"தமிழில் எழுதப்பட்ட மிக மிக அழகான வரிகள், குழப்பும் வரிகள், காட்டாற்றைப் போல் கோபித்துக்கொண்டு பாயும் வரிகள், நீரோடை போல் மெதுவாகத் ததும்பும் வரிகள்.. லா.ச.ராவை புரிந்துக்கொள்வது எளிதல்ல. சில வேளைகளில் ஒருவித அந்தரங்க ஹாஸ்யமாக எல்லோரையும் முட்டாளடிக்கிறாரா என்று தோன்றும். இந்தத் தோற்றம் சட்டென்று தெறிக்கும் சில வரிகளில் மறைந்துவிடும். இவர் கதைகளில் ஊடாடுவது பக்தி, கடவுள் பக்தி, குடும்ப அமைப்பின் மேல் பக்தி, பக்தியின் மேல் பக்தி, தமிழ் கொச்சையில் விளையாடும் அழகின் மேல் பக்தி, துக்கத்தின் மேல், கோபத்தின் மேல், ஏழை மேல், சங்கேதங்களின் மேல்.. ராமாமிருதத்தைப் படிக்காதவன் தமிழ் சிறுகதையைப் பற்றிப் பேச லாயக்கில்லை - சுஜாதா"
"கதாநாயகனின் பார்வையில் நகர்கின்றது இந்த கதை. ஏதோ காரணத்திற்க்காக ஊரை விட்டு ஓடி வர நேர்ந்த கதாநாயகன் ஒரு செல்வந்தனிடம் வேலைக்கு சேர, நாளைடைவில் அவரது மகளான சாவித்ரியை மணக்கிறார். அவர் காலத்தின் பிறகு சொத்துக்களை பார்த்துக்கொள்கிறார். இருந்தும் மனதில் அமைதி இல்லை. நாளடைவில் அவர் மனைவியோடு சொந்த ஊரான கரடிமலைக்கு திரும்புகிறார். அவருடன் நம்மளையும் அந்த இடத்துக்கு கூட்டி செல்கிறார். தான் காதலித்த பெண்ணை தேடி செல்கிறவர் அங்கு அதே வடிவில் இருக்கும் அவளின் மகளான அபிதாவை பார்க்க நேர்கிறார். அவருடைய கடந்த காலத்தின் சில ஏடுகள் மற்றும் நிகழ்கால எண்ணங்களோடு நாமும் இணைத்து பிரயாணம் செய்வது தான் இந்த அபிதா."
"புத்ர தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நூறு ஆண்டுகளாகத் தொடரும் சாபம்தான் நாவலின் மையம். கதை, கதையின் மூலம் என அடுக்கடுக்காக நாவல் விரிந்துகொண்டே செல்கிறது."
"அஞ்சலி - பஞ்சபூத கதைகள். லா ச ராவின் அஞ்சலி தொகுப்பில் உள்ள 5 கதைகள் - பஞ்ச பூதங்களான நீர், நெருப்பு, நிலம், காற்று மற்றும் ஆகாயம் இவைகள் ஊடுருவும் நெஞ்சைத் தொடும் கதைகள்."
"லா ச ராவின் வழக்கமான முத்திரைகளுடன் - அதாவது பிராமணர் கதை, அமானுஷியமான ஓர் கவர்ச்சி கொண்ட புத்திசாலியான நாயகன், வத்தக்குழம்பு-சுட்ட அப்பளம், தேவி உபாசனை என்று சுவை குன்றாமல் சில அத்தியாயங்கள் பயணித்தபின், வந்தாரையா ஓர் புதிய லா ச ரா, கடைசி அத்தியாயத்தில்! இப்படி இந்தக் கதை திரும்பும் என்று யாருக்குத் தெரியும்? கல் சிரித்தேவிட்டதோ?"
"Short Story Collection from La Sa Ra - Ezhuthin Pirappu, Dhaakshayani, Manni, Paarkadal, Sumangalyan, Varigal, Mahabali
லா ச ராவின் சிறுகதை தொகுப்பு - எழுத்தின் பிறப்பு, தாக்ஷாயணி, மன்னி, பாற்கடல், சுமங்கல்யன், வரிகள், மஹாபலி"