Browse audiobooks narrated by Ramani, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
[Tamil] - பட்டினத்தாரின் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பலும்
"பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும் முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர். பட்டினத்தடிகளின் பாடல்கள் எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட அற்புதக் கலவை ஆகும். அரசனாக இருந்து பட்டினத்தாரின் சித்தருமை தெரிந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவர் பத்திரகிரியார். பதிணென் சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவருடைய பாடல்கள் மெய்ஞ்ஞானப் புலம்பல் என்று மிகவும் புகழ் பெற்றவை. மிக எளிய வார்த்தகளையும் ஆழமான பொருளும் கொண்டிருக்கும் பாடல்கள் அவை. இந்த ஒலிநூலில் சந்த ஓசையில் ரமணி படைத்திருக்கும் நூல்கள், அருட்புலம்பல், இறந்தகாலத்திரங்கல், நெஞ்சொடு புலம்பல், பூரணமாலை, நெஞ்சொடு மகிழ்தல், கோயிற்றிருவகவல், தாயார் தகனக்கிரியை, திருத்தில்லை, முதல்வன் முறையீடு, மற்றும் பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்"
பட்டினத்தார், பத்திரகிரியார் (Author), Ramani (Narrator)
Audiobook
"குணங்குடி மஸ்தான் சாகிபுவின் காலம் கிபி 1788 – 1835 க்கு இடைப்பட்டது. அரபியிலும் தமிழிலும் புலமை பெற்றவர். இஸ்லாமிய மார்க்கப்பிரிவுகளில் ஒன்றான காதிரிய்யா தரீகாவின் செயக்ப்துல் காதிரிலெப்பை ஆலிமிடம் மார்க்க கல்வி பெற்றார். திரிசிரபுரத்து ஆலிம் மௌலவி ஷாம் சாகிபுவிடம் தீட்சைபெற்றுக் கொண்டு தொண்டியில் நான்கு மாதங்கள் கல்வத்து இருந்தார். தொண்டி மரைக்காயர் தோப்பில் யோக நிஷ்டையிலும் ஆழ்ந்தார். சிக்கந்தர் மலைக்குகையில் தலை கீழ் கால் மேலான சிரசாசனம் இருந்தார். பல ஊர்களுக்கு நாடோடியாக அலைந்தார். இறுதிக்கால 12 ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்தார். தொண்டியூர்க்காரரான இவர் வாழ்ந்த இடம்தான் தொண்டியார் பேட்டை. இதுவே பிற்காலத்தில் தண்டையார் பேட்டையானது. இராயபுரத்தில் இவரது அடக்கவிடம் உள்ளது. தமிழகத்தில் பிறந்து வாழ்ந்த காதிரிய்யா தரீகா ஞானப்பாட்டையாளர் முஹியத்தீன் அப்துல்காதிர் ஜீலானியை தனது ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார்.குணங்குடியார் இசுலாமிய சூபி ஞானியாக அறியப்படுகிறார். குணங்குடி மஸ்தான் சாகிபு எழுதிய தற்போது கிடைக்கும் எழுத்துக்கள் 24 கீர்த்தனைகள் உட்பட 1057 பாடல்களாகும். இவ்வொலி நூலில் கீர்த்தனைகள் தவிர அவருடைய பிற பாடல்கள் விருத்தவோசையில் இடம் பெறுகின்றன. யாப்போசை மற்றும் விருத்தவோசை மீட்டெடுப்பில் முனைவர் ரமணியின் படைப்பில் இன்னுமொரு நேர்த்தியான படைப்பு இந்த ஒலிநூல். குரு வணக்கம் பகுதி முஹியத்தீன் அப்துல்காதிர் ஜீலானியை முன்னிறுத்தி பத்து பாடல் பகுதிகளைக் கொண்டது. முகியத்தீன் சதகம் 100 பாடல்களைக் கொண்டது. முன்னிலை குருவான முகியத்தீன் ஆண்டகையிடம் குறையிரந்து உரையாடும் பாடல்களாக இவை அமைந்துள்ளன. அகத்தீசன் சதகமும் 100 பாடல்களாலானது. மகமூது நபியாண்டவரை சுகானுபவமுறதுதித்தல், தவமே பெறவேண்டுமெனல், குறையிரங்கி உரைத்தல் வானருள் பெற்றோர் மனநிலை உரைத்தல், ஆனந்தகளிப்பு பாடல்பகுதிகளும் உண்டு. இதைதவிர இரண்டிரண்டு அடிகளாலான கண்ணிவகைப்பாடல்களும், பல்வித மனநிலைகளையும், உணர்வுச்சூழல்களையும் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன. நிராமயக்கண்ணி, பராபரக்கண்ணி, றகுமான்கண்ணி, எக்காலக்கண்ணி, கண்மணிமாலைக் கண்ணி, மனோன்மணிகண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி எனப் பல வகையினங்களாக இக்கண்ணிகள் அமைந்துள்ளன."
Kunankuti Masthan (Author), Ramani (Narrator)
Audiobook
"பதினாறு கதையினிலே என்ற தலைப்பில் கலஞர் கருணாநிதி அவர்களின் 16 சிறுகதைகள் தொகுப்பு வெளி வந்திருக்கிறது. முன்னுரையில் கலைஞர் எழுதுகிறார்: ”16 கதைகளிலும் இந்தச் சமுதாயம் பற்றிய என் சிந்தனையோட்டத்தைக் காணமுடியும். உண்மைகள் சில நேரம் கசக்கும். சில மருந்துகள் கூட கசக்கும்; ஆனால் அவை தான் நோய் தீர்க்கும்.” வறுமை சிறுமை; செல்வம் குற்றம்; ஏழ்மை நோய்; மதம் கலகம்; காதல் ஏமாற்றம்; தாய்மை சுமை; பாவம் புண்ணியம்; பேராசை சுரண்டல் என்று பல சமுதாயக் கூறுகளையும் பற்றித் தமக்கே உரிய நடையிலும் உணர்வோட்டத்திலும் மொழி ஆளுமையிலும் கலைஞர் இக் கவிதைகளை எழுதியிருக்கிறார். ரமணியின் ஒலிப்பதிவில் நான்கு மணி நேரத்துக்கு மேல் இந்தக் கதைகள் உங்களை வந்தடைகின்றன. தலைப்புகள் : காந்தி தேசம், அணில் குஞ்சு, கொள்ளைபுரம், எழுத்தாளர் ஏகலைவன், மலரவில்லை, சுமந்தவள், புகழேந்தி, நளயினி, குப்பைத்தொட்டி, சங்கிலிச்சாமி, தப்பிவிட்டார்கள், தப்பவில்லை, ஏழை, கண்ணடக்கம், வாழமுடியாதவர்கள், அய்யோ ராஜா. "
மு.கருணாநிதி (Author), Ramani (Narrator)
Audiobook
"வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 'ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு 'லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது 'லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். 'வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. ”அறிஞன் எனும் சொல் ஒரு வித்து. எண் குணத்தான் எனும் சொல் ஒரு மரம்” என்ற அறிமுகத்தோடு ”அறிஞன்” என்ற பாவியத்தைத் தொடங்குகிறார் வெள்ளியங்காட்டான். 400 அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்களாலான இந்நூலை யாப்போசையில் ஓர் ஒலி நூலாக ஆக்கியிருக்கிறார் பேராசிரியர் ரமணி."
வெள்ளியங்காட்டான் (Author), Ramani (Narrator)
Audiobook
"வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 'ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு 'லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது 'லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். 'வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. கவியகம் என்ற நூலில் வெள்ளியங்காட்டானின் 54 கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. “என் காவியங்களே என் வாழ்க்கை” என் வாழ்க்கையே என் எழுத்து என்னைப் பற்றிச் சொல்வதற்கு என் இலக்கியங்கள் உயிர் வாழ்தல் மட்டுமே” என்கிறார். “தெளிந்த உள்ளத்துடனும் அச்சமற்ற நிலையிலும் அமைதியுடனும் என் வாழ்நாள் இறுதியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.” என்று சொல்லி இந்தத் தொகுப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறார். பேராசிரியர் ரமணியின் வாசிப்பில் இக்கவிதை நூல் ஒலிநூலாகியிருக்கிறது. "
வெள்ளியங்காட்டான் (Author), Ramani (Narrator)
Audiobook
"வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 'ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு 'லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது 'லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். 'வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. தமிழன் இப்படி அப்படி என்ற வெற்றுவார்த்தை ஜாலங்கள் தாண்டி இன்றைய தமிழன் எப்படி என்று சொல்லிப் போகிறார் வெள்ளியங்காட்டான் “தமிழன்” என்ற இந்தப் பாவியத்தில். //வலையரென்றொதுக்கப்பட்டார்/ வள நெய்தல் நிலத்தினோர்கள்/ புலையரென்றொதுக்கப்பட்டார்/ புகழ் மருதத்தினோர்கள்/ மலையரென்றொதுக்கப்பட்டார்/ மல்கு பூங் குறிஞ்சி மக்கள்/ கொலைஞரென் றொதுக்கப்பட்டார்/ கூர்ம்பரல் பாலை வாழ்நர்// என்கிறார். பேராசிரியர் ரமணியின் ஒலி நூல் வடிவத்தில் கேட்கலாம்."
வெள்ளியங்காட்டான் (Author), Ramani (Narrator)
Audiobook
"வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 'ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு 'லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது 'லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். 'வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. கையெழுத்துப் பிரதியிலேயே தங்கிப் போன வெள்ளியங்காட்டானின் வெண்பா இலக்கியம் தலைவன். பானைச் சோறு. பருக்கை…. மட்டுமித மற்ற மலமகிழ்ச்சி மானமொடு மட்டுமித மற்ற மனமறுக்கம் – மட்டுமித மற்ற மனத்தளர்வு மன்னுமெனின் மட்டுமித மற்று மடியும் மதம். பேராசிரியர் ரமணியின் வாசிப்பில் முத்தான ஓர் ஒலி நூல்."
வெள்ளியங்காட்டான் (Author), Ramani (Narrator)
Audiobook
"வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 'ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு 'லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது 'லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். 'வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. இளைஞர் இலக்கியம் எதைச் செய்கிறதோ இல்லையோ ஆற்றுப்படுத்தலைச் செய்யா இளைஞர் இலக்கியம் இளைஞர் இலக்கியமாகாது. வெள்ளியங்காட்டானின் நீதிக் கதைகள் இளைஞர் இலக்கியத்தின் இந்த இலக்கணத்துக்குச் சான்று. கருணை, தியாகம், ஈகை, மதிப்பு, பொறுப்பு, மனிதன், மரணம் என்று விழுமியங்கள் பேசும் கதைகள். பேராசிரியர் ரமணியின் குரலில் இளைஞர் கேட்க ஓர் ஒலி நூல். "
வெள்ளியங்காட்டான் (Author), Ramani (Narrator)
Audiobook
"வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 'ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு 'லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது 'லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். 'வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. கையெழுத்துப் பிரதியிலேயே தங்கிப் போன வெள்ளியங்காட்டானின் அகவல் இலக்கியம் துறவி. தானாக இருந்து தன்னைக் கண்டு தன்னில் இறைவனைக் கண்டு தானாகவே இருப்பதே உபநிடதம் கண்ட வாழ்வறம். இதைச் சொல்லிப் போவது ஓர் அசாத்தியனுக்கே சாத்தியம். பொலிவும் நலிவும் பொருந்தப் புலரும் முதலும் முடிவும் விதவாக் காலமே! உன்னைநீ யுணர்த்திய தொப்ப என்னைநா னுணர்த்துவ னிதயமின் புறவே! பேராசிரியர் ரமணியின் யாப்போசை ஒலிவடிவில் துறவி. "
வெள்ளியங்காட்டான் (Author), Ramani (Narrator)
Audiobook
"வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 'ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு 'லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது 'லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். 'வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. ”அறுகம்புல்லும் ஆலாமரமும் தெய்வங்களல்ல. பஞ்சபூதங்களும் தெய்வங்களல்ல. அவற்றிலிருந்து வெளிப்படும் சக்திகளும் தெய்வங்களல்ல. தத்வமஸி அதுவே நாமான அவைகளின் சாரமாயுள்ள மனிதனின் இருதயத்தில் அடங்கிய சத்தியமே தெய்வம் என்பதை விளக்கவே பரிசு என்ற இந்நூல் எழுதியுள்ளேன்.” வெள்ளியங்காட்டானின் உபநிடதவழித் தத்துவ விளக்கம் பேராசிரியர் ரமணியின் குரலில்…. "
வெள்ளியங்காட்டான் (Author), Ramani (Narrator)
Audiobook
"வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 'ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு 'லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது 'லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். 'வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. கவிஞர் புவியரசுவின் அருமையான முன்னுரையோடு வெளிவந்த தத்துவ விளக்க நூல் புது வெளிச்சம். ”அறிவியல் பார்வையும் விசாலமான சமய நூலறிவும் உண்மையை உரக்கச் சொல்லும் துணிவும் காலத்திற்கேற்ற சிந்தனையும் கொண்டு படைத்துள்ள இந்தப் புது வெளிச்சம் என்ற ஆய்வு நூல் நம் சிந்தைக் குழப்பத்தைத் தெளிவுபடுத்தும் அரிய படைப்பு.” பேராசிரியர் ரமணியின் வாசிப்பில் உபநிடதங்களை வாழ்வியலாக்கிய வெள்ளியங்காட்டானின் நூல் ஒலி நூலாக…."
வெள்ளியங்காட்டான் (Author), Ramani (Narrator)
Audiobook
"வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 'ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு 'லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது 'லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். 'வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. ஒரு கவிஞனுக்குத் தேவை அவனை ஒரு கவிஞனென்று எந்த வரைகோடுகளும் இழுக்காமல் ஏற்றுக் கொள்ளும் பக்குவமே. அப்படித் தன்னை ஏற்றுக் கொள்ளக் கவிபாடும் நிகழ்வுகளின் நீரோட்டமே வெள்ளியங்காட்டான் அவர்களின் கவிஞன் என்ற நூல். //கவினுற உதித்தான் வானில்/ கதிரவன்; கங்குல் அஞ்சிப்/புவிதனை விரைந்து விட்டுப்/போயிற்ரு புகலை நாடி/ செவியினில் தீந்தேன் என்னச்/சிறுகுயில் இசைக்க மெல்லக்/கவிஞன் கண் மலர்ந்தான் செய்ய/ கமலங்கள் மலர்ந்தவாறே..// எனத் தொடங்குகிறது இந்தப் பாவியம். பேராசிரியர் ரமணி ஒலி நூலாக்கியிருக்கிறார்."
Velliyankattan (Author), Ramani (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer