Browse audiobooks narrated by Kamali Maduraiveeran, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
[Tamil] - நெஞ்சம் உன்னைக் கெஞ்சும்: Nenjam Unnai Kenjum
"கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. 'எனக்கு... என்னை உங்ககிட்ட இருந்து காப்பாத்திக்க வேற வழி தெரியலை... என்னை மன்னிச்சிடுங்க...” என்றாள் மீரா. “பின்ன ஏன் இந்தக் கண்ணீர்?” விக்ரம் குரல் சந்தேகமாக வெளி வந்தது. “அது... தெரியலை! நீங்க... உங்க கையில ரத்தத்தைப் பாத்ததும்.... சாரி, நான் திரும்பவும் சொல்றேன், உங்களை நான் காயப்படுத்த நினைக்கலை... ஆனா, நீங்க என்கிட்டே நடந்துகிட்ட முறை ரொம்ப தப்பு... ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளை அடைய நினைக்கிறது, தப்பு. அது அவளோட கணவனாவே இருந்தாலும் சரி....” என்றாள் தலை குனிந்தபடி. விக்ரம் மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, காயம் இல்லாத தன் இடக்கையை வைத்து மீராவின் நாடி பிடித்து உயர்த்தி தன்னைப் பார்க்கச் செய்தவன், 'அப்படின்னா நீ ஏன் இன்னும் இங்கேயே இருக்க? போயிடு... போ மீரா, என்கிட்டே இருந்து தப்பிச்சு போயிடு... திரும்ப என் கண் முன்னாடி வராத. இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை நீ பயன் படுத்திக்கலேன்னா... உன்னால எப்பவுமே என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது... இப்போ நான் சொன்ன இந்த வார்த்தை... இதை இந்த ஒரு முறைக்கு மேல என் கிட்ட இருந்து நீ எதிர்பாக்க முடியாது. போ... போயிடு” என்றான் குரலில் சற்றே கடுமை கூட்டி.... மீராவின் முகம் மெல்ல புன்னகையில் விகசித்தது. “நிஜம்மாவா நான் போகலாமா? திரும்ப என்னை தொந்தரவு செய்ய மாட்டீங்களே?” என்றாள் நம்ப முடியாத பாவனையில். “ம்… ஹ்ம்ம்..... கண்டிப்பா... மாட்டேன்” என்றான் விக்ரமாதித்யன்."
Kamali Maduraiveeran (Author), Kamali Maduraiveeran (Narrator)
Audiobook
[Tamil] - நேசம் மறவாத நெஞ்சமடி: Nesam Maravaatha Nenjamadi
"'அதை இன்னும் கொஞ்சம் முன்னமே சொன்னா தான் என்னவாம்! கை வலிக்கிது...' என்று வாய்க்குள் முணுமுணுத்தாள். மீனாக்ஷியின் கூற்றில், அவளைப் பார்த்தபடியே வீரா மெலிதாக சிரித்து சிகாரைத் தரையில் எரிந்து தன் ஷூ காலால் மிதித்து அதன் நெருப்பை அணைத்தான். ஆனால் மீனக்ஷியால் அவனுள் மூண்ட நெருப்பு என்னவோ அணைய மறுத்தது. 'அடுத்த முறை, முட்டாள்களின் பேச்சைக் கேட்காத அளவுக்கு புத்திசாலித்தனமா நடந்துக்கோ...' என்று கூறியவன் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. அவன் கூற்றை சரியாக புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது மீனாக்ஷிக்கு. மீனாக்ஷி பதிலளிப்பதற்கு முன்பு, வீரா தனது பைக்கின் மீது காலை சுழற்றி அமர்ந்தவன் என்ஜினைத் ஆன் செய்தான். வாகனத்தை கிளப்பும் முன், “வெல்கம் டு திஸ் காலேஜ்” என்று கூறியவன் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க அவள் பதிலை எதிர்பாராமல் வாகன இயந்திரத்தின் ஒலியுடன் சென்றுவிட்டான் வீரா. மீனாக்ஷியின் இதயத் துடிப்பின் வேகம் கூடியது. அவள், வீரா... அவன் மேல் கோபப்படுகிறாளா, சங்கடப்படுகிறாளா அல்லது அவன் யாரென்று அறிய ஆர்வமாக இருக்கிறாளா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக இருந்தது. வீரா அவளால் அவள் மனதில், என்றும் மறக்க முடியாத எண்ணத்தை விட்டுச் சென்றிருந்தான்... “ஹே நிறுத்து நிறுத்து... அதென்ன? முதல் முதல்ல ஒரு பொண்ணை பாக்குற ஆண், இப்படியா சிகிரெட்டை ஊதிக்கிட்டு... வெறிச்சு வெறிச்சு பாப்பான்? இவனுங்களை தானே உங்களை மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் பிடிக்கிறது? அவனை ஹீரோன்னு வேற சொல்லிக்கிறீங்க... என்னால இந்த மாதிரி இர்ரிடேட்டிங் ஸ்டோரி எல்லாம் கேக்க முடியாது. ச்சா... நான்சென்ஸ்...” என்று வர்மா மீனாக்ஷியை பொரிந்து தள்ளி கதையை பாதியில் இடை வெட்டினான்."
Kamali Maduraiveeran (Author), Kamali Maduraiveeran (Narrator)
Audiobook
[Tamil] - இளநெஞ்சே வா...: Ilanenjee vaa (Romantic Thriller)
"மன்னா பயணிகள் இருக்கையிலிருந்து குதித்து பாண்டியாவை நோக்கிச் சென்றான். 'அவளை வெளிய கூட்டி வா...', என்று தாழ்வான குரலில் கூறினான். ஆனால் அதுவே கட்டளையாக இருந்தது..... பாண்டியா ஒரு கணம் தயங்கி, ராதிகா அமர்ந்திருந்த வேனின் பின்புறத்தைப் பார்த்தான். அவள் கைகள் கட்டப்பட்டிருந்தன, அவள் முகம் வெளிரிப்போய்... ஆனால் கண்கள் சண்டைக்கு நிற்ப்பவள் போல் முறைத்துக் கொண்டு இருந்தது. 'நாம இங்க தான் இருக்கனுமா மன்னா? இந்த இடத்தை பாத்தா எனக்கு பயமா இருக்கு... வேற எங்காவது...?' என்றான். மன்னா புன்னகைத்து, குளிர்ந்த காற்றுக்கு எதிராக தனது மேல் சட்டையை இறுக்கமாக இழுத்தபடி, சுற்றிலும் பார்த்தான். முகத்தில் இனம் புரியா புன்னகை அரும்பியது. 'அது தான் நமக்கு வேணும், பாண்டியா. இது தான் சரியான இடம்... இங்க தான் யாரும் வரமாட்டாங்க. அவள் கத்துனாலும் அலறினாலும்... யாரும் என்னன்னு கேட்க மாட்டாங்க.. now move' என்றான் அதற்க்கு மேல் பேசாதே என்பது போல்... ராதிகா அமைதியாக இருக்க முயன்றாலும், மன்னா அவனது வார்த்தைகளில் சற்று நிதானமாக இருந்தாள். அவளுடைய இதயத் துடிப்பின் வேகம் கூடியது. ஆனால் அவள் அழவில்லை. அவள் உடைந்து அழுவதை தன் முன்னே இருக்கும் இந்த ஆடவர்களுக்குக் காண்பிக்க அவள் விரும்பவில்லை.... பாண்டியா வேனின் கதவை எச்சரிக்கையுடன் திறந்தான். ராதிகாவின் கை மற்றும் கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். அவனது குரல் முன்பை விட மென்மையாக இருந்தது. 'இறங்கி வா...' என்றான். மணிக்கட்டில் சிவந்து போயிருந்த தடத்தைப் மெலிதாக தேய்த்துவிட்டாள். வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட அப்போது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது அவளாள்."
Kamali Maduraiveeran (Author), Kamali Maduraiveeran (Narrator)
Audiobook
[Tamil] - வாழ்வின் முதல் காதலா! நீதானா...: Vaalvin Muthal Kadhalaa Neethaanaa
"“வெற்றி, நேத்து கிளப்ல பேசீட்டு இருக்கும் போது உனக்கு பொண்ணு பாக்கனுன்னு தான் ஒரு பே...ச்சுக்கு சொன்னேன். உடனே நம்ம ராஜி இருக்காளே, அவ பொண்ணு கூட ஏதோ மாடலிங் பண்ணீட்டு இருக்கான்னு... நீ கூட நம்ப கம்பெனி விளம்பரத்துக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தியே.. அவ பேர் கூட...என்னம்மோ...” என்று நெற்றியை தட்டி தெரியாதது போல் இழுத்தவரிடம், செய்தித் தாளைப் புரட்டியபடியே, “மிதுல்லா...” என்று அலட்டாமல் கூறியவனிடம், “ஆஹ்... மிதுல்லா, நல்ல பேர். பாத்தியா ரெண்டு மூணு தடவை பாத்த உனக்கே அவளோட பேர் ஞாபகம் இருக்கு. அவ்வளவு சுலபமா அவளை மறக்க முடியுமா? எவ்ளோ அழகு அந்த பொண்ணு... ம்ம்... வெற்றி, அவளுக்கு உன்னை கல்யாணம் பண்ண கேட்டாபா ராஜி. அழகு, அறிவு, திறமை எல்லாம் இருக்கு அவகிட்ட. நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு டா அவ. அதுவும் உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்ற வெற்றி?” என்று மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்து வினவினார் கற்பகாம்பாள். செய்தித் தாளை மூடி மேஜையில் வைத்தவன், கற்பகாம்பாள் புறம் திரும்பி, “ம்ம்.. நல்ல அழகான பொண்ணு தான். நல்ல திறமையா நடிச்சா. ரொம்ப அறிவா பேசுனா தான். ஆனா, ரொம்ப அதிகமா பேசுவாளே... அதுவுமில்லாம அவ யாருமில்லாத அநாதை இல்லை. நீங்க சொல்றது எதையும் அப்படியே கேக்கவும் மாட்டா. உங்களை எதித்து கேள்வி கேப்பா... அவ இஷ்டத்துக்கு உங்களால இருக்க விட முடியுமா? முக்கியமா... உங்களுக்குத் தான் வாய் பேசாத முடியாத ஊமை பொண்ணு தானே மருமகளா வர பிடிக்கும்....” என்றவன் எழுந்து அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி உடை பாக்கெட்டில் கைகளை நுழைத்த படி வினவ, “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, “என்னடா குத்தி பேசுறியா?” என்று கற்பகாம்பாள் வெற்றியை முறைக்க, “இல்லையே நேரா தான் கேக்குறேன்.” என்றவன் பதில் தெளிவாக வந்து விழுந்தது."
Kamali Maduraiveeran (Author), Kamali Maduraiveeran (Narrator)
Audiobook
[Tamil] - தித்திப்புயல் நீயடா :Thithippuyal Neeyada: College Friendly Romance with Possessive Love
"சட்டென்று, அவள் உடலை தாவணியென மறைத்திருந்த ஆடையை அவன் கரம் உருவி எடுத்தது.. அர்ஜுனிடம் இத்தகைய செயலை எதிர்பார்க்காதவள் “அஜூ... என்ன பண்ற? டோன்ட் பிகேவ் லைக் திஸ், எனக்கு பிடிக்கலை?” என்று அழுத்தமாக அவன் முகம் பார்த்து கூறினாள். கீர்த்தியின் பேச்சில் அவளை மெல்ல விட்டு விலகியவன் கண்களோ அவள் மேனியை அணுஅணுவாக ரசனையாக துளைத்தது. அவளை பார்த்தபடியே “எஸ், எனக்கும் தான்... எனக்கும் தான் பிடிக்கலை. இந்த கல்யாணம் பிடிக்கலை... உன்னை பிடிக்கலை... என்ன பண்ணலாம்?” என்றவன் அவன் இடுப்பில் கைகுற்றி, சற்றே அவள் முன் குனிந்து, ”கல்யாணத்தை நிறுதீடலாமா?” என்று ஆழ்ந்த குரலில் வினவவும்,, அதிர்ந்த விழிகளுடன் “அஜூ...” என்றவள் விழிக்க, “எஸ், வேற வழியில்லை. பாரு, இந்த டிரெஸ்ல நீ எவ்ளோ அழகா இருக்க! எந்த ஆம்பளைக்குமே உன்னை இப்படி பாத்தா என்ன தோணனும்?” என்றவன் விழிகள் பயணித்த இடங்கள் பெண்ணவளை உடல் கூச செய்தது. அர்ஜுன் பார்வை எப்போதும் கண்ணியமானது. அதுவும் அவள் மேல் மிக கண்ணியமாக இருக்கும். அவன் அருகாமை கீர்த்திக்கு எப்போதும் ஒரு பாதுகாப்பு உணர்வை மட்டுமே கொடுக்கும். பயஉணர்வை அல்ல. இப்போது அவன் பார்வை, அவன் அவளிடம் நடந்து கொண்டிருக்கும் விதம் அணைத்தும் அவளுக்கு அவன் மேல் அச்சத்தைக் கொடுத்தது. இத்தனை வருட நட்பில், அர்ஜுன் அவளை பயமுறுத்தக் கூட இப்படி பேசியதில்லை. “அஜூ... ஸ்டாப் திஸ். ஸ்டுபிட் மாதிரி பேசாத, திஸ் இஸ் நாட் யூ. நான் போகணும்” என்றவள் நகரப்போக, தன்னிரு கைகளால் அவளுக்கு அணைகட்டியவன், அவளை நெருங்கி நின்றான்."
Kamali Maduraiveeran (Author), Kamali Maduraiveeran (Narrator)
Audiobook
[Tamil] - நானின்று நானில்லை : Naanindru Naanillai: An Arrange Marriage Romance
"நாளை திருமணம் என்ற ரீதியில் வீடெங்கும் உறவுகள் நிறைந்திருக்க, ஆதிராவைச் சுற்றி தோழிகள் மற்றும் உறவுப் பெண்களின் கூட்டம். நாளை இதே நேரம் வேறொரு ஆடவன் கைகளில் இருந்து கட்டப்பட்ட மாங்கல்யம் அவள் கழுத்தை நிறைத்து இருக்கும். மனம் தான் தன்னவனை விடுத்து மாற்றானை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எப்படி என்னால் மேகனை மறந்து மற்றொருவனை மணக்க முடியும்? ஒருவேளை ஊரின் முக்கால் வாசி பெண்கள் கூறுவதைப்போல் திருமணம் ஆனதும் அனைத்தும் மாறிவிடுமா? இல்லை எப்படி சாத்தியம்...எப்படி என்னால் முடியும்? என்று உள்மனம் கேள்வியெழுப்ப, முடியும் உன் தந்தைக்காக... அவரின் பாசத்திற்காக... முடிந்துதான் ஆக வேண்டும். என்று அவளே விடையும் கூறிக் கொண்டாள் ஆதிரை ."
Kamali Maduraiveeran (Author), Kamali Maduraiveeran (Narrator)
Audiobook
[Tamil] - உடன்பிறப்பு: Udanpirappu-Sirukathai
"உடன்பிறப்பு"
Kamali Maduraiveeran (Author), Kamali Maduraiveeran (Narrator)
Audiobook
[Tamil] - நீங்காத நினைவிதுவோ: Neengatha Ninaivithuvo
"தன் ஊனோடும், உணர்வுகளோடும் கலந்து, தன் உதிரத்தை பரிசளித்து, அளவில்லா காதலை அள்ளித்தெளித்து, கைக்கெட்டாத தூரம் காற்றோடு கலந்தாலும், என்றும் உன் நினைவுகள் தரும் சுகமான வலிகளுடனும் அழியாக் காதலுடனும், நான்... இக்கதையின் நாயகி."
Kamali Maduraiveeran (Author), Kamali Maduraiveeran (Narrator)
Audiobook
[Tamil] - வஞ்சித்தாய் வஞ்சிக்கொடியே: Vanjithaai Vanjikkodiye
"சிறுவயது முதலே நாயகனை மனதில் வைத்து காதலில் உருகும் நம் நாயகிகள் இதழினி மற்றும் தன்மதி. தன் குரல் மூலம் அறிமுகமாகிய பெண்களை விரும்பும் நாயகர்கள் ஜீவன் மற்றும் சஞ்சய். தந்தையின் வற்புறுத்தலின் பேரில் திருமண வாழ்வில் இணையும் ஜீவன்-இதழினி மற்றும் சஞ்சய்-தன்மதி. இரு நாயகர்களும் தங்கள் காதலை தங்கள் மனம் முடித்த பெண்களிடம் உணர்வார்களா? அல்லது அவர்கள் காதலித்த வஞ்சியின் குரலை மனதில் நிறுத்தி கரம் பிடித்த பெண்களை தண்டிப்பார்களா? வஞ்சனையில் சிக்கிய நாயகர்களை அதிலிருந்து மீட்பார்களா வஞ்சிக்கொடிகள்?"
Kamali Maduraiveeran (Author), Kamali Maduraiveeran (Narrator)
Audiobook
[Tamil] - மகரந்தம் தாங்கும் மலரவள்: Magarantham Thangum Malaraval (Tamil Edition)
"தந்தையின் உழைப்பில் வாழ விரும்பாமல் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான கால கட்டத்திலும், தன்னுடைய முடிவையே பிரதானமாகக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பவன் நளன். தனக்கு எது வேண்டும் என்று முடிவெடுக்கத் தெரியாத பேதையவள் நேத்ரா. காலத்தின் போக்கில் இணைந்த இவர்களது காதல் மூன்றாம் நபரின் தலையீட்டால் என்னவானது? தெரிந்து கொள்ளப் படியுங்கள் மகரந்தம் தாங்கும் மலரவள்! "
Kamali Maduraiveeran (Author), Kamali Maduraiveeran (Narrator)
Audiobook
[Tamil] - நாணலே நங்கையானால்: Naanale Nangaiyaanaal?
"பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுள் ஒன்றை வைத்து, அழகான காதல் கதையின் மூலம் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஊட்டும் வகையில், பலவித திடீர் திருப்பங்களுடனும் சுவாரஸ்யங்களுடனும் கதையை எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன். "
Kamali Maduraiveeran (Author), Kamali Maduraiveeran (Narrator)
Audiobook
[Tamil] - நிலவே நின்னை சரண் அடைந்தேன்: Nilave Ninnai Saran Adainthen
"காதலில் யார் யாரிடம் சரணடைந்தார்கள் என்பது முக்கியமல்ல, இக்கதையின் கதாப்பாத்திரங்களான இளநிலா மற்றும் சரவணன் இருவரில், இளநிலா சரவணனிடம் சரணடைந்தாளா அல்லது சரவணன் இளநிலாவிடம் சரணடைந்தானா? இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள காதலில் ஆழ்மனங்கள் ஒன்றுபட்டு சரணடைந்தனர். ஆழ்மனங்களால் ஒன்றிணைந்த காதலை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. "
Kamali Maduraiveeran (Author), Kamali Maduraiveeran (Narrator)
Audiobook
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP.
Terms & Conditions | Privacy Policy | Disclaimer