Browse audiobooks narrated by Deepika Arun, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"ஒரு கிராமத்துப் பையனின் அப்பாவித்தனமான பார்வையில் தொடங்கும் உலகம் — ஆற்றங்கரை, பலாப்பழ மணம், புழுங்கல் நெல் வாசம், சந்திரி அக்காவின் சிரிப்பு — மெல்ல மெல்ல ஒரு பழைய, ஆழமான இருள் நோக்கி நகர்கிறது. ஜோசியர் தாத்தா கொண்டு வரும் செய்தி, வீட்டில் நடக்கும் அமைதியற்ற நிகழ்வுகள், மரபு சார்ந்த சடங்குகளின் கோர ஒலிகள்… எல்லாமே ஒரு குழந்தை மனதில் பதியும் நிழல்களாக மாறுகின்றன. பயம், ஆச்சரியம், புரியாத ரகசியங்கள் நிறைந்த ஜெயமோகனின் இந்த சிறுகதை, தீபிகா அருணின் உணர்ச்சிகரமான குரலில் உயிர்ப்பிக்கப்படுகிறது."
Jeyamohan (Author), Deepika Arun (Narrator)
Audiobook
"வரலாற்று நாவல்களின் தந்தை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கைவண்ணத்தில் உருவான திகில் கலந்த குறுநாவல் இது.ஆங்கிலப் படங்களைப் பிடிக்காத ஒருவனிடம், பர்மாவிலிருந்து திரும்பிய நண்பன் ஒருவன் தன் விசித்திரமான பயண அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து கதை தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போரின் உக்கிரம்... நடுக்கடலில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வீசப்படலாம் என்ற பதற்றம். எதிரிகளின் கண்களில் படாமல் இருக்க, அந்தக் கப்பல் ஒரு மர்மத் தீவின் மறைவில் தஞ்சம் புகுகிறது. ஆள் அரவமற்ற அந்தத் தீவில் மனிதர்களே இல்லை என்று நினைக்கும்போது, ஒரு ஆணும் பெண்ணும் தென்படுகிறார்கள். வியப்புக்குரிய வகையில் அவர்கள் செந்தமிழில் பேசுகிறார்கள். யார் அவர்கள்? அந்தத் தனித்தீவில் அவர்களுக்கு என்ன வேலை? அந்தத் தீவு சொல்லும் ரகசியம் என்ன? விடைகள் தெரிந்துகொள்ள கேளுங்கள் 'மோகினித் தீவு'."
Amarar Kalki (Author), Deepika Arun (Narrator)
Audiobook
"'விஷம் இல்லாவிட்டால் அமுதம் இல்லை.' ஜனமேஜயனுக்கும் தட்சகனுக்குமான பகையை அடிப்படையாகக் கொண்ட இக்குறுநாவல், மகாபாரதத்தின் கிளைக்கதையை ஒரு தத்துவ தரிசனமாக மாற்றுகிறது. தட்சகனை காமத்தின், இயக்கத்தின் குறியீடாக மாற்றிக் காட்டும் ஜெயமோகன், அவனூடாக வாழ்வின் இருமையை ஆராய்கிறார். உலகப்புகழ் பெற்ற ‘வெண்முரசு’ நாவல் வரிசைக்கு ஒரு தொடக்கப் புள்ளியாகவும், மனித மனதின் ஆழங்களை ஊடுருவும் படைப்பாகவும் இது திகழ்கிறது."
Jeyamohan (Author), Deepika Arun (Narrator)
Audiobook
"கணிக்குன்று கொச்சப்பன் சங்கரநாராயணன் – சங்கு – ஒரு பண்ணையாரின் ஒரே மகன். பள்ளி மைதானத்தில் அவன் நிழல் விழுந்தாலே பயம்; ஆனால் அவன் இதயத்தில் ஒரு பெண். பணம், பலம், பயம் – இவை மூன்றும் கலந்தால் காதல் ஆகிடுமா? ஏழ்மையின் எல்லையில் நிற்கும் ஆனந்தவல்லி. அவள் காலடியில் விழும் பணம், மனதில் எழும் பயம் அல்லது பாலியல் அச்சுறுத்தல்களால் உடைந்து போவாளா? இல்லை சிறகு முளைத்து பறந்து செல்வாளா? இந்தக் கதை, உங்கள் மனதில் ஆழமான கசப்பையும், திகைப்பையும், ஒரு விடுதலையையும் விட்டுச் செல்லும்."
Jeyamohan (Author), Deepika Arun (Narrator)
Audiobook
"கேரள-தமிழ் எல்லை ஊரில், பணமில்லாத இளைஞர்கள் ஒரு சமூக நாடகம் போடத் துடிக்கிறார்கள். மூன்று பெண் கேரக்டர்கள் வேண்டும் என்ற பழைய விதி, குறைந்த பட்ஜெட், நடிகை தேடும் பயணம் – எல்லாம் அவர்களை நிலைகுலைய வைக்கின்றன. பதற்றம், காமம், சிரிப்பு, கோபம், துக்கம், பயம், வெற்றியின் போதை, பெண் எனும் ஆளுமை தரும் பல வகை பரிணாமங்கள் – இளமையின் ஒவ்வொரு துடிப்பும் இதில் அடங்கும். பழைய ஆர்மோனியக் கட்டைகள், தபேலாத் துள்ளல், ஊர்க்கூட்டத்தின் கைதட்டல், ஒரு பெண்ணின் மூன்று வித்தியாசக் குரல்கள் – எல்லாம் சேர்ந்து கண்ணால் பார்க்காமலேயே மனதில் மேடையை உருப்பெற வைக்கும் கதை - தேவி. கேளுங்கள் கதை ஓசையில் மட்டுமே!"
Jeyamohan (Author), Deepika Arun (Narrator)
Audiobook
"ஒரு சிறிய கிராமத்தின் தெருவோர சர்க்கஸ் மேடையில், விளக்கொளியும் வியர்வையும் கலந்து மின்னும் ஒரு பெண் நிற்கிறாள். அவள் அழகி. அவள் தைரியசாலி. அவள் சாமர்த்தியசாலி. அவள் ஏமாற்றுக்காரி. மொத்தத்தில் அவள் ஓர் லீலை - இறுதியில் உங்களை ஒரு பெரிய புன்னகையோடு வியப்பில் ஆழ்த்துபவள். கேட்கும் போதே மனதில் கசப்பும், வியப்பும், கண்ணீரும் ஒன்றாகக் கலந்து, இறுதியில் ஒரு நீண்ட பெருமூச்சும் இதமான சிரிப்பும் தரும் கதை - லீலை"
Jeyamohan (Author), Deepika Arun (Narrator)
Audiobook
"நீலா சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த ஓர் ஏழைச் சிறுமி. மாலா சென்னையிலே புகழுடன் விளங்கும் ஒரு டாக்டரின் மகள். இருவரும் நெருங்கிய தோழிகளாகின்றனர். அவர்களது அன்பினால் பல நன்மைகள் விளைகின்றன. அவர்களது நட்பினால் பல அற்புதங்கள் நிகழ்கின்றன.ஒரு சாதாரண கிராமத்தில் தொடங்கிய இந்தக் கதை, உலக அரங்கில் எப்படி அரங்கேறியது ?"
Azha Valliyappa (Author), Deepika Arun (Narrator)
Audiobook
"வாழ்வின் சுவாரஸ்யமே, தெரியாததைத் தெரிந்து கொள்வதும், புரியாததைப் புரிந்து கொள்வதும்தானே! அந்த வகையில் ராஜவனம் தென்தமிழகத்து நாஞ்சில் காட்டுக்குள் நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று அழகு காட்டுகிறது. இந்த உலகமே ஒரு குடும்பம்; வாழும் உயிர் அனைத்தும் நம் உறவுகள் என உணர்த்தும் ஆசிரியர், வனம், நதி, மலையோடு விலங்குகள், மரம், செடி கொடிகள், பறவை, பட்சிகள் எனத் தான் ரசித்த கானுயிர் அனைத்தையுமே பெயர் சொல்லி அழைத்து, அதன் அங்க அடையாள அழகுகளோடு கதையில் விவரித்திருப்பது வியக்கச் செய்கிறது. வனப் பயணத்தை விவரிக்கும் காட்சிகள், நவீன கேமிராக்களில் பதிவானது போல அத்தனை துலக்கம். இப்பிரபஞ்ச வாழ்வை, அணு அணுவாய் தொடர்ந்து ரசிப்பவனால்தான் இப்படியான வர்ணனைகளைச் செய்ய முடியும்."
Ram Thangam (Author), Deepika Arun (Narrator)
Audiobook
"ஒரு கணவன்-மனைவி இடையேயான நெருக்கமான இரவு நேர உரையாடல். உடல் அழகு மற்றும் அடையாள மாற்றங்களால் தூண்டப்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை ஆழமாக சித்தரிக்கும் கதை. பாரம்பரிய கட்டமைப்புக்கள், சமூக அழுத்தங்கள், பாலின உரிமைகள் இவற்றுக்கிடையேயான மோதல்களைத் தீவிரமாகச் சித்தரிக்கும் இந்த சுவாரஸ்யமான கதை – உங்கள் உள்ளத்தைத் தொட்டு, சிந்தனையைத் தூண்டும்!"
Jeyamohan (Author), Deepika Arun (Narrator)
Audiobook
"நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும்எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது."
Jeyamohan (Author), Deepika Arun (Narrator)
Audiobook
"ஒரு இரவின் நெருக்கமான தருணங்களில், கணவன் தன் மனைவியிடம் கேரளத்தின் பழங்கதையொன்றைப் பகிர்கிறான் – தெற்குதிருவீட்டுக் கன்னியின் காதல், நீரின் பிம்பத்தில் பிறந்து சந்தேகத்தின் நஞ்சில் முடியும் சோகக் கதை. அவர்களின் உடல் நெருக்கமும், வார்த்தைகளின் விளையாட்டும், மறைமுகக் கோபங்களும் இந்தக் கதையின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்றன: காதலின் இனிமை, சந்தேகத்தின் வலி, துரோகத்தின் அழிவு. இந்தக் கதை அவர்களின் திருமணத்திற்கு என்ன பொருள் தருகிறது? இப்போது ஏன் இதை அவளிடம் சொல்கிறான்? உணர்ச்சிகளின் ஆழத்தில் மறைந்திருக்கும் ரகசியங்களைத் தேடும் ஒரு கதை."
Jeyamohan (Author), Deepika Arun (Narrator)
Audiobook
"ஒரு கல்யாண மண்டபத்தின் இரைச்சலும் நெரிசலும் நிறைந்த சூழலில், ஒரு இளம் பொறியாளர் தன் வாழ்க்கையின் அழுத்தங்களையும், குடும்ப உறவுகளின் எதிர்பார்ப்புகளையும் எதிர்கொள்கிறான். நண்பனின் ரகசியமான ஒரு சொல் அவனுள் எழுப்பும் கிளர்ச்சியும், சமூகத்தின் இரட்டை முகங்களும் அவனை எங்கு கொண்டு செல்லும்? நவீன வாழ்க்கையின் உள்ளார்ந்த போராட்டங்களைத் தொட்டு, உள்ளத்தைத் தொடும் ஒரு கதை."
Jeyamohan (Author), Deepika Arun (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer
Join our community for the latest bookish news, reading recommendations, exclusive opening extracts, author events and competitions. It\'s all free. And enter a monthly draw to win a £50 Gift Card. See past winners here
Join Our Community