"இந்நாவலில் நாயகர்கள் / நாயகிகள் / வில்லன்கள் என எவருமில்லை. அந்த விதத்தில் மிகவும் ஜனநாயகப் பண்பு கொண்டதாக இருக்கிறது இந்தப் பிரதி. இதன் காரணமாக அதிகாரத்துக்கு எதிரானதொரு அமைப்பைக் கொண்டதாக இந்தப் பிரதி விளங்குகிறது. பின் நவீனத்துவப் பிரதியொன்றில் காணக் கிடைக்கும் சாதகமான இந்தப் பண்புகள் மிக இயல்பாக இந்த யதார்த்தவகைப் பிரதியில் விரவிக் கிடக்கின்றன. ஒரே நேரத்தில் மானுடவியல் ஆவணமாக, வரலாற்றுப் பதிவாக, படைப்புக் குணம் நிரம்பிய புனைவாக விளங்குகிற இந்தப் பிரதி இதுவரை பூடகப்படுத்தப்பட்டிருந்த பெண்கள் மற்றும் முஸ்லீம்களின் உலகுக்குள் நம்மை இட்டுச் செல்கிறது. அறியாமை ஏற்படுத்திய இடைவெளியைக் கற்பிதங்களால் நிரப்பிக்கொண்டிருந்த நாம் இந்தப் பிரதியின் ஒளியில் சுயபரிசோதனை செய்துகொள்கிறோம்"
"இன்றைக்கு எதைத் தேடுவதென்றாலும் கூகுள்தான். அது இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க இயலாது. மிகக் குறுகிய காலகட்டத்துக்குள் மிகப் பெரிய வெற்றியடைந்து பணமும் புகழும் சம்பாதித்து இன்னும் பெரிதாக வளர்ந்துகொண்டிருக்கிற கூகுள் நிறுவனத்தின் வெற்றிக்கதை இது. இளைஞர்களுக்கு ஏற்ற எளிய மொழியில் கூகுளுடைய வாழ்க்கை, தொழில் வளர்ச்சி, சாதனைகள், தாக்கங்களைப்பற்றிய சிறப்பான அறிமுகத்தை வழங்குகிறது.
The word 'Google' and its usage today has skyrocketed so much that it has been included in dictionaries as a term used in common language to signify searching. Google, the most popular search engine of all times, is used extensively by people all over the globe whenever they find the need to look something up and gain information.This book talks about how Google came to be and how it evolved from being just an idea to becoming a great success story."
"அமெரிக்காவின் அடையாளமாக மாறி கோக் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த காலகட்டத்தில் உள்ளே நுழைந்தது பெப்ஸி. ஒப்பீட்டளவில் பெப்ஸி அப்போது சுண்டைக்காயில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவே இருந்தது. நாங்களும் குளிர் பானம் தயாரிக்கிறோம் என்று பெப்ஸி விளம்பரம் செய்தபோது, யாருமே அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே உலகம் இன்று கோக்குக்கு இணையாக பெப்ஸியை வைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. என். சொக்கனின் இந்தப் புத்தகம் பெப்ஸியின் வெற்றிக் கதையை விவரிக்கிறது.
Synopsis (English):
Pepsi, a carbonated drink invented decades ago, is still popular amongst the masses today. Whenever there is a party, there is almost always a pack or two of Pepsi for people to share. Pepsi may be a little unhealthy, causing many to criticise its continuous consumption; even then, this sugary drink isn't going anywhere for it is celebrated and loved by many. This book talks about how Pepsi came to be such an immensely popular beverage, how it fought the dominance of Coke, and how it developed as a company over the years."
"பெற்றோர்களை ஒரு சேர ஒரு விபத்தில் பறி கொடுத்துவிட்டு, நிராதரவாக இருக்கும் தன் தம்பிப் பெண் அருணாவை, பெரியப்பா தாமோதரன் வளர்க்க ஆரம்பிக்கும்போது அவளுக்கு வயது 5 வயது இருக்கும். தம்பியின் ஆசைப்படியே அருணாவை டாக்டருக்கு படிக்க வைக்கிறார். அருணாவின் பெற்றோர்களின் லட்ச, லட்சமான பணத்தை அவள் பெயரில் போட்டு, தன்னை கார்டியனாக நியமித்துக் கொள்கிறார். இதனால் வீட்டில் யுத்தம் ஆரம்பிக்கிறது. அருணாவின் காலேஜ் சீனியரான அசோக் அருணாவை கல்யாணம் செய்துக்க ஆசைபடுகிறான். தான் நர்ஸிங் ஹோம் கட்ட அருணாவின் பணத்தை எதிர்பார்க்க, அருணா அதை விரும்பவில்லை, கல்யாணத்திற்கு முன்னாடியே பணத்திற்கு சொந்தம் கொண்டாடுகிறான் என்று நினைக்கிறாள். அருணாவின் வாழ்க்கை அமைகிறது என்பதை அறிய கேளுங்கள் உன்னிடம் மயங்குகிறேன்."
Join our community for the latest bookish news, reading recommendations, exclusive opening extracts, author events and competitions. It\'s all free. And enter a monthly draw to win a £50 Gift Card. See past winners here