Browse audiobooks narrated by Sri Srinivasa, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"வெற்றியும் தோல்வியும் துயரமும் கலந்த வ.உ.சி.யின் ஒப்பற்ற வாழ்க்கையை விவரிக்கும் நூல் இது. பிரிட்டிஷ் ஆட்சியில் சுதேசிக் கப்பலை வ.உ.சி. வெற்றிகரமாக ஓட்டிக் காண்பித்தார். தொழிலாளர்களின் முதல் வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தினார். தேசத் துரோகம் செய்ததாக பிரிட்டிஷாரால் சிறை வைக்கப்பட்டார். இந்தியத் தேசத்துக்காக இப்படிப் பாடுபட்ட வ.உ.சி.யின் இறுதிக் காலம் எப்படி இருந்தது? தனது செல்வத்தையெல்லாம் இழந்து வறுமையில் வாடிய வ.உ.சி., மளிகைக் கடையில் வேலை செய்தார். சுடுகாட்டுக்கு அருகில் குறைந்த வாடகைக்கு வீடெடுத்து வாழ்ந்தார். வ.உ.சி. இறப்பதற்கு 23 நாட்களுக்கு முன்பு தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் அவரே தன் துயர்மிகு வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார். இப்படி வ.உ.சி.யின் வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும், வ.உ.சி. மீதான வழக்கு விவரங்களையும் எளிமையான தமிழில் எழுதி இருக்கிறார் ப.சரவணன். எழுத்தாளர் ப.சரவணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் வ.உ.சி புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம் an Aurality Production"
P. Saravanan (Author), Sri Srinivasa (Narrator)
Audiobook
[Tamil] - Indiavai Athira Vaitha Nithi Mosadigal: இந்தியாவை அதிர வைத்த நிதி மோசடிகள்
"இந்தியா ஒரு பக்கம் ஏழைகள் நிறைந்த நாடு, இன்னொரு பக்கம் பல்லாயிரம் கோடி மதிப்பிலான நிதி மோசடிகள். இது எப்படிச் சாத்தியம்? நிதி மோசடிகள் எப்படியெல்லாம் நடந்திருக்கின்றன என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டால்தான், மீண்டும் அப்படி ஒரு நிதி மோசடி நடக்காமல் நாட்டைப் பாதுகாக்க முடியும். இதுவே இந்தப் புத்தகத்தை முக்கியமானதாக்குகிறது. இந்தியாவை அதிரவைத்த முக்கியமான நிதி மோசடிகளையும், அவை எப்படி நிகழ்த்தப்பட்டன என்பன போன்ற விவரங்களையும் துல்லியமாக இந்த நூலில் எழுதி இருக்கிறார் நா.கோபாலகிருஷ்ணன். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஹர்ஷத் மேத்தா நிரவ்மோடி டி.ஹெச்.எஃப்.எல் (DHFL) சாரதா சிட்ஃபண்ட்ஸ் சந்தா கோச்சார் கார்வி கேதன் பரேக் எ.பி.ஜி ஷிப்யார்ட் கிங் பிஷர் நிதி மோசடி மேலே உள்ள முக்கியமான நிதிமோசடிகளை இந்த நூல் ஆவணப்படுத்துகிறது. - எழுத்தாளர் நா.கோபாலகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்."
N. Gopalakrishnan (Author), Sri Srinivasa (Narrator)
Audiobook
[Tamil] - Chhatrapathi Shivaji
"சத்ரபதி சிவாஜி - மாபெரும் மொகலாய சாம்ராஜ்யத்தைத் துணிந்து எதிர்த்து நின்றவர். அராஜகப் போக்குடன் ஆட்சி செய்து அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஔரங்கசீப்பை, நியாயமான வழியில் எதிர்கொண்டு மிரள வைத்த ஒரே இந்திய வீரர். சிவாஜியின் வாழ்க்கை பல சாகசங்கள் நிறைந்தது. ஐம்பது வயது வரை மட்டுமே வாழ்ந்த இந்த மாவீரனின் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்கிறார் அனந்தசாய்ராம் ரங்கராஜன். ஒட்டுமொத்த பாரத தேசத்தின் புனிதத்தையும், அதன் நெடிய பாரம்பரியத்தையும் காத்து, இன்றைய இந்தியாவின் சமூக, கலாசார, ஆன்மிக, அரசியல் போக்குகளைத் தீர்மானித்த ஓர் உண்மைத் தலைவனின் உன்னத வரலாறே இந்தப் புத்தகம். சிவாஜி பற்றிய ஆதாரமற்ற மிதமிஞ்சிய புகழுரைகளைத் தவிர்த்துவிட்டு, தரவுகளுடன் எளிய தமிழில் இந்த நூல் எழுதப்பட்டிருப்பது இதன் சிறப்பு. எழுத்தாளர் அனந்தசாய்ராம் ரங்கராஜன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்"
Ananthasairam Rangarajan (Author), Sri Srinivasa (Narrator)
Audiobook
[Tamil] - Sundar Pichai | சுந்தர் பிச்சை
"Google - இன்றைய நமது வலதுகை. ஆண்டிராய்ட், கூகிள் தேடல், குரோம் ப்ரவுசர், ஜிமெயில், கூகிள் மேப்ஸ், யூ டியூப் போன்றவை இல்லாவிட்டால் நம் வாழ்க்கை ஸ்தம்பித்து விடும் என்ற நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம். கூகிள் எனும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், இந்தச் செயலிகளின் உருவாக்கத்திற்கும் பின்னணியில் உள்ளவர் சுந்தர் பிச்சை என்னும் ஓர் இந்தியர், அதிலும் தமிழர். இந்தப் புத்தகம் சுந்தர் பிச்சையின் பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, மேற்படிப்பு, கூகிள் நிறுவனத்தில் சாதாரண நிலையிலிருந்து உயர்பதவிக்கு உயர்ந்தது வரையிலான பயணத்தை விவரிக்கிறது. இந்தப் பயணத்தில் அவர் சந்தித்த இடர்ப்பாடுகள், சோதனைகள், சவால்கள், வெற்றிகள், சாதனைகள் போன்றவற்றைத் தெளிவாகவும் சுவையாகவும் ஜி.எஸ்.சிவகுமார் எழுதியுள்ளார். இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழும் சுந்தர் பிச்சையின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக அமையும். எழுத்தாளர் ஜி.எஸ்.சிவகுமார் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்."
G.S. Sivakumar (Author), Sri Srinivasa (Narrator)
Audiobook
[Tamil] - Article 370 - Indiavin Kashmir: ஆர்ட்டிகிள் 370
"- மகாராஜா ஹரி சிங் எதன் அடிப்படையில் இந்தியாவுடன் காஷ்மிரை இணைக்க ஒப்புக்கொண்டார்? - ஆர்ட்டிகிள் 370 என்பது என்ன? - காஷ்மிருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது? - காஷ்மிருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நிரந்தரமானதா? அதைப் பின்வாங்கிக் கொள்வது காஷ்மிருக்கு இழைக்கப்படும் துரோகமா? - இந்தியாவின் காஷ்மிர் தனியாக ஒரு நாடு போல் இயங்க ஆர்டிகிள் 370 அனுமதித்ததா? - ஜவாஹர்லால் நேரு, ஷேக் அப்துல்லா காலம் தொடங்கி, இந்திய அரசியல் வரலாற்றில் காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்து குறித்து நடந்த விவாதங்கள் என்ன? அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது இந்தப் புத்தகம். பல்வேறு தரவுகளுடன், தொடக்கம் முதல் இறுதி வரை எங்கும் விலகிச் செல்லாமல், இந்தப் புத்தகத்தைக் கோர்வையாக, திறம்பட எழுதி இருக்கிறார் ஆர்.ராதாகிருஷ்ணன். எழுத்தாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்."
R. Radhakrishnan (Author), Sri Srinivasa (Narrator)
Audiobook
[Tamil] - Ayodhi A to Z: அயோத்தி (அ முதல் ஃ வரை)
"முன்பெல்லாம் அயோத்தி என்றதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ ராமன் எனும் பெயர்தான். ஆனால் 6 டிசம்பர் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பிறகு, ‘சர்ச்சைக்குரிய இடம்’ என்றுதான் நினைவுக்கு வருகிறது. உண்மையில் அயோத்தியில் நடந்தது என்ன, நடப்பது என்ன என்பது குறித்த வரலாற்று உண்மைகள் பலருக்கும் தெரியவில்லை. - அயோத்தியில் ராமர் அவதரித்தார் என்பதற்கான புராண ஆதாரங்கள் யாவை? - பாபர் மசூதியின் வரலாறு என்ன? - நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் இந்தப் பிரச்சினையில் இருக்கும் சிக்கல்கள் யாவை? - இந்தப் பிரச்சினையால் இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை? - அயோத்தி தொடர்பாக நடந்த வழக்குகள் எத்தனை? இறுதித் தீர்ப்பின் சாராம்சம் என்ன? இவை போன்ற முக்கியமான கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் விளக்கமளிக்கிறது. இந்திய வரலாற்றில் நடந்த முக்கியமான நிகழ்வின் ஆதாரபூர்வ பதிவாக இந்தப் புத்தகம் இருக்கும். எழுத்தாளர் ஆர். ராதாகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்."
R. Radhakrishnan (Author), Sri Srinivasa (Narrator)
Audiobook
[Tamil] - Vinayak Damodar Savarkar: விநாயக் தாமோதர் சாவர்க்கர்
"சாவர்க்கர் என்ற பெயரைக் கேட்டதும் அவர் மன்னிப்புக் கடிதம் எழுதித் தண்டனையில் இருந்து தப்பித்தவர் என்று சொல்பவர்கள் ஒரு பக்கம். சாவர்க்கரைப் போன்ற ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது என்று சொல்பவர்கள் இன்னொரு பக்கம். எது உண்மை? * யார் இந்த சாவர்க்கர்? * இந்துத்துவத்தை ஓர் அரசியல் தரிசனமாக சாவர்க்கர் முன்வைக்கக் காரணம் என்ன? * சாவர்க்கருக்கு மஹாத்மா காந்தி கொலையில் பங்கு இருந்ததா? * சாவர்க்கர் ஹிந்துக்களைத் தவிர மற்ற மதத்தவர்களை வெறுத்தாரா? * சாவர்க்கர் பட்டியலின மக்களை எப்படிப் பார்த்தார்? * இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய வீரர்களின் வரிசையில் சாவர்க்கரின் இடம் என்ன? * அந்தமான் சிறையில் சாவர்க்கர் பட்ட கஷ்டங்கள் என்ன? செய்த போராட்டங்கள் என்னென்ன? வரலாற்றில் சாவர்க்கரின் இடத்தை உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கிறார் சாது ஸ்ரீராம். எழுத்தாளர் சாது ஸ்ரீராம் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்."
Saadhu Sriram (Author), Sri Srinivasa (Narrator)
Audiobook
[Tamil] - Subash Chandra Bose - Maraikkappatta Varalaaru: சுபாஷ் சந்திர போஸ் - மறைக்கப்பட்ட வரலாறு
"- சுபாஷ் சந்திர போஸ் மரணமடைந்து ஏறக்குறைய 75 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும், இன்றுவரை அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் விவாதிக்கப்படுகிறது. கடந்த ஏழு பத்தாண்டுகளில், ஒருவரின் மரணத்தைப் பற்றிய உண்மையைக் கண்டறிய மொத்தம் மூன்று கமிஷன்கள் அமைக்கப்பட்டது சுபாஷுக்கு மட்டுமே. - இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸின் பங்கு, அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு உலகளாவிய கவனத்தைக் கொண்டு வர அவர் மேற்கொண்ட முயற்சிகள், சுபாஷின் சாகசங்கள் என அனைத்தையும் விரிவாக எழுதி இருக்கிறார் சக்திவேல் ராஜகுமார். - சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்த மர்மங்களையும், விசாரணை கமிஷன்களின் அறிக்கைகளையும் பற்றிப் பேசும் இந்தப் புத்தகம், சுபாஷ் சந்திர போஸ் குறித்த ஒரு முழுமையான பார்வையைத் தருகிறது. - எழுத்தாளர் சக்திவேல் ராஜகுமார் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்."
Sakthivel Rajakumar (Author), Sri Srinivasa (Narrator)
Audiobook
[Tamil] - Haridasan Enum Naan: Krishandeva Raya's Journey to the throne
"வரலாற்று நாவல் - ஸ்ரீ கிருஷ்ணதேவராயன் பல இடர்களுக்கிடையில் எவ்வாறு விஜய நகரத்து ( ஹம்பி) அரசனானான் என்பதே ' ஹரிதாசன் எனும் நான் ' எ ன்னும் இந்தப் புதினம் தமிழனான ஹரிதாசன் சந்திரகிரி சிற்றரசனின் இளவல் . இப்புதினம் அவன் வாயிலாக சொல்லப்படுகிறது. தானே சொல்வதாக கதையை சொல்வது என்பது மிக மிகக் கடினமான ஒரு உத்தி . மொத்த புதினத்தையும் இம்முறையில் சொல்வதென்பது அபூர்வம் . ஆசிரியர் திவாகர் வெகு கவர்ச்சிகரமான முறையில் இதனை இயற்றியுள்ளார் டாக்டர் ஆர் . சம்பத் மூத்த பத்திரிக்கையாளர் "
Dhivakar (Author), Sri Srinivasa (Narrator)
Audiobook
[Tamil] - திரவதேசம் - Thiravadesam Vol. 2 of 2: 2 ஆம் உலக யுத்தம் பற்றிய புதினம் - சிறந்த சரித்திர ந
"2 ஆம் உலக யுத்தம் பற்றிய புதினம் முதலாம் உலகப் போரின் கடைப் பகுதியில் இந்திய இங்கிலாந்து அரசியல் பற்றியது மெட்ராஸில் தொடங்கி தில்லி வழியாக லண்டன் சென்று பம்பாயில் முடியும் கதை பாரதம் உலக நாடுகளில் உயர்ந்த நாடு என்பதை வெளிக்காட்டும் புனிதம் அள்ள அள்ளக் குறையாத பாரத செல்வங்கள் பற்றி பேசும் கதை"
Dhivakar (Author), Sri Srinivasa, Uma Maheswari (Narrator)
Audiobook
[Tamil] - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி | Bhagawan Sri Ramana Maharishi: வாழ்க்கையும் உபதேசமும்
"பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி (வாழ்க்கையும் உபதேசமும்) பா.சு. ரமணன் **************** பகவான் ஸ்ரீ ரமண சரிதம் ரமணாச்ரம தரிசனம் பகவான் ரமணரின் அறிவுரைகள் அருணாசல அக்ஷரமணமாலை ரமண ஸ்துதி பஞ்சகம்"
Pa Su Ramanan (Author), Sri Srinivasa, Uma Maheswari (Narrator)
Audiobook
[Tamil] - திரவதேசம் - Thiravadesam Vol. 1: 2 ஆம் உலக யுத்தம் பற்றிய புதினம் - சிறந்த சரித்திர நாவல்
"2 ஆம் உலக யுத்தம் பற்றிய புதினம் முதலாம் உலகப் போரின் கடைப் பகுதியில் இந்திய இங்கிலாந்து அரசியல் பற்றியது மெட்ராஸில் தொடங்கி தில்லி வழியாக லண்டன் சென்று பம்பாயில் முடியும் கதை பாரதம் உலக நாடுகளில் உயர்ந்த நாடு என்பதை வெளிக்காட்டும் புனிதம் அள்ள அள்ளக் குறையாத பாரத செல்வங்கள் பற்றி பேசும் கதை"
Dhivakar (Author), Sri Srinivasa, Uma Maheshwari (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer