"பொன்னியின் புதல்வர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வையும் பணிகளையும் சுவையாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்தும் முக்கியமான நூல். ஓர் ஆளுமை குறித்த சித்திரமாக மட்டுமின்றி அவர் இயங்கிய காலத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஓர் ஆவணமாகவும் இந்நூல் திகழ்வது அதன் சிறப்பு.
காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டது, சுதந்தரப் போராட்டத்தில் இணைந்துகொண்டது, பத்திரிகை உலகத்துக்குள் பிரவேசித்தது, புதிய எழுத்துப் பாணியை உருவாக்கியது, படிப்படியாக அந்த உலகின் கதாநாயகனாக மாறியது என்று கல்கியின் வாழ்வில் ஒவ்வொரு அத்தியாயமும் நம்மைத் திகைப்பில் ஆழ்த்துபவை.
காலத்தில் என்றென்றும் நிலைத்திருக்கப்போகும் படைப்புகளை அருளியிருக்கும் ஒரு மகத்தான எழுத்தாளரை நெருக்கமாகத் தெரிந்துகொள்ள இந்நூல் உதவும்."
"சிவகாமியின் சபதம் புதினத்தின் தொடர்ச்சியாக 'காஞ்சித் தாரகை' உருவாகியுள்ளது. சிவகாமியின் சபதம் முடிந்த பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னான கதைக் களமாக விரிகிறது காஞ்சித் தாரகை. சிவகாமியின் சபதம் கதையில் நம்மை ஆட்கொண்ட கதாபாத்திரங்களில் நரசிம்மரும், சிறுத்தொண்டரும், சிவகாமியும், ஆயனச் சிற்பியும் இந்தப் புதினத்திலும் வருகிறார்கள். வாசகர்கள் சிவகாமியின் சபதத்தை படித்தபோது அடைந்த மகிழ்ச்சியை இந்த காஞ்சித் தாரகையிலும் அடைவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை."
"அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனைன் தொடர்ச்சியே இந்த காவிரி மைந்தன் எனும் இக்காவியம். பொன்னியின் செல்வனை முடிக்கும் விதமே பதில்களைத் தராமல் பல புதுக் கேள்விகளைக் கிளப்பிவிட்ட்து, பொன்னியின் செல்வன் கதையில் வந்த பாத்திரங்கள் பின்னர் என்ன ஆயின என்று அவரே ஒரு கோடிட்டுக் காட்டினார், அதை முடிந்தவரை ஆசிரியர் பின்பற்றி தன் கற்பனையை வளர்த்து இக்காவியத்தை படைத்துள்ளார்."
"அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியே காவிரி மைந்தன் எனும் இக்காவியம். பொன்னியின் செல்வனை முடிக்கும் விதமே பதில்களைத் தராமல் பல புதுக் கேள்விகளைக் கிளப்பிவிட்டது, பொன்னியின் செல்வன் கதையில் வந்த பாத்திரங்கள் பின்னர் என்ன ஆயின என்று அவரே ஒரு கோடிட்டுக் காட்டினார், அதை முடிந்தவரை ஆசிரியர் பின்பற்றி தன் கற்பனையை வளர்த்து இக்காவியத்தை படைத்துள்ளார்."
"14ஆம் நூற்றாண்டில் நடந்த முகமதியப் படையெடுப்பை தமிழ்நாடு எவ்வாறு எதிர்கொண்டது? சமணமும் பௌத்தமும் கிட்டத்தட்ட அழிந்திருந்த நிலையில், இந்து மதம் தனது விக்கிரகங்களை எவ்வாறு எதிரிகளின் கரங்களிலிருந்து காப்பாற்றியது? அரங்கம் முதல் தில்லைவரை, மதுரைமுதல் சீர்காழிவரை ஒவ்வொரு விக்கிரகத்தின் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. இது தில்லையின் கதை. காணாமல் போன நடேசன் அதிசயத்திலும் அதிசயமாக மீண்டு வந்ததன் பின்னாலுள்ள ஓர் அசாதாரணக் கதை. அனுஷா வெங்கடேஷின் இந்த அபாரமான சரித்திர நாவல் தமிழ் வாசகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் என்பது உறுதி."