Browse audiobooks by Kalachakram Narasimha, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"'ஹொய்சாளர்களாலும் அதற்குப்பின் டெல்லி சுல்தான்கள் படையெடுப்பின் காரணமாகவும் ஸ்ரீரங்க ரங்கநாதன் ஒரு தலைமுறைக் காலம் வரை வெளியூர்களில் உலாச் செய்து அதற்குப் பின் மீண்டும் திருவரங்கம் வந்தடைந்தார் என வரலாறு உரைக்கிறது. ஸ்ரீரங்கநாதர் அப்படி உலாச் சென்றதன் பின்னிணியில் சுல்தான்களின் படையெடுப்பு மற்றுமல்ல, அதற்கு நிலத்தைப் பிளந்து வெளிப்பட்ட 'அபரஞ்சிப் பொன்'னால் ஏற்பட்ட விளைவுகள்தாம் காரணம் என்பதை எடுத்துரைத்து, எதனால் ஸ்ரீரங்கநாதர் விக்ரகம் வெளிச் செல்லவும் தாயார் விக்ரகம் மறைத்து வைக்கப்படவும் நேர்ந்தது என்பதை மிக விரிவாகவும், விளக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கிறது 'ரங்கராட்டினம்' என்கிற சரித்திர, ஆன்மீக மர்மப் புதினம். ஸ்ரீரங்கம் ஆலயத்தில் 'ஐந்து குழி, மூன்று வாசல்' என்கிற விஷயம் புகழ்பெற்றது. ரங்கநாதர் வருகிறாரா என்று தாயார் கையை ஊன்றிப் பார்த்ததால் ஏற்பட்டதுதான் அந்த ஐந்து குழிகள் என்று சொல்வார்கள். உண்மயையில் பஞ்சேந்திரியங்கள் என்கிற படுகுழிகளை அடக்கி, 'சித் அசித் ஈஸ்வரன்' என்கிற மூன்று தத்துவங்களைப் புரிந்து கொண்டால் தாயார் நமக்கு பரமபதத்தை அடைய வழிசெய்வாள் என்பதைக் குறிக்கவே 'அந்த ஐந்து குழி மூன்று வாசல்' அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு குழி ஹொய்சாளர்களி்ன அழிவு, ஒரு குழி பாண்டிய சாம்ராஜ்யத்தின் சரிவு என்றெல்லாம் விவரித்துக் கொண்டே வந்துவிட்டு ஐந்தாவது குழிக்குத் தந்திருக்கும் விவரணம் பிரமிக்க வைக்கிறது. ஹொய்சள நாட்டில் (கி.பி.1253) சூரிய கிரகணத்தன்று பூகம்பம் ஏற்பட, மலை பிளந்து, அதன் பிளவுகளில் தூய அபரஞ்சிப் பொன் வெளிப்படுகிறது. செய்தி ஹொய்சள அரசன் வீரசோமேஸ்வரனுக்குப் போகிறது."
Kalachakram Narasimha (Author), Anuradha Kannan (Narrator)
Audiobook
[Tamil] - Athi Malai Devan Part 1
"' 'அத்திமலைத்தேவன்' என்கிற இந்த சரித்திரப் புதினம் பிறந்ததற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. ஒரு சிறு வத்திக்குச்சியின் தீப்பொறி, ஒரு பெருங்காட்டினையே அழித்து விடும்! அப்படி ஒரு இரண்டெழுத்து நடிகையின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சிறு நிகழ்வுதான் இந்த சரித்திர மர்மப் புதினம் தோன்றியதற்கே காரணம் என்றால், உங்களால் நம்ப முடியுமா? விடியலில் கூவும் பறவையின் பெயர் கொண்ட படத்தில் அறிமுகமானவர் அந்த நடிகை. கிடுகிடுவென வளரத் தொடங்கினார்! ஒரு படத்தில், கோவில் ஒன்றில் அந்த நடிகை பாடி ஆடுவது போன்ற காட்சியை எடுக்கத் திட்டமிட்டார் இயக்குநர். அதற்காக காஞ்சி வரதராஜ சுவாமி கோவிலில் இருந்த 'அனந்தசரஸ்' என்னும் குளத்தின் மண்டபத்தின் மீது அபிநயம் பிடிக்க வைத்து படம் பிடிக்க நினைத்தார். தற்செயலாக ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த ஒரு முதியவர் இதனைக் கண்டு அதிர்ந்து போனார். 'வேண்டாம்! அதன் அடியில் அத்திவரதர் எழுந்தருளி இருக்கிறார். மிகவும் உக்கிரமான மூர்த்தி. அவர் மீது நடிகை நடனமாடுவது போன்று எடுக்க வேண்டாம்' என அந்த முதியவர் வேண்டிக் கேட்டுக்கொண்டார். அந்த முதியவரைப் பணம் பறிக்க வந்த பிச்சைக்காரனாக எண்ணிய படக்குழுவினர், அவரை விரட்டி விட்டனர். படம் வெளிவந்ததா இல்லையா என்பதே தெரியாதபடி, இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் பல பிரச்சனைகள். எல்லாரையும் விட மிகவும் பாதிக்கப்பட்டவர், நடனமாடிய அந்த நடிகை. அந்த நடிகையின் வலது காலில் தீராத வலி ஏற்பட்டு அதனால் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது. ஆனால் வலது காலில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை டாக்டர்கள் இடதுகாலில் செய்து விட்டிருந்தனர்! நடிகையால் நடமாடவே முடியவில்லை."
Kalachakram Narasimha (Author), Mayur Davay (Narrator)
Audiobook
"'கரணம் தப்பினால் மரணம் ! புகழ்பெற்ற பழமொழி. ஆனால் இது குட்டி கரணம் பற்றிய பழமொழி என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் கரணம் என்றால் மூலிகை ரகசியம் என்று பொருள். ஒரு குறிப்பிட்ட மூலிகை ரகசியம் உள்ளது. அதன் பெயர் பஞ்ச கரணம். அது ரகசியமாக உள்ளவரை கவலையில்லை. ஆனால அந்த கரண ரகசியம் வெளியே தெரிந்தால், மனித குலம் நாசமடையும். அதனால்தான் கரணம் தப்பினால் மரணம் என்றார், அகத்தியர் . தமிழ் மண் வெறும் மூலிகை காடாக இருந்த காலம். தெற்கே வரும் அகத்தியர் பொதிகை மலைச்சாரலில் தவம் செய்து, தென் பகுதியில் இருக்கும் மூலிகை மர்மங்களை ஆய்வு செய்து உரைக்க, அவருடைய சீடர் புலத்தியர் அதனை சுவடிகளை நூலாக எழுதுகிறார். அந்த நூலின் பெயர் அகத்தியர் 12,000. குறிப்புகளை கூறிக்கொண்டே வரும் அகத்தியர், திடீரென்று புலத்தியரிடம், ''நான் இப்போது உனக்கு பஞ்ச கரணி' என்கிற மூலிகை ரகசியத்தை பற்றி கூறப்போகிறேன். இதனை நூலில் குறிப்பு எடுக்காதே. காரணம் இது ரகசியமாக இருக்க வேண்டும். இதனை காதுகள் வழியாக கேட்டு, மனதில் பதிய வைத்து, யாரையாவது சீடனுக்கு உபதேசிக்க வேண்டும். அவனும் அதனை ரகசியமாக வைத்து அதனை தனது வாரிசுக்கு சொல்ல வேண்டும். இப்படியே அந்த பஞ்ச கரணி ரகசியம் வழிவழியாக செல்ல வேண்டும். அதனை ரகசியமாகவே வைத்திருக்க வேண்டும். காரணம் அதனை வெளியிட்டால், மனிதர்கள் அதனை கொண்டு ஒருவரையொருவர் அழித்து கொண்டு விடுவார்கள். அவ்வளவு ஆபத்தானது பஞ்ச கரணி என்கிறார். காற்று, நீர்,மண் என்று சுரண்டி பணம் பண்ணிய மனிதர்கள், மூலிகை மர்மங்களையும் விற்று காசு பார்த்துவிடுவார்கள் என்று பயந்து எல்லாம் ரகசியமாகவே வைக்கப்படுகிறது. அகத்தியர் புலத்தியருக்கு அந்த ரகசியத்தை கூறுகிறார்."
Kalachakram Narasimha (Author), Srinithya Sundar (Narrator)
Audiobook
"'ஒரே ஒரு கொலை ! சோழ சாம்ராஜ்ஜியத்தின் சரித்திரமே மாறியது. சோழர்களின் பிரம்மாண்ட சரித்திரத்தில் இன்று வரை விலகாத, சரித்திர பிரியர்களின் மனதை விட்டு நீங்காத மர்ம முடிச்சாக திகழ்வது மாமன்னன் ராஜ ராஜ சோழன் மற்றும் ஆழ்வார் குந்தவை பிராட்டியின் அண்ணன், பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின் கொலைதான். தனது பொன்னியின் செல்வன் சரித்திரத்தில் அமரர் கல்கி மட்டும் இந்த கொலையை பற்றி குறிப்பிட்டிருக்காவிட்டால், ஆதித்த கரிகாலனின் கொலையை பற்றி நமக்கு தெரியாமலேயே போயிருக்கும். பாண்டிய மன்னன் வீர பாண்டியனின் தலையை கொய்வேன் என்று சபதம் செய்து அதனை நிறைவேற்றியவன்! சாளுக்கியர்களையும் நடுங்க வைத்த மாவீரன் ! ஆதித்த கரிகாலன்தான். சுந்தர சோழருக்கு பிறகு அரியணையில் அமர போகிறான் என்று சோழ நாடே உறுதியுடன் நம்பியிருக்க, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டான். அவனை யார் கொலை செய்தார்கள் என்பது தெரியாத நிலையில், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளின் மீது கொலைபழி சுமத்தப்பட்டு வழக்கு முடிக்கப்படுகிறது. ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொன்றது கிபி 959-னில் நிகழ்ந்த சேவூர் போரில் ! ஆனால் அவனது கொலை நிகழ்ந்தது கிபி 969-னில்."
Kalachakram Narasimha (Author), Kirtana Ragade (Narrator)
Audiobook
"'காஷ்மீரம் சிவனால் உண்டாக்கப்பட்டது. பார்வதி தனது தோழிகளுடன் விளையாடுவதற்காக ஒரு இடம் கேட்க, சிவானந்தர் தனது கேசத்திலிருந்து ஓர் முடி யை எடுத்து போட அது காஷ்மீரம் என்கிற அழகிய நந்தவனமாக உருவாகியது என்று புராணங்கள் கூறுகின்றன. கேசத்திலிருந்து வந்ததால், கேஷ மீறம். பார்வதி இதன் அழகில் மெய்யாக்கி இங்கேயே குஜ் ஜேஸ்வரியாக ஸ்ரீசக்கரம் மீது நின்று கோவில் கொள்கிறாள். தெற்கே குடந்தையில் கொம்பை காளியின் உக்கிரத்தை அடக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை எடுத்துச் சென்றுவிட, காஷ்மீரம் சிறிது சிறிதாக நாசம் அடைகிறது. காஷ்மீரத்து பண்டிதர்கள் அகதிகளாக விரட்டப்பட்ட தங்கள் நாட்டின் இழிநிலையை கண்டு மனம் வருந்திய ஷ்ரத்தா என்கிற பெண், ஒரு வேளை மீண்டும் ஸ்ரீ சக்கரத்தை குஜிஜேஸ்வரி ஆலயத்தில் வைத்தால், காஷ்மீரத்துக்கு விடிவு பிறக்குமோ என்று நினைத்து, ஸ்ரீசக்கரத்தை தேடி தெற்கே வருகிறாள். கும்பையை சேர்ந்த அந்தணர் குடும்பத்தை சேர்ந்த ஒரு வாலிபனை மணந்து, அவன் உதவியோடு ஸ்ரீசக்கரத்தை தேட, பல மர்ம நிகழ்வுகளை சந்திக்கிறாள். அந்த ஸ்ரீசக்கரம் எங்கு இருக்கிறது என்று தேடியவள் அதனை கண்டுபிடித்து எடுக்க முயலும்போது பல சக்திகள் அவளுக்கு எதிராக செயல்பட, எல்லாவற்றையும் முறியடித்து அவள் ஸ்ரீசக்கரத்தை எடுக்க முயலும்போது, ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சமாளிகையில் ஒரு பெரிய அரசியல் குடும்பத்தின் சூழ்ச்சிக்கு பலியாகிறாள். தன்னை பலிகடா ஆக்கிய அந்த குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறாள். ஸ்ரீசக்கரத்தையும் மீண்டும் காஷ்மீரத்திற்கு கொண்டு போக ஷ்ரதா முயலுகிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறியாதா என்பதுதான் கதை. காலச்சக்கரம் நரசிம்மாவின் முதல் நாவல்.'"
Kalachakram Narasimha (Author), Deepika Arun (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer