"இந்நாவலில் நாயகர்கள் / நாயகிகள் / வில்லன்கள் என எவருமில்லை. அந்த விதத்தில் மிகவும் ஜனநாயகப் பண்பு கொண்டதாக இருக்கிறது இந்தப் பிரதி. இதன் காரணமாக அதிகாரத்துக்கு எதிரானதொரு அமைப்பைக் கொண்டதாக இந்தப் பிரதி விளங்குகிறது. பின் நவீனத்துவப் பிரதியொன்றில் காணக் கிடைக்கும் சாதகமான இந்தப் பண்புகள் மிக இயல்பாக இந்த யதார்த்தவகைப் பிரதியில் விரவிக் கிடக்கின்றன. ஒரே நேரத்தில் மானுடவியல் ஆவணமாக, வரலாற்றுப் பதிவாக, படைப்புக் குணம் நிரம்பிய புனைவாக விளங்குகிற இந்தப் பிரதி இதுவரை பூடகப்படுத்தப்பட்டிருந்த பெண்கள் மற்றும் முஸ்லீம்களின் உலகுக்குள் நம்மை இட்டுச் செல்கிறது. அறியாமை ஏற்படுத்திய இடைவெளியைக் கற்பிதங்களால் நிரப்பிக்கொண்டிருந்த நாம் இந்தப் பிரதியின் ஒளியில் சுயபரிசோதனை செய்துகொள்கிறோம்"
"சல்மாவின் நாவல் முழுமையாகப் பெண்ணுலகத்தால் நிரம்பியிருக்கிறது. புற உலகம் அறியாத பெண்களின் உள் உலகத்தை விரிக்கும் எழுத்து. துயர் நிரம்பிய உள்ளுக்குள் பெருகும் உணர்வுகளையும் அவற்றில் இருந்து காலத்தின் கைப்பிடித்துத் தாங்களாகவே கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும் திறனையும் இயல்பாகக் காட்டிச் செல்கிறது நாவல். அவர்கள் உலகமும் மொழியும் புதிது. மரபான மனங்களுக்கு அவ்வளவாக உவப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் மரபின் போர்வையில் மறைக்கப்பட்ட ஓர் உலகம் வெளியாகும்போது பொங்கிப் பெருகும் உடைப்பைத் தவிர்க்க இயலாது. இந்நாவலில் நிகழ்வதும் அத்தகைய ஒரு பிரவாகம்தான். Writer, poet salma's second novel. Salma's novel is filled with the stories of personal life of women, which the outer world has not much knowledge of. A melancholic world and how one overcomes it with time is portrayed realistically in the novel. The language and this world are new and might not be pleasant to conservative minds. But when the chains of conservative oppression are broken, there is a flood of narratives that are unleashed. The novel is one such story."
Join our community for the latest bookish news, reading recommendations, exclusive opening extracts, author events and competitions. It\'s all free. And enter a monthly draw to win a £50 Gift Card. See past winners here