயனும் இதை கண்டுபிடித்து அதை தடுக்க மாந்திரிக நம்பூதிரி மற்றும் பாதிரியார் காபிரியேல் உதவியை நாடுகிறார்கள். தெய்வ சக்தியினால் தீய சக்தி எவ்வாறு அழிக்கப்படுகிறது என்பதை சுவாரஸ்யமிகுந்த திகிலூட்டும் அனுபவங்களுடன் அமைந்த கதை 'தாமரைக்குளம்'"
Kottayam Pushpanath (Author), Srinithya Sundar (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer