"ரங்கநாயகியின் கடைசி மச்சினர் கிச்சாமி, ரங்கநாயகிக்கு மகனை போல. அவரது மகளுக்கு அவர் மன்னியின் நினைவாக ரங்க நாயகி என பெயர் சூட்டி, அவளை ஆளாக்குகிறார். ரங்கநாயகியின் முதலாளி, டேவிட் ஆசிர்வாதம், ஒரு ஆஸ்பத்திரியை கட்டி வைத்திருக்க, டாக்டருக்கு படித்து விட்டு வரும் ரங்கநாயகி 2.0. ஒரு மிகப்பெரிய மருத்துவமனை நடத்தும் மெடிக்கல் ஊழல்களை தோலுரிக்க புறப்படுகிறாள். இதில் அவளுக்கு பல எதிரிகள் முளைக்க, அவளது உயிருக்கு உலை வைக்க புறப்பட, சகலமும் கடந்து நோயாளிகளை மீட்டு எப்படி சாதித்தாள் என்பது கதை. இது மெடி க்ரைம் கதை."
"பேரழகன் அர்ஜுன், நல்லவன். அவன் கோடீஸ்வரன் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அவரது மகள் மாயா, அர்ஜுனை காதலிக்க, கோடீஸ்வரனால் மீட்கப்படும் அஜிதா, அவருக்கு அடைக்கலமாக இங்கே வந்து மாயாவுடன் நெருங்கி பழகி, ஒரு கட்டத்தில் கோடீஸ்வரனை மணந்து மாயாவுக்கு சித்தி ஆகிறாள். ஆனால் வயதான அவருடன் வாழ பிடிக்கவில்லை! வாலிப அர்ஜுன் மேல் கண் வைக்கிறாள். அவனை அடைய துடிக்கிறாள். அது தவறு என அர்ஜுன் அவள் தோலை உரிக்க, அவன் மேல் பழி சுமத்தி அவனை தூக்கு மேடை வரை கொண்டு போகிறாள். தன் மேலுள்ள பழிகளை துடைத்து எப்படி அர்ஜுன் மீண்டான் என்பதை சொல்லும் சோஷியோ..க்ரைம் கதை இது."
"துர்கா என்ற வேலை பார்க்கும் படித்த அழகான பெண். பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டையும் ஆதரிக்க வேண்டிய நிலை. ஆனால் மாமியார் சரியில்லை. தன் பிள்ளை மனதை கலைத்து விடுகிறாள். பிறந்த வீட்டில் வேறு விதமான பிரஷர். உத்யோகத்தில் பிரச்னை. சமூகத்தில் போராட்டம். எதற்கும் கலங்காமல், தான் எடுத்துக்கொண்ட கடமைகளில் கொஞ்சமும் சளைக்காமல் போராடி எப்படி வென்றாள் துர்கா என்பதுதான் கதை."
"இதன் கதாநாயகி ரங்க நாயகி. ஏழைக்குடும்பத்து பெண்மணி. ஏழை புரோகிதர் கைலாசத்துக்கு வாழ்க்கை படுகிறாள். கணவனுக்கு ஒரு தாயும், இரண்டு தம்பிகளும், மூன்று தங்கைகளும். அவர்களை வாழ வைக்க ரங்கநாயகி குழந்தை பெறவில்லை. இவர்களை தன் குழந்தைகளாக பாவித்து வளர்கிறாள். ஒரு கட்டத்தில் கணவன் மரிக்க, இவர்களை ஆளாக்க வக்கீலாகி, பெரிய கம்பெனியில் லீகல் அட்வைசராகி, பல எதிர்ப்புகளை தாண்டி அவர்களை ஆளாக்கி, இறுதியில் மனநிலை பாதித்து கணவனிடம் போய் சேருகிறாள். உருக்கமான குடும்ப கதை."
"இதன் நாயகி சஞ்சனா. ஒரு பெண்ணின் பலமே கணவன்தான். அவன் ஆதரவு இருந்தால் எதையும் ஒரு பெண் ஜெயிக்க முடியும். ஆனால், கணவன், புகுந்த வீட்டு ஆதரவு எதுவும் இல்லாமல், சஞ்சனா நடத்திய போராட்டம்தான் இந்த கதை. அம்மாவுடன் சேர்ந்து மனைவி மேல் பழி சுமத்திய கணவனை திருத்தி மனிதனாக வாழ வைக்க அந்தப்பெண் சஞ்சனா நடத்திய குருஷேத்ரம்தான் இந்த கதை. பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்ச்சி பூர்வமாக சொல்லும் கதை இது."
Join our community for the latest bookish news, reading recommendations, exclusive opening extracts, author events and competitions. It\'s all free. And enter a monthly draw to win a £50 Gift Card. See past winners here